
“ருசிக்கலாம் வாங்க” நிகழ்ச்சியில் ‘திருத்தலமும் திருவருளும்’
ருசிக்கலாம் வாங்க நிகழ்ச்சி மூலம் நேயர்களின் பேராதரவை பெற்ற திருமதி.யோகாம்பாள் சுந்தர் தற்போது கோவிலும், கோவில் சார்ந்த முக்கிய தகவல்களையும் அங்கு இறைவனுக்கு படைக்கப்படும் நெய்வேத்தியம் குறித்தும் திருத்தலமும் திருவருளும் என்ற நிகழ்ச்சியின் மூலமாக வழங்குகிறார்.
இதில் தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய கோவில்களில் நேரடியாக அதன் தொகுப்பாளர் மீனாட்சியுடன் பங்கேற்று பல அரிய தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.இந்த நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை தோறும் மதியம் 12.30 மணிக்கு “ருசிக்கலாம் வாங்க” நிகழ்ச்சியில் திருத்தலமும் திருவருளும் என்ற தலைப்பில் புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.