லேம்பர்ட் குடும்பத்தின் அச்சுறுத்தும் நெடுங்கதையில் நடித்த நடிகர்கள், இந்தப் படத் தொடரின் கடைசி அத்தியாயத்திற்காக மீண்டும் திரும்பியுள்ளனர்.

Share the post

INSIDIOUS: THE RED DOOR

லேம்பர்ட் குடும்பத்தின் அச்சுறுத்தும் நெடுங்கதையில் நடித்த நடிகர்கள், இந்தப் படத் தொடரின் கடைசி அத்தியாயத்திற்காக மீண்டும் திரும்பியுள்ளனர்.

இந்தப் படத்தொடரின் ஐந்தாவதும் கடைசியுமான இப்படம், இரண்டாவது பாகமான ‘இன்ஸிடியஸ்: சாப்டர் 2’ படத்தின் தொடர்ச்சியாகத் தொடங்குகிறது. ஜோஷ் லேம்பர்ட் (பேட்ரிக் வில்சன்), தன் மகன் டால்டன் லேம்பர்டை (டை சிம்ப்கின்ஸ்), மிக அமைதியான, சிறப்பான பழம்பெருமை வாய்ந்த பல்கலைக்கழகம் ஒன்றில் விட்டுவர கிளம்பிய பத்தாண்டுகளுக்குப் பிறகு, இந்தப் படத்தின் திரைக்கதை நிகழ்வதாக அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், டால்டனின் கடந்த காலத்தில் ஒடுக்கப்பட்ட பேய்களின் வரவால் அவனது கல்லூரி வாழ்க்கை கொடுங்கனவாகி விடுகிறது.

அந்தப் பேய்களை ஒரேடியாக அமைதியுறச் செய்ய, ஜோஷ் லேம்பர்ட்டும், டால்டன் லேம்பர்ட்டும், எப்பொழுதும் இல்லாத வகையில் இன்னும் கூடுதல் ஆழத்திற்குச் சென்று, அவர்கள் குடும்பத்தின் இருண்மையான கடந்த காலத்தை எதிர்கொள்வதோடு, சிவப்புக் கதவின் பின்புறம் பதுங்கியுள்ள கிலி ஏற்படுத்தும் பயங்கரங்களையும் எதிர்கொண்டாக வேண்டும்.

இப்படத் தொடரின் முந்தைய பாகங்களில் பிரதான கதாபாத்திரத்தில் நடித்த பேட்ரிக் வில்சன், இப்படத்தில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். அவருடன், முதல் இரண்டு பாகங்களில் நடித்த Simpkins, Rose Byrne and Andrew Astor ஆகியோர் நடித்துள்ளனர். Sinclair Daniel, Hiam Abbass ஆகியோர் கூடுதலாக இணைந்துள்ளனர்.

CREDITS:-
இயக்கம் – Patrick Wilson
திரைக்கதை – Scott Teems
கதை – Leigh Whannell and Scott Teems based on characters created by Leigh Whannell.

தமிழ், ஆங்கிலம், தெலுங்கு & இந்தி ஆகிய மொழிகளில் சோனி பிக்சர்ஸ் வெளியிடுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *