இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் ’சாரி’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில் படம் வரும் 4 ஆம் தேதி வெளியாகிறது!

Share the post

இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் ’சாரி’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில் படம் வரும் 4 ஆம் தேதி வெளியாகிறது!

கிரி கிருஷ்ண கமல் இயக்கியுள்ள, இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படமான ’சாரி’ திரைப்படத்தில் சத்யா யது மற்றும் ஆராத்யா தேவி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதன் பிரம்மாண்டமான ப்ரீ ரிலீஸ் நிகழ்வு ஹைதராபாத்திரல் நடைபெற்றது. இந்தப் படத்தை ரவிசங்கர் வர்மா, RGV – AARVI புரொடக்ஷன்ஸ் எல்எல்பி பேனரின் கீழ் தயாரித்துள்ளார். ’சாரி’ திரைப்படம் இந்த மாதம் 4 ஆம் தேதி தெலுங்கு, இந்தி, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

இயக்குநர் கிரி கிருஷ்ண கமல் படம் பற்றி கூறியதாவது, “‘சாரி’ படத்திற்காக திறமையான புதிய குழு பணியாற்றியுள்ளது. ராம் கோபால் வர்மா எனக்கு படம் எப்படி உருவாக்குவது என்று ஒருபோதும் சொல்லிக் கொடுக்கவில்லை. இது இரண்டு முக்கிய கதாபாத்திரங்களுக்கு இடையிலான தீவிர கதைக்களத்தைக் கொண்டது. சத்யா யது மற்றும் ஆராத்யா தேவி படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சத்யா மற்றும் ஆராத்யாவின் கதாபாத்திரம் வழக்கமான படத்தில் வருவது போல இருக்காது. ஆர்ஜிவியுடன் பணிபுரிவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்” என்றார்.

இசையமைப்பாளர் சஷிப்ரீதம் கூறியதாவது, “’குலாபி’ படத்திலிருந்தே ராம் கோபால் வர்மாவுடன் எனக்கு நல்ல ரிலேஷன்ஷிப் இருக்கிறது. ’சாரி’ படத்திற்காக அவருடன் பணியாற்றுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ராம் கோபால் வர்மாவை அடிக்கடி சந்தித்து பேசுவேன். எனது அனைத்து பாடல்களையும் அவருக்கு அர்ப்பணிக்கிறேன். அவர் என்னை எப்போது அழைத்தாலும் படத்திற்கு இசையமைக்கத் தயாராக இருக்கிறேன். இந்தப் படத்தின் பாடல்கள் நிச்சயம் பார்வையாளர்களை ஈர்க்கும்” என்றார்

.

இயக்குநர் ராம் கோபால் வர்மா பேசியதாவது, “சமூக ஊடகங்களை அதிகமாகப் பயன்படுத்துவது வாழ்க்கையில் மோசமான சூழ்நிலைகளுக்கு வழிவகுக்கும் என்பதை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம் ’சாரி’. இந்தப் படத்திற்கான கதையை நான் எழுதியுள்ளேன். நான் எழுதிய ஸ்கிரிப்டை விட இயக்குநர் கிரி கிருஷ்ணா இந்தப் படத்தை மிகச் சிறப்பாக உருவாக்கியுள்ளார். அவர் என்னுடைய நீண்ட கால நண்பர். இந்தப் படம் பற்றி நான் அவருடன் விவாதித்தபோது, அவர் சொல்லிய கருத்துகளும் எனக்குப் பிடித்திருந்ததால் இந்தப் படத்தை இயக்கும் வாய்ப்பையும் அவருக்கு வழங்கினேன். ஒளிப்பதிவாளர் சபரி, இசையமைப்பாளர் சஷிப்ரீதம் மற்றும் எனது முழு அணியினரும் படத்தில் சிறப்பாக பணிபுரிந்துள்ளனர். ஒளிப்பதிவாளர் சபரி தனது காட்சியமைப்புகள் மூலம் படத்தின் மையக்கருவை சரியாக பிரதிபலித்துள்ளார். இசையமைப்பாளர் சஷிப்ரீதமும் இந்தப் படத்திற்கு சிறப்பான இசையைக் கொடுத்துள்ளார். சுபாஷ் படத்தில் மூன்று பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ளார். படக்குழுவினரின் பங்களிப்பு என்னை விட அதிகம் என்பது எனக்கு பெருமையான ஒன்று” என்றார்.

கதாநாயகி ஆராத்யா தேவி, “‘சாரி’ படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்த ராம் கோபால் வர்மாவுக்கு நன்றி. இந்தப் படம் என்னுடைய கனவு படம். இயக்குநர் கிரி கிருஷ்ண கமல் இந்தப் படத்தில் நடிக்க போதுமான சுதந்திரம் அளித்துள்ளார். இந்தப் படத்தில் நடித்ததன் மூலம் நிறைய கற்றுக் கொண்டேன். சத்யா யது சிறந்த நடிகர். அவருடன் பணியாற்றியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். படம் உங்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறோம். இந்த மாதம் 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் ‘சாரி’ படத்திற்கு நீங்கள் அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்றார்.

நடிகர் சத்யா யது, “’சாரி’ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. இங்கு வந்த அனைவருக்கும் நன்றி. இந்தப் படத்திற்காக ராம் கோபால் சாரிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தபோது நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். இந்தப் படத்தின் தீவிர கதைக்கருவும் எனது நடிப்பும் நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும். ஆராத்யா தேவி நடிப்பு சிறப்பாக இருந்தது. இந்தப் படத்தை கொடுத்த ராம் கோபால் வர்மாவுக்கு நான் நன்றி கூறுகிறேன். இந்த மாதம் 4 ஆம் தேதி வெளியாகும் ‘சாரி’ படத்தைப் பார்த்து ஆதரிக்குமாறு நான் உங்களை கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

நடிகர்கள்: சத்யா யாது, ஆராத்யா தேவி, சாஹில் சம்பவல், அப்பாஜி அம்பரீஷ், கல்பலதா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப குழு:

பேனர்: RGV -AARVI புரொடக்ஷன்ஸ் எல்எல்பி,
ஒளிப்பதிவு :சபரி,
இசை :சஷிப்ரீதம்,
தயாரிப்பாளர் :ரவிசங்கர் வர்மா,
இயக்குநர்: கிரிகிருஷ்ணா கமல்,
மக்கள் தொடர்பு: ராம்பாபு வர்மா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *