அடுத்தடுத்த படங்களுடன் ஓடிக் கொண்டே இருக்கும் நாயகி!

@PRO_Priya @spp_media
நடிகை சாய் பிரியங்கா ரூத்
கேங்க் ஆஃப் மெட்ராஸ் படத்தில் அறிமுமுகமாகி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர் சாய் ப்ரியங்கா ரூத். ஜீ தமிழில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா நாடகத்தில் நித்யா ரோலில் நடித்து பலரின் கவனத்தைக் கவர்ந்தார். நடனத்திலும் மிகுந்த ஆர்வம் கொண்ட சாய் பிரியங்கா, மெட்ரோ, எனக்கு வாய்த அடிமைகள் போன்ற படங்களில் நடித்தார்.

மேலு பயமறியா பிரம்மை என்ற படத்தில் நடித்துள்ளார் அது விரைவில் திரைக்கு வரவிருக்கிறது மற்றும் ” in the name of God” என்ற தெலுங்கு வெப்சீரிஸிலும் நாயகியாக நடித்துள்ளார்.

கூடவே பார்த்திபன் மற்றும் எ. ஆர். ரஹ்மான் காம்போவில் எடுக்கப்பட்ட இரவில் நிழல் என்ற படத்தில் நடித்துள்ளார். அது மட்டுமின்றி பெயரிடப்படாத பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

இவ்வளவு பிசியானாலும் நல்ல கதையம்சம் கொண்ட வலுவான கதாபாத்திரத்தில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார் சாய் பிரியங்கா ரூத்..