ரசிகர் வீட்டு கல்யாணத்தை முன்னின்று நடத்திய பிரபல ஹீரோ!
நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் தீவிர ரசிகர் பீர் முகமது. விஜய் ஆண்டனி நடிக்கும் படங்களின் துவக்க விழா, வெளியீடு என்று எந்த விழாவாக இருந்தாலும் முதல் ரசிகராக பட போஸ்டர் ஒட்டுவது, திரையரங்கத்தின் முகப்பை அலங்கரிப்பது என்று வரிந்துகட்டிக்கொண்டு களப் பணியாற்றக்கூடியவர்.
இவருடைய மகள் திருமணம் சமீபத்தில் சென்னையில் நடைப்பெற்றது. இந்த விழாவில் நடிகர் விஜய் ஆண்டனி நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினார். விழாவில் முக்கிய பிரமுகர் போல் இல்லாமல் திருமண வீட்டார் போல் வெகு நேரம் அங்கிருந்து விழாவுக்கு வந்த விருந்தினர்களிடம் சகஜமாக பேசி விழாவை சிறப்பித்தார்.