போகுமிடம் வெகுதூரமில்லை திரை விமர்சனம்.!!

Share the post

போகுமிடம் வெகுதூரமில்லை திரை விமர்சனம்.!!


படத்தில் நடித்தவர்கள் :- விமல், கருணாஸ், மேரி ரிக்கெட்ஸ், ஆடுகளம் நரேன், தீபா ஷங்கர், சார்லஸ் வினோத், மனோஜ்குமார், பவன், அருள்தாஸ் உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில் உருவான படம் .
இயக்குனர்:- மைக்கேல் ராஜா .
மியூசிக் :- ஏ ஆர் ரகுநந்தன்.
ஒளிப்பதிவு :- டெமில் சேவியர் எட்வர்ட்ஸ்.
தயாரிப்பாளர் :- சிவா கிளாரி
சென்னையில் அமரர் ஊர்தி வைத்து தனது வாழ்க்கை ஓட்டுபவர் தான் விமல். இவரின் மனைவியான மேரி ரிக்கெட்ஸ் நிறை மாத கர்ப்பிணி. பிரசவத்திற்காக தனது மனைவியை மருத்துவமனையில் விமல் சேர்க்கிறார்..
பிரசவத்திற்காக பணம் தேவைப்பட்டது, அதற்காக வேலைக்குச் செல்கிறார் விமல். சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு ஒரு பெரியவரின் பிணத்தை எடுத்துச் செல்ல பணம் விமல் வாங்குகிறார்.
விமல் பிணத்தை எடுத்துக் கொண்டு தனியாக தனது ஊர்தியில் பயணம் செல்கிறார் விமல். இறந்து போனவரின் உடலை பெற திருநெல்வேலியில் இரு பிரிவினர் காத்திருக்கிறார்கள் .
இந்த சூழலில், சென்னையை தாண்டியதும் கருணாஸ் வழிப்போக்கனாக விமலின் ஊர்தியில் ஏறிக் கொள்கிறார்.
கூத்து கலைஞனான கருணாஸ், தனது கலைக்கு சரியான மரியாதை கிடைக்கவில்லை எனக் கூறி வாழ்க்கையை வெறுத்துப் போன ஒரு வாழ்வை வாழ்ந்து வருகிறார் கருணாஸ்.
இந்நிலையில், ஊர்தியில் இருந்த பிணம் காணாமல் போய்விடுகிறது. இதனால் விமல் மற்றும் கருணாஸ் அதிர்ச்சியில் ஆழ்கின்றனர்.
ஒரு பக்கம் பணத்தேவை, ஒரு பக்கம் பிணத்தை வைத்து பிரச்சனை என இரு பக்கமும் விமலுக்கு பிரச்சனை வருகிறது.
அதன்பிறகு விமல் என்ன செய்தார் என்பதே படத்தின் மீதிக் கதை.
கதையின் நாயகன் விமல், சென்னை மொழியில் பேசும் வசன உச்சரிப்பு இதுவரை அவர் ஏற்று நடித்திராத
ஒரு கதாபாத்திரம். மிகவும் நேர்த்தியாக நடித்து அக்கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் விமல்.
இப்படியொரு பிரச்சனையில் சிக்கி விட்டதாக எண்ணி கதறி அழும் காட்சியில் மற்றும் , க்ளைமாக்ஸ் காட்சியில் கொடுத்த நடிப்பில் இரண்டு இடங்களில் நம் கண்களில் கண்ணிரை வர வைத்துவிட்டார்.
கருணாஸை இரண்டாவது கதாநாயகன் என்று சொல்ல வேண்டும். கூத்து கலைஞனாக நடித்து காட்டும் இடங்களில் இந்த மனுஷனாக இப்படி வாழ்ந்து இருக்கிக்குறாரு என்று கேட்க அளவிற்கான
நடிப்பில் அனைவரையும் க்ளைமாக்ஸ் காட்சியில் கண்கலங்கவும் வைத்துவிடுகிறார்.
யாரும் இதுவரை தொடாத ஒரு கதையை கையில் எடுத்து அதை நேர்த்தியாகவும் கையாண்டிருக்கிறார் இயக்குனர் மைக்கேல் ராஜா. கதை நகர்த்திச் சென்ற விதமும் பாராட்டுதலுக்குறியது.
க்ளைமாக்ஸ் காட்சியில் இன்னும் சற்று மெனக்கெடல் செய்திருக்கலாம்னு என்ற நினைக்க வைக்க கிறது.
இசை மற்றும் ஒளிப்பதிவு இரண்டுமே படத்திற்கு பெரிய பலம் தான் .
அமரர் ஊர்தியில் நெடுப்பயணத்தில் திடீரென, ஏற்பட்ட சோகப்பயணம் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *