இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் அஷ்வின் குமார் லக்ஷ்மிகாந்தன் & அஞ்சு குரியன் நடிப்பில், Think Originals’ உடைய “வாடி
வாடி” வீடியோ பாடல், வெளியானது!!!

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் முதல் சுயாதீன ஆல்பம் பாடலான ‘வாடி வாடி’ பாடல் ஜூன் 29 அன்று வெளியிடப்பட்டது, இப்பாடல் அதன் அற்புதமான இசை மற்றும் அசத்தலான காட்சிகளுக்காக ரசிகர்களை கவர்ந்திழுத்திருக்கிறது. Think Originals’ தொடர்ந்து இசை பிரியர்களின் இதயம் அள்ளும் சுயாதீன ஆல்பம் பாடல்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் இப்பாடல் ரசிகர்களுக்கு விருந்தளிக்கிறது. ஜூன் 29ஆம் தேதி வெளியான ‘வாடி வாடி’ பாடல் வெளியானதில் இருந்தே ரசிகர்களிடம் பாடலுக்கான வரவேற்பு அமோகமாக உள்ளது. ஹாரிஸ் ஜெயராஜின் அற்புதமான இசைக்கோர்வை மற்றும் விவேகாவின் நவநாகரீக பாடல் வரிகள் ரசிகர்களை ஈர்க்கும் அம்சமாக அமைந்துள்ளன. அஸ்வின் குமார் லக்ஷ்மிகாந்தன் மற்றும் அஞ்சு குரியன் ஆகியோரின் அழகான கெமிஸ்ட்ரி மனதை கொள்ளை கொள்கிறது. ஒளிப்பதிவு நாயகன் ஆர்.டி.ராஜசேகர் தனது அற்புதமான ஒளிப்பதிவின் மூலம் பாடலுக்கு வலிமை சேர்த்துள்ளார். தமிழ் ஆல்பங்களிலேயே மிக பிரம்மாண்டமாக படமாக்கப்பட்ட முதல் தமிழ் வீடியோ பாடல் ‘வாடி வாடி’ என்பது குறிப்பிடத்தக்கது.



வாடி வாடி’ பாடலை கார்த்திக் அரசகுமார் இயக்கியுள்ளார். ஒளிப்பதிவை ஆர்.டி.ராஜசேகர் ISC யும், படத்தொகுப்பை ஆண்டனியும் செய்துள்ளனர். இந்த பாடலுக்கு சாண்டி நடனம் அமைத்துள்ளார், பாடல் வரிகளை விவேகா எழுதியுள்ளார். மற்ற தொழில்நுட்ப வல்லுநர்கள் DRK கிரண் (கலை), போற்றி பிரவின் (காஸ்ட்யூம் டிசைனர்), ஷங்கர், பாண்டி, கௌதம், இளன், தீபக், தாஜ், விஜய், நிதின், ராஜா, கிமி, சாம், தேவ், முகமது, விக்னேஷ் (இணை இயக்கம்), காமராஜ் (நிர்வாகத் தயாரிப்பாளர்), சரஸ்வதி (நிர்வாக மேலாளர்), திலீப் போர்கர் & ஆகாஷ் போர்கர் (லைன் புரடியூசர்ஸ்) மற்றும் சுரேஷ் சந்திரா-ரேகா D’One (மக்கள் தொடர்பு).

