சட்டம் என் கையில்
திரைப்பட விமர்சனம்…!!
நடித்தவர்கள்:-
சதீஷ், ரித்விகா, பாவா செல்லதுரை, வித்யா பிரதீப், அஜய்ராஜ் பாவல் நவகீதன் மறைந்த ராம்தாஸ் மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் சட்டம் என் கையில்
சாச்சி இயக்கத்தில்
ஓளிப்பதிவில்
பிஜி முத்தையா .
மியூசிக்:-
எம்.எஸ்.ஜோன்ஸ்.
த்ரில்லர் படங்கள் என்றால் அதில் நிச்சயம் ஒரு பெரிய ட்விஸ்ட்
இருக்கும். இந்த ட்விஸ்டை ஒரு
இயக்குநர் சரியான நேரத்தில் ரசிகர்களை
ஏமாற்றாத வகையில் எப்படி பயன்படுத்துகிறார்
என்பதில் தான்
அந்த படத்தின் வெற்றியே இருக்கிறது.
ஒரு சில படங்களில் இயக்குநர் தன் இஷ்டத்திற்கு படத்தின்
க்ளைமேக்ஸில் சம்பந்தமே இல்லாமல் ஒரு ட்விஸ்டை வைத்து படத்தை முடிப்பதை
பார்த்திருக்கிறோம். சட்டம் என் கையில் படத்தை பொறுத்தவரை
கதாபாத்திரங்களைப் பற்றி எந்த விதமான அறிமுகமும் கொடுக்கப்படுவ
தில்லை. படம் சில நிமிடத்திலேயே கதை தொடங்கிவிடுகிறது.
ஒரு குற்றத்தை செய்யும் சதீஷ் அந்த குற்றத்தை மறைக்க
நினைக்கிறார். ஒரு கேரக்டரின் பிளாஷ்பேக் எதுவும் தெரியாமல்
அவன் செய்யும் தவறுக்கு ஒரு பார்வையாளராக
நம்மால் உடன்பட முடிவதில்லை.
மறுபக்கம் போலீஸாக
வரும் பாவெலும் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதால் இந்த கதையில் நான் யார்
பக்கம் நிற்க வேண்டும் என்பதே தெரியாமல்
குழப்பம் அடைகிறோம். அதை நாம் யோசித்து
முடிப்பதற்குள்
அடுத்தடுத்து காட்சிகள் நகர்கின்றன. அடுத்த காட்சியில் ஒரு பெண் கொலை செய்யப்படுகிறார். ஏழை
குழந்தைகளுக்கு இலவசமாக பாடம் சொல்லிக் கொடுப்பவர் என்பதைத்
தவிர்த்து அவரைப் பற்றியும் நமக்கு ஒன்றும் தெரிவதில்லை. இறந்த பெண்ணின்
பெற்றோர்கள் வந்து கதறி அழுகிறார்கள். எந்த எமோஷனும் இல்லாமல் நாம்
அமர்ந்திருக்கிறோம்.
எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெறுமனே கதையை பின்
தொடர்ந்தால் கதை கொஞ்சம் சுவாரஸ்யமாகிறது.
சதீஷ் தனது குற்றத்தை மறைக்க செய்யும் சில முயற்சிகள்
சுவாரஸ்யமாக
இருக்கிறது. சதீஷை மையமாக வைத்து பாவெல் மற்றும் அஜய் ராஜ் இடையில் நடக்கும்
அதிகார விளையாட்டுக்கள் நகைச்சுவையாக
வர்க் அவுட்
ஆகியிருக்கின்றன. திடீர் திருப்பங்கள் , விறுவிறுப்பான
இசையுடன் விசாரணைக் காட்சிகள் என செல்கிறது படம். படம் முடிவுக்கு
வருகிறது. இதற்கு பின் கதாபாத்திரங்களின் பின்னணிகள் விவரிக்கப்படுகின்றன.
யார் நல்லவன் யார் கெட்டவன் என்று ரிவீல் செய்கிறார்கள்.
கதாபாத்திரங்களின் பின்னணியை முன்பே சொல்லிவிட்டால்
கதையில் சுவாரஸ்யம் குறைந்துவிடும் என்பதால் இந்த
திரைக்கதை யுக்தியை கையாண்டிருக்கிறார் இயக்குநர் . படத்தின் பல்வேறு காட்சிகள்
மிக சுவாரஸ்யமான முறையில் காட்சியமைக்கப் பட்டிருந்தாலும் எந்த
கதாபாத்திரத்துடனும் தொடர்பு படுத்திக் கொள்ள முடியாதது படத்தின் பாசிட்டிவ்களையும்
மறைத்துவிடுகிறது. சுருக்கமாகவேனும்
கேரக்டர்களை ஏதாவது
ஒரு வகையில் தொடர்பு படுத்தி பார்க்க வைத்திருந்தால்
இப்படம் ஒரு நல்ல முயற்சி என்று பாராட்டுக்களைப் பெற்றிருக்கும்.
நகைச்சுவை டிராக்கை விட்டு விலகி இந்த மாதிரியான புதிய
முயற்சிகளை செய்யும் நடிகர் சதீஷூக்கு பாராட்டுக்கள். பாவெல்
நவகீதன் மற்றும் அஜய் ராஜ் இருவரின் நடிப்பு இந்த படத்தின் உயிரோட்டம் என்றே
சொல்லலாம்.
ஒளிப்பதிவாளர் பி.ஜி முத்தையா மிக சவாலான ஒரு
முயற்சியை சிறப்பாக கையாண்டிருக்கிறார்
என்றுதான் சொல்லவேண்டும்.
மத்தியப் பிரதேசத்தை காட்சிபடுத்திய விதமும் பனி சூழ்ந்த இரவை
காட்சிபடுத்தியிருக்கும்
விதமும் கதைக்கு ஏற்ற ஒரு சூழலை ஏற்படுத்தி தருகின்றன. குறிப்பிட்டு
சொல்லும் மற்றொரு அம்சம் என்றால் படத்தின் சவுன் டிசைனிங்.
கதாநாயகனான சதீஷ் இரவு நேரத்தில் டென்ஷனாக கார்
ஒட்டிச்செல்லும்போது குறுக்கே வந்த பைக்கில் மோதி ஆக்ஸிடென்ட்
ஆனதால் பைக்கில்
வந்தவர் இறக்க அந்த பாடியை தன் காரின் டிக்கியில் மறைத்து
காரை ஒட்டிச் செல்லும்மோது போலிஸ் மறிக்க
நிற்காமல் சதீஷ் கார் ஒட்டிச்செல்ல வழியில் போலிஸிடம்
மாட்டிக்கொள்கிறார்.
தன் காரின் டிக்கியில் உள்ள பாடி விஷயம் தெரிந்துவிடாதபடி யோசித்து நிற்க
கேஸில் போலிஸ்
பிடிக்க வாக்குவாதத்தில் கோபத்தில் சதீஷ் போலிஸை அடிக்க
காவல் நிலையத்துக்கு சதீஷை போலிஸ் அழைத்து
செல்கின்றனர். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே
சுவாராஸ்யமான சட்டம் என் கையில் படத்தின் திரைக்கதை.சதீஷ் கதையின் நாயகனாக கொடுத்த கேரக்டரை
சிறப்பாக செய்துள்ளார். அஜய்ராஜ் பாவல் நவகீதன் இருவரும் சிறப்பாக
நடித்துள்ளார்கள்.மைம் கோபி நடிப்பும் அருமை. மறைந்த ராம்தாஸ் நடிப்பும் அருமை.
ரித்விகாவின் நடிப்பும் அருமை. பாவா செல்லதுரை, வெண்பா என இதில்
நடித்திருக்கும் அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர்.
எம் .எஸ் ஜோன்ஸ்
இசையில் பாடலும் பிண்ணனி இசையும் ரசிக்கவைக்கிறது. பி.ஜி முத்தையாவின்
ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம்.இயக்குநர் சாச்சியின் கிரைம் திரில்வர்
கதையை எல்லோரும்
ரசிக்கும்படி சுவாராஸ்யமாக சொல்லியதற்கு பாராட்டுக்கள்.