கலர்ஸ் தமிழ் அலைவரிசையில் வரும் ஞாயிறு அன்று உலக தொலைக்காட்சியில் முதன்முறையாக “ஜருகண்டி” மற்றும் “முடிஞ்சா இவன புடி” ஆகிய திரைப்படங்கள் ஒளிபரப்பாகின்றன
~வரும் ஞாயிறு ஜுன் 6 ஆம் தேதி பிற்பகல் 1.00 மணிக்கும் மற்றும் மாலை 4.00 மணிக்கும் சண்டே சினி காம்போ நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகும் இந்த குதூகலமான திரைப்படங்களை காண கலர்ஸ் தமிழ் அலைவரிசையை பாருங்கள் ~

சென்னை, 4 ஜுன், 2021: தமிழகத்தின் மிகச் சிறந்த பொழுதுபோக்கு சேனலாக திகழும் கலர்ஸ் தமிழ், இந்த வார இறுதியில் பார்வையாளர்களை மகிழ்விக்கும் விதமாக உலகத் தொலைக்காட்சி வரிசையில் முதன் முறையாக இரண்டு அதிரடி திரைப்படங்களான “ஜருகண்டி” மற்றும்” “முடிஞ்சா இவன புடி” ஆகியவற்றை ஒளிபரப்ப உள்ளது சண்டே சினி காம்போ என்பதன் ஒரு பகுதியாக ஒளிபரப்பப்படவுள்ள இத்திரைப்படங்களின் சிறப்பான கதையமைப்பும் மர்மமான, அதிரடி கதைத்திருப்பங்களும் பார்வையாளர்களை தன்வசப்படுத்துவது நிச்சயம். ஜுன். 6, ஞாயிறு, பிற்பகல் 1.00 மணிக்கு ஜருகண்டி திரைப்படத்தையும் மற்றும் மாலை 4.00 மணிக்கு முடிஞ்சா இவன புடி திரைப்படத்தையும் கண்டு மகிழ கலர்ஸ் தமிழ் அலைவரிசையை டியூன் செய்ய வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஜருகண்டி திரைப்படத்தில் நடிகர்கள் ஜெய், டேனியல் போப், ரெபா மோனிகா ஜான், ரோபோ சங்கர், போஸ் வெங்கட் மற்றும் அமித் திவாரி ஆகிய பிரபல நட்சத்திரங்கள் பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். திரு. ஏ.என் பிச்சுமணியின் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டில் வெளிவந்த இது ஒரு அதிரடி ஆக்ஷன் திரைப்படமாகும். சிறப்பான, வளமான வாழ்க்கை வேண்டுமென்று விரும்பி, ஒரு டிராவல் ஏஜென்சியை தொடங்கும் சத்யா (ஜெய் நடிப்பில்) போலி ஆவண சிக்கலில் சிக்கிக்கொள்கிறார்; அவன் செய்த குற்றத்திற்கான ஜெயில் தண்டனையிலிருந்து தப்பிக்க ரூபாய். 10 இலட்சம் பணம் தரவேண்டுமென்று ஒரு காவல்துறை அதிகாரி சத்யாவை பிளாக்மெயில் செய்ய கதைக்களத்தில் அதிரடி திருப்பங்கள் நிகழ்கின்றன. பல்வேறு யுக்திகள், ஏமாற்று வித்தைகளின் மூலம் இப்பிரச்சனைக்குத் தீர்வுகாண சத்யா முற்படும்போது அதில் ஏற்படும் நிகழ்வுகள் பார்வையாளர்களை திரைப்படத்தோடு ஒன்றிப்போக செய்துவிடுவது நிச்சயம்.

“முடிஞ்சா இவன புடி” என்பது, நகைச்சுவை கலந்த சுவாரஸ்யமான ஒரு திரைப்படம். ஒரு காவல்துறை அதிகாரி மற்றும் ஒரு திருடன் ஆகியோரைச் சுற்றி நிகழும் பல்வேறு நிகழ்வுகள் இதன் கதைக்களமாக இருக்கிறது. புகழ்பெற்ற இயக்குனர் கே.எஸ். ரவிக்குமாரின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுதீப், நித்தியாமேனன், பிரகாஷ்ராஜ் மற்றும் நாசர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த காமெடி திரைப்படத்தின் திரைக்கதை அமைப்பும், வசனங்களும், பார்வையாளர்களை பரவசப்படுத்துவது நிச்சயம். நகைச்சுவையான வசனங்களும், நிகழ்வுகளும் சிரித்து, சிரித்து உங்கள் வயிறை புண்ணாக்கக்கூடும் என்பதால், அதற்கு தயாராக இருங்கள்.

ஜுன் 6 ஆம் தேதி ஞாயிறன்று பிற்பகல் 1.00 மணி மற்றும் மாலை 4.00 மணிக்கு பொழுதுபோக்கும், நகைச்சுவையும், அதிரடித் திருப்பங்களும் நிறைந்த இந்த திரைப்படங்களைக் காண கலர்ஸ் தமிழ் அலைவரிசையை டியூன் செய்ய மறந்துவிடாதீர்கள். அனைத்து முன்னணி கேபிள் வலையமைப்புகளிலும் மற்றும் சன் டைரக்ட் (CHN NO 128), டாடா ஸ்கை (CHN NO 1555), ஏர்டெல் (CHN NO 763), டிஷ் டிவி (CHN NO 1808) மற்றும் வீடியோகான் D2H (CHN NO 553) ஆகிய அனைத்து டிடீஹெச் தளங்களிலும் கலர்ஸ் தமிழ் அலைவரிசையைக் காணலாம். அதுமட்டுமின்றி, பார்வையாளர்கள் அவர்களது வசதிக்கேற்ப எந்த நேரத்திலும் இந்நிகழ்ச்சியை காண VOOT – ஐ டியூன் செய்யலாம்.