சின்னத்திரை இயக்குனர் சங்க நிர்வாகிகளைஅமைச்சர் அறிமுகப்படுத்தினார். !!

Share the post

சின்னத்திரை இயக்குனர் சங்க நிர்வாகிகளை
அமைச்சர் அறிமுகப்படுத்தினார்.


தமிழ்நாடு சின்னத்திரை இயக்குனர்கள் சங்கத்தின் சார்பில் 2024 – 2026 ஆம் ஆண்டுக்கான தேர்தலில் வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகளின் அறிமுக விழா ..
சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு மு பெ சாமிநாதன் அவர்கள் தலைமையில் நடந்தது ..
சங்கத்தின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் மங்கை அரிராஜன் வரவேற்று பேசினார் ..

தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி எஸ் முருகன் முன்னிலை வகித்தார் ..
சங்கத்தில் புதிதாக சேர்ந்த உறுப்பினர்களுக்கு சங்க அடையாள அட்டை மற்றும் தமிழ்நாடு அரசு வழங்கும் நல வாரியத்தின் மூலம் கிடைக்கும் நலவாரிய அட்டையையும் மாண்புமிகு செய்தித் துறை அமைச்சர் வழங்கி வாழ்த்தி பேசினார் ..
சங்கத்தின் துணை இணை இயக்குனர்களுக்கு புதிய சம்பள ஊதிய உயர்வு மேடையில் அறிவிக்கப்பட்டது ..
மேலும் இந்த புதிய ஊதிய உயர்வு வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் இனி சின்னத்திரை தயாரிப்பாளர்கள் இந்த புதிய ஊதிய உயர்வை கொடுக்க வேண்டும் என சங்கத்தின் தலைவர் மங்கை அரிராஜன் பேசினார் ..

மேலும் சங்கத்தில் உறுப்பினர்கள் அல்லாதவர்கள் இனி சின்னத்திரை சீரியல்களில் பணிபுரியக் கூடாது என்றும் சங்கத்தில் உறுப்பினராக உள்ள இயக்குனர்கள் மற்றும் உதவி துணை இணை இயக்குனர்கள் மட்டுமே பணிபுரிய வேண்டும் எனவும் தலைவர் மங்கை அரிராஜன் அறிவுறுத்தினார்.

. இனி சின்னத்திரை சீரியல்கள் தயாரித்து கொண்டிருக்கும் சின்னத்திரை தயாரிப்பாளர்கள் இந்த புதிய ஊதிய உயர்வை தர வேண்டும் எனவும் வேண்டுகோள் வைத்தார் …

மாண்புமிகு செய்தித் துறை அமைச்சர் அவர்கள் பேசுகையில் ..
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் 2016 ஆம் ஆண்டு திரைப்பட துறையினருக்கு வழங்குவது போல் சின்னத்திரை கலைஞர்களுக்கும் தமிழ்நாடு அரசு வழங்கும் விருதுகள் மற்றும் கலைமாமணி விருதுகளை வழங்க ஆணையிட்டு அரசாணை பிறப்பித்தார் …

நமது முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் இந்த சின்னத்திரையில் பங்கு பெற்றவர்..
ஆகவே திறமையான விருது பெரும் தகுதி உள்ள கலைஞர்களுக்கு இந்த விருதுகளை உடனடியாக கொடுக்க வேண்டும் என்பதற்காக உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதி அரசர் தலைமையில் ஒரு குழு அமைத்து விரைவாக இந்த விருதுகளை கொடுக்க வேண்டும் என்று ஆணையிட்டு உள்ளார் …

மேலும் பெரிய திரை மற்றும் சின்னத்திரை கலைஞர்கள் தமிழ்நாடு அரசு நல வாரியத்தில் உறுப்பினராக இணைந்து அதன் மூலம் கிடைக்கும் நலத்திட்டங்களை பெற வேண்டும் எனவும் அமைச்சர் பேசினார் ..

மேலும் சங்கத்தின் தலைவர் மங்கை அரிராஜன், அமைச்சர் அவர்களுக்கு டிவி பெட்டியில் ..
அமைச்சர் உருவம் இருப்பது போல் அழகான கலைநயமிக்க நினைவு பரிசை வழங்கினார் ..

சங்கம் இதுவரை வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது அதனால் தங்களது சங்கத்திற்கும் சின்னத்திரை கூட்டமைப்பிற்கும் அரசு கட்டிடம் கட்டி தர வேண்டும் என அமைச்சரிடம் தலைவர் மங்கை அரிராஜன் கோரிக்கை வைத்தார் .. இதை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும்.. ஏற்கனவே இந்த துறையை தனது தாய் வீடு போல் கருதும் மாண்புமிகு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரிடம் இதை தெரிவித்து ஆவணம் செய்வதாகவும் அமைச்சர் பேசினார்

.
.
கூட்டத்தில் பெப்சி தலைவர் ஆர் கே செல்வமணி.. தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தானு .. நடிகர் எஸ்வி சேகர். திரைப்பட இயக்குனர் சங்க செயலாளர் பேரரசு ..கில்டு தலைவர் ஜாகுவார் தங்கம் .. குட்டி பத்மினி, சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா,
இயக்குனர் சாய் ரமணி மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினரும், பி.ஆர். ஓ யூனியனின் தலைவருமான
விஜய முரளி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள் ..

இறுதியில் சங்கத்தின் பொருளாளர் அறந்தாங்கி சங்கர் நன்றி கூறினார் ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *