ரத்னம்திரை விமர்சனம்!!
ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் கார்த்திகேயன் சந்தானம் தயாரித்து,கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கம் – ஹரிஇயக்கி விஷால் நடித்து வெளியா இருக்கும் படம் ரத்னம்!
விஷால், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, யோகிபாபு மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் பல நடித்துள்ளனர் !
இசை – தேவி ஸ்ரீ பிரசாத்!
ஒளிப்பதிவு எம் சுகுமார்!
ஸ்டண்ட் – கனல் கண்ணன், பீட்டர் ஹெயின், திலீப் சுப்பராயன், விக்கி!
கலை பி வி பாலாஜி!
எடிட்டர் – டி எஸ் ஜெய் !
சிறுவயதிலேயே தாய் தந்தையை இழந்த நாயகன் விஷால் !
சமுத்திரகனி அரவணைப்பில் வளர்கிறார். வேலூரில் எம்.எல்.ஏ. மற்றும் தாதாவாக இருக்கும் சமுத்திரகனி சொல்லும் வேலைகளை எல்லாம் விஷால் செய்து முடிக்கிறார்!
இந்நிலையில் வேலூருக்கு தேர்வு எழுத வரும் பிரியா பவானி சங்கரை பார்த்தவுடன் அவர் பின்னாலே செல்கிறார்!
தேர்வு எழுதும் நேரத்தில் பிரியா பவானி சங்கரை ஒரு கும்பல் தாக்க வருகிறது!
அந்த கும்பலிடம் இருந்து அவரை விஷால் காப்பாற்றுகிறார். தொடர்ந்து பிரியா பவானி சங்கருக்கு அந்த கும்பல் மூலம் பிரச்சனை வருகிறது!
இறுதியில் அந்த மர்ம கும்பல் யார்? பிரியா பவானி சங்கரை கொலை செய்ய துரத்த காரணம் என்ன? பிரியா பவானி சங்கரை விஷால் காப்பாற்றுவதற்கு காரணம் என்ன விஷாலுக்கும் பிரியாமணிக்கும் என்ன தொடர்பு என பல முடிச்சுகளை விறுவிறுப்பான திரைக்கதையில் சொல்லி இருக்கும் படம் ரத்தனம் !
படத்தின் நாயகனாக நடித்திருக்கும் விஷால், சென்டிமென்ட், ஆக்ஷன், பாசம் என நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார். பாராட்டுக்கள் !
ஸ்டண்ட் கனல் கண்ணன், பீட்டர் ஹெயின், திலீப் சுப்பராயன், விக்கி இவர்கள் நிகராக ஸ்டண்ட் செய்திருப்பது சிறப்பு விஷால்க்கு பாராட்டுக்கள் குறிப்பாக சிங்கிள் ஷாட் ஆக்க்ஷன் காட்சிகள் அருமை!
பிரியா பவானி சங்கர் கதாபாத்திரம் அருமை , கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்து இருக்கிறார், விஷால் மீது அக்கறை காட்டும் இடத்தில் கவனிக்க வைத்து இருக்கிறார்!
சமுத்திரகனி . விஷாலுக்காக எடுக்கும் முயற்சிகள் ரசிக்க வைக்கிறது.இவர்களின் கூட்டணி படத்திற்கு பெரிய பலம் !
சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதிந்து இருக்கிறார் கவுதம் வாசுதேவ் மேனன். !
முரளி சர்மா வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்.!
ஹரிஷ் பெரடி, முத்துகுமார் பங்களிப்பு சிறப்பு !
மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு இவர்கள் கூட்டணி சிரிக்க வைத்து இருக்கிறார்கள்.
கதை, திரைக்கதை, வசனம் இயக்கம் அனைத்து இடத்திலும் ஸ்கோர் பண்ணியிருக்கிறார்- இயக்குனர் ஹரி பாராட்டுக்கள்
தேவி ஸ்ரீ பிரசாத் இசை பாடல்கள் அனைத்தும் சிறப்பு
பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் பாராட்டுக்கள்
சுகுமாரின் ஒளிப்பதிவு ஆக்க்ஷன் காட்சிகளை ஒளிப்பதிவு அதிர வைத்துவிட்டது
டி எஸ் ஜெய் எடிட்டர் அருமை
இ பி வி பாலாஜி கலை படத்துக்கு தேவையான அளவு உள்ளது
மொத்தத்தில்
*இந்த “ரத்னம்” தாயின்பாசத்திற்கு ஜொலிக்கும் ரத்தினம்*
ந
ட
ஸ்டண்ட் – கனல் கண்ணன், பீட்டர் ஹெயின், திலீப்
கலை இயக்குனர் – பி வி பாலாஜி
<