ஷாம் நடிக்கும் ‘அஸ்திரம்’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி.
மார்ச்-21ஆம் தேதி உலகெங்கும் வெளியாகிறது.

பெஸ்ட் மூவிஸ் சார்பில் தன சண்முகமணி தயாரிப்பில் க்ரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவாகியுள்ள படம் ‘அஸ்திரம்’. ஷாம் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தை அறிமுக இயக்குநர் அரவிந்த் ராஜகோபால் இயக்கியுள்ளார். அறிமுக எழுத்தாளர் ஜெகன் கதை மற்றும் திரைக்கதை எழுதியுள்ளார். கதாநாயகியாக மாடலிங் துறையை சேர்ந்த நிரா நடிக்க முக்கிய வேடங்களில் நிழல்கள் ரவி, ஜீவா ரவி, அருள் டி.சங்கர், வெண்பா மற்றும் அறிமுக நடிகர் ரஞ்சித் DSM ஆகியோர் நடித்துள்ளார்கள்.

வரும் மார்ச்-21ஆம் தேதி இந்த படம் உலகமெங்கும் வெளியாக தயாராக இருக்கிறது. முன்னதாக ‘அஸ்திரம்’ படத்தின் சிறப்பு பத்திரிகையாளர்கள் காட்சி சமீபத்தில் நடைபெற்றது. படம் பார்த்த ஊடகம் & பத்திரிகையாளர்கள் அனைவரும் ‘அஸ்திரம்’ திரைப்படத்தை வெகுவாக பாராட்டி பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்துள்ளார்கள்.

ரேஞ்சர், ஜாக்சன் துரை 2 ஆகிய படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கல்யாண் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய இறுதிச்சுற்று, சூரரைப்போற்று படங்களில் துணை படத்தொகுப்பாளராக பணியாற்றிய பூபதி இந்த படத்தின் மூலம் படத்தொகுப்பாளராக அறிமுகம் ஆகிறார். கலை வடிவமைப்பு ராஜவேல் மற்றும் சண்டை பயிற்சியாளராக முகேஷ் பொறுப்பேற்றுள்ளார்.
வித்தியாசமான கதை, விறுவிறுப்பான திருப்பங்களுடன் திரைக்கதை, மிரட்டும் பின்னணி இசை என ரசிகர்களின் நேரத்திற்கும், ரசனைக்கும் தகுதியான படமாக இருக்கும் என மிகுந்த நம்பிக்கை தெரிவிக்கிறது அஸ்திரம் படக்குழு.

அஸ்திரம் திரைப்படத்தை வரும் மார்ச் 21ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் கர்நாடகத்தில் ஃபைவ்-ஸ்டார் நிறுவனம் வெளியிடுகிறது.