
தேவகுமார் இயக்கத்தில் ஆடுகளம் நரேன் நடித்து வெளிவந்த திரைப்படம் “இந்த கிரைம் தப்பில்லை”.
இத் திரைப்படத்தில் பாண்டி கமல், மேக்னா ஏலன், வெங்கட் ராவ், கிரேசி கோபால் உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர்.
செல் போன் கடை ஒன்றில் வேலை பார்க்கிறார். மேக்னா அப்போது அங்கு வரும் 3 பேரை தன் காதலிப்பது போல் நடித்து தன் பின்னால் சுற்ற வைக்கிறார்.
அதே சமயத்தில் ஒய்வு பெற்ற ராணுவ வீரரான ஆடுகளம் நரேன் சைலண்டாக ஆப்ரேஷன் ஒன்றிற்கு ப்ளான் செய்து வருகிறார். இந்த ஆப்ரேஷனை பாண்டி கமலை வைத்து நடத்த திட்டம் தீட்டுகிறார்.
மேக்னா எதற்காக அந்த இளைஞர்களை தன் பின்னால் சுற்ற வைக்க வேண்டும்.?? ஆடுகளம் நரேன் யாரை டார்கெட் செய்கிறார்.?? இதுதான் படத்தின் கதை.
பெண்களை அவர்களது உரிமை இல்லாமல் பாலியல் துன்புறுத்தல் செய்து அவர்களை கொலை செய்யும் காமவெறி பிடித்த மிருகங்களுக்கு தண்டனை நாம் கொடுத்தாலும் தப்பில்லை என்ற கோணத்தில் கதை நகர்கிறது.
மேக்னாவின் சண்டைக் காட்சிகள் அப்பட்டமான செயற்கைத் தனமாகவே உள்ளது.
படத்தில் ஒரு தெளிவான நகர்வு இல்லை இதில் பிரபாகரன், அம்பேத்கர் போன்ற தலைவர்களின் புகைப்படங்கள் அவ்வபோது காட்சியில் காட்டபடுவது ஏன் என்று புரியவில்லை.
அது மட்டுமின்றி வில்லன் வீட்டில் தமிழக முதல்வரின் காலண்டர் காட்சிபடுத்தப்பட்டது ஏன் என்று தெரியவில்லை.
படம் ஓடிக் கொண்டிருக்கும் போது சம்மந்தமே இல்லாமல் சாதிய பாடலும் ஒன்று எட்டிப் பார்த்துச் செல்கிறது. எதற்காக யாருக்காக இந்த படங்களை இயக்குகிறார்கள் என்ற காரணம் தெரியவில்லை.
ஆடுகளம் நரேனின் நடிப்பு செயற்கைத் தனமாக தெரிந்தது. பாண்டி கமல் எப்போதும் வெறி பிடித்தவராகவே சுற்றித் திரிகிறார். பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண்ணின் அப்பாவையே அழைத்து வந்து கையில் பணம் கொடுத்து வழக்கை வாபஸ் பெற கூறுவதெல்லாம் என்ன மாதிரியான மன நிலையில் இந்த மாதிரியான காட்சிகளை அமைக்கிறார்கள் என்று தெரியவில்லை.
திடீர் திடீரென்று பின்னணி இசைக்கும் படத்திற்கும் சம்மந்தமே இல்லை.
ஒளிப்பதிவு படுமோசம், பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் அதிகரித்து வரும் இந்த காலகட்டத்தில் சொல்லப்பட வேண்டிய கதையை எப்படி சொல்ல வேண்டும் என்று தெரியாமல் சொல்லியிருக்கிறார் இயக்குனர்.
மொத்தத்தில்
இந்த கிரைம் தப்பில்லை படம்.அனைவரும் பார்க்க வேண்டிய படம்.*