*மக்கள் செல்வன் விஜய்சேதுபதி முன்னிலையில் ரசிகர் மன்ற பொதுச்செயலாளருக்கு நடைபெற்ற சுயமரியாதை திருமணம் !! *

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ரசிகர் மன்றத்தின் பொதுச்செயலாளராக பொறுப்பு வகித்து வரும் J குமரன் அவர்கள் சாதி மதம் கடந்து சுயமரியாதை செய்துள்ளார். இத்திருமணம் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முன்னிலையில் இன்று காலை சென்னையில் நடைபெற்றது.




உலகில் சாதி மதம் கடந்து மனிதர்களை நேசிப்போம். அன்பை பரப்புவோம் இதை ரசிகர்களிடத்தில் பரப்பி, அன்புக்கு வடிவமாக அனைவராலும் விரும்பப்படும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ரசிகர்மன்றத்தின் பொதுச்செயலாளர் J குமரன், சாதி மதம் கடந்த, சடங்குகளற்ற முறையில் அன்பால் இணையும் விதமாக, சுயமரியாதை மணம்புரிந்துள்ளார்.
பொதுச்செயலாளர் J குமரன் அவர்கள் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ரசிகர் மன்றத்தின் பொதுச்செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். அன்பால் இணையும் விதமாக தன் வாழ்வின் இணையை, சுயமரியாதை திருமண முறையில் திருமணம் செய்துள்ளார்.
இந்த திருமணம் இரு வீட்டார் சம்மதத்துடன் சுற்றம் சூழ, நண்பர்கள் கலந்துகொள்ள, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முன்னிலையில் கோலகலமாக நடைபெற்றது.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மணமக்களை ஆசிர்வதித்து வாழ்த்தினார்.