
சென்னை மேடவாக்கத்தில் உள்ள திருவள்ளுவர் தமிழ்வழி பள்ளியில் நேற்று மாலை நடந்த பள்ளியின் 33 ஆம் ஆண்டு விழாவில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினரான தி.வேல்முருகன் அவர்கள், இயக்குனர் மற்றும் நடிகருமான சமுத்திரகனி அவர்கள், அற்புதம்மாள் அவர்கள் மற்றும் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் இப்பள்ளி குழந்தைகள் சிலம்பம், நடனம், பறை இசை போன்ற கலை நிகழ்ச்சிகளை செய்து மகிழ்வித்தனர்.

இவ்விழாவில் பேசிய இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் இறை.பொற்கொடி அவர்கள் இது போன்ற தமிழ்வழிக் கல்வி பள்ளிகள் தொடர்ந்து மோசமான நிலையை நோக்கி சென்றுக் கொண்டிருப்பதாகவும் மாணவ சேர்க்கைகள் குறைந்து கொண்டே வருவதாகவும் வருத்தம் தெரிவித்தார்.
மேலும் சிறப்புரையாற்றிய சட்டமன்ற உறுப்பினர் தி.வேல்முருகன் அவர்கள் இது போன்ற தமிழ்வழிக் கல்வி பள்ளிகளுக்கு அரசு பள்ளிகளுக்கு கிடைக்கும் சலுகைகள் கிடைக்க வேண்டுமென்று தமிழக அரசிடம் வேண்டுகோள் விடுத்தார். மேலும் தன் அடுத்த மாத சம்பளம் ரூபாய் ஒரு லட்சத்தை நன்கொடையாக வழங்குவேன் என்று உறுதியளித்தார்.