‘வேம்பு’ திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வு

Share the post

‘வேம்பு’ திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வு

மஞ்சள் சினிமாஸ் சார்பில் கோல்டன் சுரேஷ் மற்றும் S.விஜயலட்சுமி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வேம்பு’. அறிமுக இயக்குநர் ஜஸ்டின் பிரபு இயக்கியுள்ள இந்த படத்தில் மெட்ராஸ் (ஜானி), தங்கலான், கபாலி படங்களில் நடித்த ஹரிகிருஷ்ணன் கதாநாயகனாக நடிக்க, திரௌபதி, மண்டேலா படங்களில் நடித்த ஷீலா கதாநாயகியாக நடித்திருக்கிறார். மாரிமுத்து, ஜெயராவ், பரியேறும் பெருமாள், கர்ணன், வாழை படங்களில் நடித்த ஜானகி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பெண் என்றாலே ஏதாவது குறை சொல்லும் இந்த சமூகத்தில் அதையும் தாண்டி ஒரு தந்தை தன் மகளுக்கு எப்படி ஆதரவாக இருக்கிறார் என்பதுடன். எப்பொழுதும் காவல்துறையோ, அரசாங்கமோ, தனிப்பட்ட நபரோ பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்க முடியாத சூழலில் , ‘ ஒரு பெண் தனிமையில் இருக்கும் போது எப்படி துணிச்சலாக தன்னை பாதுகாத்து கொள்ளலாம் என்கிற ஒரு விஷயத்தையும் இந்தப்படம் சொல்கிறது.

இந்தப்படத்தின் இறுதிப் பணிகள் நிறைவடைந்து தற்போது சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொள்ள அனுப்பப்பட்டு வருகிறது.
அந்தவகையில் விரைவில் நடைபெற உள்ள அகமதாபாத் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட இந்தப்படம் தேர்வாகி உள்ளது.

இந்த மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்துகொண்ட இயக்குநர் ஜஸ்டின் பிரபு கூறும்போது, “ஒரு நல்ல கருத்தை வலியுறுத்தும் விதமாக சமூக பொறுப்புடன் கூடிய ஒரு சரியான படமாக தான் இதை உருவாக்கி இருக்கிறோம்.

சிறந்த கதை அம்சம்கொண்ட எதார்தமான திரைபடங்களை மக்கள் வெற்றி பெற செய்து வருகின்றனர், அதே போன்ற எதார்த்த சினிமாக்களின் வரிசையில் இதுவும் இருக்கும்.

நாயகன், நாயகி இருவருமே இந்த படத்தில் தங்களது கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள் என்று சொல்லலாம். வரும் 2025 பிப்ரவரியில் படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது அதற்கு முன்னதாக இந்த படத்தின் முன்னோட்டம் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன அது குறித்த அறிவிப்புகளும் விரைவில் வெளியாக உள்ளது.

தொழில்நுட்பக் கலைஞர்கள் விபரம்

தயாரிப்பு ; கோல்டன் சுரேஷ் மற்றும் S.விஜயலட்சுமி

டைரக்சன் ; V.ஜஸ்டின் பிரபு

ஒளிப்பதிவு ; ஏ.குமரன்

படத்தொகுப்பு ; கே.ஜே வெங்கட்ரமணன்

இசை ; மணிகண்டன் முரளி

பாடகர்கள் ; அந்தோணி தாசன், மீனாட்சி இளையராஜா, சுந்தரய்யர் மற்றும் கபில் கபிலன்.

மக்கள் தொடர்பு ; A.ஜான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *