“தி வாரியர்” திரைப்படத்தின் இந்தி டப்பிங் உரிமை மிகப்பெரும் விலைக்கு விற்பனையாகி பாலிவுட்டில் சாதனை புரிந்திருக்கிறது !

இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் ராம் பொத்தினேனி நடிக்கும் “தி வாரியர்” திரைப்படம் பலவிதமான காரணங்களுக்காக மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களுல் ஒன்றாக இருக்கிறது. தெலுங்கு திரையுலகின் முன்னணி இளம் நடிகரான ராம் பொத்தினேனி முதன்முறையாக தமிழின் பிரபல இயக்குனருடன் இணைந்துள்ளார், மேலும் இரு மொழிகளில் உருவாகும் இந்த படம், கோலிவுட்டில் அவருக்கு சிறப்பான அறிமுகத்தை தரவுள்ளது.
தற்போது, இப்படத்தின் இந்தி டப்பிங் உரிமை ரூ.16 கோடிக்கு விற்றுத் தீர்ந்துள்ளது என்கிற தகவல் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. ஆம், நீங்கள் சரியாகத்தான் படித்தீர்கள், இது 16 கோடி ரூபாய் தான், இது ராம் பொதினேனி திரை வாழ்வில் ஒரு உச்சமான சாதனை.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டிலை சமீபத்தில் தயாரிப்பாளர்கள் வெளியிட்டனர். அந்த போஸ்டரில் போலீஸ் அதிகாரியாக தோற்றமளிக்கும் ராம் பொதினேனி தனது போலீஸ் குழுவுடன் ஒரு முக்கியமான மிஷனுக்கு திட்டமிடுகிறார். தி வாரியர் திரைப்படம் பார்வையாளர்களுக்கு ஒரு அதிரடி விருந்தாக இருக்கும் என்று திரை வட்டாரங்கள் கூறுகின்றன.
இயக்குநர் லிங்குசாமி தனது ஆக்ஷன் எண்டர்டெயினர் படங்களுக்காக பெயர் பெற்றவர் என்பதாலும், நடிகர் ராம் சிறந்த படங்களை கொடுப்பதில் அர்ப்பணிப்புடன் இருப்பவர் என்பதாலும், இந்த போஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படத்தில் ஒரு பெரும் நட்சத்திர பட்டாளம் இணைந்து நடிக்கிறது. கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாகவும், அக்ஷரா கவுடா ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும், ஆதி பினிசெட்டி வில்லனாகவும் நடிக்கின்றனர்.
Srinivasaa Silver Screen பேனர் சார்பில் ஸ்ரீநிவாசா சித்தூரி பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கும் தி வாரியர் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். பவன்குமார் இப்படத்தை வழங்கவுள்ளார். சீடிமார் படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து Srinivasaa Silver Screen தி வாரியர் படமும் மிகப்பெரிய ஹிட்டாகும் என நம்புகிறது. இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியுள்ளது.