
மக்களோடு இணைந்து கேக் வெட்டி கொண்டாடிய போகுமிடம் வெகு தூரமில்லை படக்குழுவினர்
மக்கள் ஆதரவு… நன்றி தெரிவித்த போகுமிடம் வெகு தூரமில்லை படக்குழுவினர்

Shark 9 pictures சார்பில் சிவா கில்லரி தயாரிப்பில் அறிமுக இயக்குநர் மைக்கேல் கே.ராஜாவின் இயக்கத்தில் விமல், நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் ‘போகுமிடம் வெகு தூரமில்லை’. இப்படத்தில் விமலுடன் கருணாஸ், ஆடுகளம் நரேன், பவன், தீபா சங்கர், சார்லஸ் வினோத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

இப்படம் கடந்த வாரம் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்கில் ஓட்டிக்கொண்டு இருக்கிறது. பொதுமக்கள் பலரும் படத்தை பாராட்டி வருகின்றனர். பதற வைக்கும் இடைவேளை காட்சியும், பரபர என்று செல்லும் திரைக்கதையும் ரசிகர்களை கவர்ந்து இருப்பதால் அதிக வரவேற்பு பெற்று வருகிறது.

மனித உணர்வுகளை அழகாகவும் அழுத்தமாகவும் இயக்குனர் பேசி இருப்பதாக ரசிகர்கள் பொது மக்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள். மக்களின் இயல்பு வாழ்க்கையை அப்படியே படமாக்கி இருப்பதால் இப்படம் மக்களிடம் சென்றிருக்கிறது. தற்போது போகுமிடம் வெகு தூரமில்லை திரைப்படத்திற்கு அதிக திரையரங்குகள் கிடைத்துள்ளது. இது படக்குழுவினரை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த சந்தோஷத்தை கொண்டாடும் விதமாக போகுமிடம் வெகு தூரமில்லை படக்குழுவினர் திரையரங்கம் சென்று மக்களோடு இணைந்து கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார்கள். மக்களின் ஆதரவுக்கு படக்குழுவினர் நன்றி தெரிவித்தனர்.