
“தொடரும்”
திரைப்பட விமர்சனம்…
நடித்தவர்கள்:- மோகன்லால், ஷோபனா, மணியன் பிள்ளா,
பிரகாஷ் வர்மா, பினு பப்பு, பர்ஹான் ஃபாசில், சாஜிஅடிமல்லி, தாமஸ்மாத்யூ , அமிர்தவர்ஷினி, மற்றும் பலர் நடித்துள்ளனர்…
டைரக்டர் :-
தருண் மூர்த்தி.
மியூசிக் :- ஜேக்ஸ் பிஜாய்.
படத்தொகுப்பு:-சபீக்.வி.பி,நிஷாத், யூசுப்,கே.ஆர்.சுனில்
ஒளிப்பதிவு :- ஷாஜி குமார்.
தயாரிப்பாளர்கள்:- ராஜபுத்திரா விஸ்வல். மிடியா – எம். ரஞ்சித்.
(ஸ்டண்ட்) சினிமாவில் சண்டை போடும் நடிகராக பணியாற்றும் மோகன்லால்,
ஒரு விபத்தில் அந்த வேலையை விட்டுட்டு மதுரை தேனியில், ஒரு வாடகை கார் எடுத்து ஓட்டுநராக, பணிபுரிந்து.
தனது குடும்பத்தோடு வாழ்ந்து வருகிறார்.
மனைவி, ஒரு மகள், ஒரு மகன் என்ற அளவான குடும்பம்,
அது தான் தனது உலகம் என்று வாழும் மோகன்லாலுக்கு
அவருக்கு பழைய அம்பாசிட்ட கார் மீதும் அளவில்லா பெரும் ஆசை.
அன்றைய தினம், மோகன் லால் ஊரில் இல்லாத போது, அவரது காரை
போலீஸ்காரர்கள் காரை எடுத்துக் கொண்டு பறிமுதல்
செய்து காவல் நிலையத்தில் வைத்துவிட
கின்றனர்.
ஊரில் இருந்து திரும்பி வந்து பார்த்தப் போது காரை காணவில்லை.
அந்த காரை மீட்க போராடுகிறார். சப்-இன்ஸ்பெக்டர்
காரை தரமுடியாது. என்று முரண்டு
பிடிக்க, போலீஸ் இன்ஸ்பெக்டர் அவருக்கு கருணை காட்டி காரை திரும்ப தந்து விடுகிறார்.
அதே சமயம், அந்த காருடன் மோகன்லால், இன்ஸ்பெக்டர்
இரண்டு காவலர்களுடன் பயணிக்க சூழ்நிலை ஏற்படுகிறது.
அந்த இரவு பயணம் செய்த போது அந்த மோகன்லால் வாழ்க்கையில்
மிகப்பெரிய பாதிப்பை
ஏற்படுத்தும் விதத்தில் பயணமாக அமைகிறது.
அது என்ன? என்பதை யூகிக்க கூடிய விதத்தில் கதையோடு பார்வையாளர்களை
பயணிக்க வைக்க
சொல்வதே கதைக்களம்
“தொடரும்”
பென்ஸ் சண்முகம் என்ற கதாபாத்திரத்தில்
பொறுப்பான குடும்ப தலைவராகவும் .
நடித்திருக்கும்
மோகன்லால், அவர் பிள்ளைகளிடம் எதார்த்தமாக பழகுவது, சின்ன சின்ன
குறும்புகள் மூலம் மனைவியிடம் தனது காதலை சொல்லும் விதத்தில் நடிப்பில்
ரசிக்க வைக்கிறார்.
தனக்கு ஏற்பட்ட பிரச்சனைக்கு பழி தீர்ப்பதற்காகவே
ஆக்ரோஷமாக களம் இறங்கும் போது, செம்மையாக மிரட்டி சண்டைக்காட்சி
களில் சிறந்த நடிகராக கவனம் பெற்று படத்தின் மிக பெரிய பங்கு.
வகிக்கிறார்.
மோகன்லாலின் மனைவியாக நடித்திருக்கும் ஷோபனா, தன்
அனுபவம் மிக்க நடிப்பின் மூலம்
கதாபாத்திரத்திற்கு ஏற்பே பலத்தை தந்து நடத்திருக்கிறார்.
போலீஸ்
இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் பிரகாஷ் வர்மா, சிரித்துக்கொண்டே
வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். போலீஸ் எஸ்.ஐ-யாக
நடித்திருக்கும் பினு பப்புவின் நடிப்பிலும்
குறை எதுவும் இல்லை. காவலராக நடித்திருக்கும்
பர்ஹான் பாசில், தாமஸ் மேத்தீவ், அமிர்தவர்ஷினி,
ஷாஜி அடிமல்லி என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்களும்
அளவான நடிப்பு மூலம் திரைக்கதை ஓட்டத்திற்கு உயிரூட்டியிருக்
கிறார்கள்.
சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் பாரதிராஜா, இளவரசு எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.
ஒளிப்பதிவாளர் ஷாஜி குமாரின் கேமரா, மலை,வனம்,
மழை என இயற்கையோடு பின்னி பிணைந்து
ள்ளது.
அவைகளையும் கதையின் மாந்தர்களாக பயணிக்க வைக்கிறது.
இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாயின் இசையில்
கதைக்களத்தை விவரிக்கும் பாடல்களும்,
கதைக்களத்தின் விறுவிறுப்பை
ஏற்படுத்துகிறது.
பின்னணி இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலம் தந்திருக்கிறது.
சண்டைக்காட்சி
களில் மோகன்லாலின் அதிகப்படுத்தி
செம்மையாக
அளவான ஓலியை பயன்படுத்தி ரசிகர்களை ரசிக்க வைத்திருக்கிறார்.
காட்சிகளை கதையோடு தொடர்புபடுத்தி படத்தொகுப்பாளர்கள் சபீக்.வி.பி மற்றும் நிஷாத் யூசுப்.
கே.ஆர்.சுனில் மற்றும்
இயக்குனர் தருண் மூர்த்தி எழுத்தில், மையப்படுத்தி
பார்வையாளர்களை கதையுடன் பயணிக்க செய்துள்ளார்.
படத்தின் ஆரம்பத்தில் காட்டப்படும் நிலச்சரிவு, கார் மீது
மோகன்லாலுக்கு இருக்கும் பிணைப்பு ஆகியவற்றின் மூலம் முதல் பாதி கதையை
சுவாரஸ்யமாக நகர்த்திச் செல்லும் இயக்குநர் தருண்
மூர்த்தி, இரண்டாவது பாதியில் பார்வையாளர்களின் யூகத்தின்படி
திரைக்கதையை அமைத்து வழக்கமான பழிவாங்கும் திரைக்கதையில் மிக
எதிர்பார்ப்பை சுவாரஸ்யத்துடன் சொல்லியிருக்கிறார்.
மோகன்லாலை எதார்த்தமான குடும்பத் தலைவராகவும், செம மாஸான ஆக்ஷன் ஹீரோவாகவும் காட்டி ரசிகர்களை
குஷிப்படுத்திய இயக்குநர் தருண் மூர்த்தி, இரண்டாம் பாதியில் வரும்
சண்டைக்காட்சியில்
சமூகப் பிரச்சனையை மேலே சொல்ல மோகன்லால்
போன்ற முன்னணி நடிகர்களுடன் இயக்குநர் சொல்ல வந்த விஷயம் மக்கள்
மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி
இருக்கிறது.
“தொடரும்”
படம் பார்த்தத்தில், “தொடரும்” ஆவேசம் அவரின் உத்வேகம் இரண்டும் வெற்றியை தந்துள்ளார்.