ஸ்ரீ அம்மன் மீடியாஸ் வழங்கும்
“அமைச்சர்”
ஸ்ரீ அம்மன் மீடியாஸ் தயாரிப்பில் திரைக்கு வர தயார் நிலையில் உள்ள புதிய திரைப்படம் “அமைச்சர்”.

கதைச்சுருக்கம் : கரை வேஷ்டி கட்டிய ஒரு அமைச்சரின் கறைபடாத ,கண்ணியமான காதல் கதை.

திரைப்படத்தை ஸ்ரீ அம்மன் கலை அறிவியல் கல்லூரி விஷ்வல் கம்யூனிகேஷன் மாணவர்களின் உருவாக்குதலில் தயாரித்து உள்ளார்கள்.இந்தப் படத்தில் கேமரா , வசனம், தொழில்நுட்ப உதவிகள் என்று அனைத்திலும் விஷ்வல் கம்யூனிகேஷன் மாணவர்கள் இப்படத்தின் தொழிற்நுட்ப கலைஞர்களூடன் இணைந்து உருவாக்கியுள்ளார்கள்.


இப்படத்தின் கதாநாயனாக ஜெய் ஆகாஷ் மற்றும் கதாநாயகியாக தேவிகா நடிக்கின்றனர் .இத்திரைப்படத்தில் சர்வதேச விளையாட்டு வீரர் சௌந்தரராஜன், காவல் துறையில் உயர்பதவியில் இருந்த S.D. ராஜன், A .P.சேகர் ,உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களான அருணாச்சலம், புஷ்பவதி, முன்னணி நடிகரான திரு.விஜயகுமார் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

இப்படத்தின் பாடல்களை மதன் கார்கி மற்றும் கபிலன் ஆகியோர் மிகத் தெளிவான பாடல் வரிகளை எழுதியுள்ளனர். இப்படத்திற்குதேனிசைத் தென்றல் தேவா இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்களை பதிவேற்றம் செய்யப்பட்ட யூ-டியூபில் 23 லட்சம் பேர் கண்டு களித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடதக்கது . மேலும் தமிழகத் திரை உலகின் முன்னணி நடிகரான திரு.விஜயகுமார் அவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.மூத்தோர் திட்டம் சமத்துவத் திட்டங்கள் போன்ற நற்பணிகள் செய்யும் கதாபாத்திரமாக அமைச்சர் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.


இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு குற்றாலம் , திருத்தணி , சென்னை அதன் சுற்றுப்புறங்களில் படமாக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்திற்கு தணிக்கைக்குழு ‘U’சான்றிதழ் வழங்கியுள்ளது. இத்திரைப்படம் இம்மாதம் ஏப்ரல் 29 அன்று தமிழகம் முழுவதும் திரையிடப்படுகிறது.



தொழிற்நுட்ப கலைஞர்கள் :
இயக்கம் – L.முத்துகுமாரசாமி
திரைக்கதை, வசனம் – T.ஜெயலஷ்மி
இசை – தேனிசை தென்றல் தேவா
ஒளிப்பதிவு – வே .இ ராஜா
பாடல்கள் – சினேகன், மதன் கார்க்கி
எடிட்டர் – ஆண்டனி, ரியாஸ்
நடனம் – ஸ்ரீதர், தினா
மக்கள் தொடர்பு – செல்வரகு