
‘குளோபல் ஸ்டார்’ ராம்சரண் & விக்ரம் ரெட்டியின் வி மெகா பிக்சர்ஸ் நிறுவனம் மற்றும் அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், நிகில் சித்தார்த்தா நடிப்பில், ராம் வம்சி கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ‘தி இந்தியா ஹவுஸ்’ படத்தின் தொடக்க விழா ஹம்பியில் பூஜையுடன் தொடங்கியது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது.

உலகளாவிய நட்சத்திர நடிகரான ராம் சரண் திரையரங்குகளுக்கு வருகை தரும் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்கும் வகையில் திரைப்படங்களை தயாரிக்க திட்டமிட்டு, திரைப்பட தயாரிப்பில் களமிறங்கி இருக்கிறார். வி மெகா பிச்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாராகும் இந்த திரைப்படத்தை, யு வி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு பங்குதாரரான விக்ரம் ரெட்டி – ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ , ‘கார்த்திகேயா 2’ ஆகிய வெற்றி பெற்ற திரைப்படங்களை தயாரித்த தயாரிப்பு நிறுவனமான அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார். இதில் அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் நிறுவனம் தற்போது ‘தி டெல்லி ஃபைல்ஸ்’ எனும் படத்தையும் தயாரித்து வருகிறது. இவர்களுடன் இளமையான மற்றும் திறமையான நட்சத்திர நடிகரான நிகில் சித்தார்த்தா இணைந்திருக்கிறார். இவர் ஏற்கனவே ‘கார்த்திகேயா 2’ படத்திற்காக தொலைநோக்கு தயாரிப்பாளர் என புகழப்படும் அபிஷேக் அகர்வாலுடன் பணியாற்றியிருக்கிறார். தற்போது உலக அளவில் அறியப்பட்ட.. . இந்தியாவை பெருமைப்படுத்திய ராம்சரணுடன் இணைந்திருக்கிறார்
.

‘தி இந்தியா ஹவுஸ்’ படத்தை ராம் வம்சி கிருஷ்ணா எழுதி, இயக்குகிறார். நிகில் சித்தார்த்தா கதாநாயகனாகவும், சாயீ மஞ்சரேக்கர் கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். அனுபம் கேர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
சர்வதேச தரத்துடன் தயாராகும் ‘தி இந்தியா ஹவுஸ்’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கியதை தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளனர். காதல் மற்றும் புரட்சியின் மூலத்தை ஆராயும் இந்த 1905 ஆண்டு காலகட்டத்திய படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஹம்பியில் உள்ள விருபாக்ஷா ஆலயத்தில் படக் குழுவினர் முன்னிலையில் பிரம்மாண்டமான முறையில் பூஜையுடன் தொடங்கியது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது.

புரட்சியின் உக்கிரமான உணர்வுடன் காதலையும் கலந்து தயாராகும் இந்த திரைப்படம் வழங்கும் புதிய சினிமா அனுபவத்தை கொண்டாட எங்களுடன் இணைந்திருங்கள்.
இந்த திரைப்படத்தில் அனுபவம் வாய்ந்த தொழில் நுட்ப வல்லுநர்கள் ஒன்றிணைந்து பணியாற்றுகிறார்கள். கேமரோன் பிரைசன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு கலை இயக்குநராகவும், தயாரிப்பு வடிவமைப்பாளராகவும் விஷால் அபானி பணியாற்றுகிறார்.
இந்த காவிய கதையின் கூடுதல் தகவல்களுக்காக ஆர்வத்துடன் காத்திருங்கள்.
நடிகர்கள் : நிகில் சித்தார்த்தா, சாயீ மஞ்சரேக்கர் அனுபம் கேர் மற்றும் பலர்.
தொழில்நுட்பக் குழு :
வழங்குபவர் : ராம் சரண்
தயாரிப்பாளர்கள் : அபிஷேக் அகர்வால் & விக்ரம் ரெட்டி
எழுத்து & இயக்கம் : ராம் வம்சி கிருஷ்ணா
தயாரிப்பு நிறுவனம் : அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் & வி மெகா பிக்சர்ஸ்
இணை தயாரிப்பு : மயங்க் சிங்கானியா
ஒளிப்பதிவு : கேமரோன் பிரைசன்
கலை இயக்கம் & தயாரிப்பு வடிவமைப்பு: விஷால் அபானி
ஆடை வடிவமைப்பு : ரஜினி
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெட்டிங் : ஃபர்ஸ்ட் ஷோ