மாத்தி யோசி
ஜெயா டிவியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 7:00 மணி முதல் 9:00 மணி வரை ஒளிபரப்பாகும் ’காலை மலர்’ நிகழ்ச்சியில் இடம்பெறும் ஒரு பகுதி ‘மாத்தி யோசி’.
இன்றைய காலக்கட்டத்தில் நம் பலருக்கும் படித்த படிப்புக்கும், செய்யும் வேலைக்கும் தொடர்பிருப்பதில்லை. ஏதோ ஒன்றை படிக்கிறோம், அதற்கு தொடர்பே இல்லாத ஏதோ ஒரு அலுலகத்தில் வயிற்றுப் பிழைப்புக்காக வேலை பார்க்கிறோம். இதனால் பலருக்கும் தாங்கள் செய்யும் வேலையில் முழு திருப்தி இருப்பதில்லை.அப்படிப்பட்ட சிலர், வழக்கமான பாணியில் இருந்து மாற்றி யோசித்து, தாங்கள் விரும்பிய ஏதேனும் துறையில் மாற்று சிந்தனையுடன் கூடிய start up நிறுவனங்களை தொடங்கி அதில் வணிக ரீதியாக வெற்றியும் பெறுகின்றனர்.
அப்படிப்பட்ட இளம் தொழில் முனைவோர் தங்கள் வெற்றிக் கதையை நேயர்களுடன் பகிர்ந்துக்கொள்ளும் நிகழ்ச்சியே ‘மாத்தி யோசி’. இதன் மூலம், புதிய கருத்துருவாக்கத்துடன் கூடிய புதிய தொழில் தொடங்கும் ஊக்கமும், உத்வேகமும் பலருக்கும் ஏற்பட வேண்டுமென்பதே நிகழ்ச்சியின் நோக்கம் என நிகழ்ச்சிக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
வரும் வாரங்களில், ஆட்டோ ஓட்டி அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஆதரவற்ற குழந்தைகள் பலரை வளர்த்துவரும் பெண்மணியான ராஜி, பைக் ரேஸில் முத்திரைபதித்து வரும் திலிப் ரோஜர் உள்ளிட்டவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளனர்.