
KALAIGNAR TV – GOWRI SERIAL
அம்மன் சிலை கடத்தல் – ஆவுடையப்பனுக்குசெக் வைக்கும் துர்கா..!

கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல்சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும்தெய்வீக மெகாத்தொடர் “கெளரி”. மக்களிடையே நல்லவரவேற்பைப் பெற்று வரும் இந்த தொடர், துர்கா ரூபத்தில்வந்திருக்கும் கனகாவால் தற்போது விறுவிறுப்பைபெற்றிருக்கிறது.
தொடரில் தற்போது, கோயிலில் அம்மன் சிலைமாற்றப்பட்ட உண்மை வெளிச்சத்திற்கு வந்த நிலையில், நடக்கவிருக்கும் கும்பாபிஷேகத்திற்கு முன்பாக சிலைகோயிலுக்கு கொண்டு வரப்படும் என்று துர்கா ரூபத்தில்அம்மன் அருள்வாக்கு கொடுக்கிறார்.
மறுபுறம், சில பல ஆண்டுகளுக்கு முன்பாக கோயில் சிலைமாற்றப்பட்டது குறித்து வந்த புகார் பற்றி காவல்துறைஅதிகாரியான நந்தினிக்கு தெரிய வருகிறது. மேலும், அந்தபுகாரை இறந்துபோன துர்காவின் அப்பா கொடுத்திருக்ககதைக்களம் சூடுபிடிக்கிறது. மேலும், இந்த விஷயத்தில்ஆவுடையப்பனுக்கு தொடர்பு இருப்பதையும் நந்தினிகண்டுபிடிக்கிறார்.
மறுபுறம், ஆவுடையப்பன் செய்த குற்றங்கள் சீரியலாகதொலைக்காட்சியில் ஒளிபரப்பாக, ஆவுடையப்பன் கும்பல்அதிர்ச்சிக்குள்ளாகிறது.
இப்படியாக, துர்கா, நந்தினி என சுற்றி சுற்றிஆவுடையப்பனுக்கு செக் வைக்க இனி என்னநடக்கப்போகிறது என்கிற பரபரப்போடு தொடர் நகர்ந்துவருகிறது.