தி அக்காலி திரைவிமர்சனம்!!

Share the post

தி அக்காலி திரைவிமர்சனம்

காவல்துறை அதிகாரி ஜெய்குமார் தலைமையில் ஒரு போதைப்பொருள் கடத்தல் கும்பலை பிடிக்க குழு ஒன்று அமைக்கப்படுகிறது.

அந்த குழுவினருக்கு மயானத்தில் புதைக்கப்படும்.

உடல்களை எடுத்துவிட்டு அந்த குழிகளில் போதைப்பொருட்களை
பதுக்கி வைக்கிறார்கள்.

என்ற ஒரு தகவல் கிடைக்கிறது. அதன்படி அந்த மயானத்தில் போலீஸ் ரகசிய நடவடிக்கை

மேற்கொள்ளும் போது, அவர்களுக்கு பல

அதிர்ச்சிகமரான தகவலும், உண்மைகள், தெரிய வருகிறது.

சாத்தானை வழிபடும் குழுவினர், ஒரு பிரிவான அங்கு விசித்திரமான பூஜைகள் செய்வதையும், தெரிகிறது.

மனிதர்களை நரபலி கொடுப்பதையும் ஜெய்குமார் கண்டுபிடிக்கிறார்.

அது குறித்து மேலும் விசாரிக்கும் போது, அந்த குழுவின்

பின்னணி, அதைச் சார்ந்தவர்கள் மாயமானது, மற்றும் அவர்களின் மர்ம மரணம் போன்றவை

பற்றி தெரிய வருகிறது. உயர் அதிகாரி தடுத்தும், இந்த விசயங்களில் தீவிரம் காட்டும்

ஜெய்குமார், இதன் பின்னணியில் இருப்பவர்களை

கண்டுபிடிக்க களத்தில் இறங்கும் போது அவரைச் சுற்றி பல மர்ம விஷயங்கள் நடைபெறுகிறது.

இறுதியில் அனைத்து மர்ம முடிச்சுகளையும் அவர் எப்படி அவிழ்கிறார் என்பதை

சொல்வதோடு, மர்மங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல்,

கமா போட்டு தொடர்வது தான் ‘தி அக்காலி’ படத்தின் மீதிக்கதை கதை.

சாத்தான்களை வழிபடுபவர்களின் நரபலி சம்பவங்களை மையமாக

வைத்துக்கொண்டு விறுவிறுப்பான க்ரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர் படத்தை

கொடுத்திருக்கும் இயக்குநர் அதை வித்தியாசமான

முறையிலும் சொல்ல முயற்சித்திருக்கிறார்.
இயக்குநர்.

காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் ஜெய்குமார், கிறிஸ்துவ

மத போதகராக நடித்திருக்கும்.
நாசர், காவல்துறை உயர் அதிகாரியாக நடித்திருக்கும்.

தலைவாசல் விஜய், ஸ்வயம் சித்தா,
வினோத் கிஷன்,

வினோதினி, அர்ஜய், சேகர், யாமினி, தாரணி, பரத் என படத்தில் நடித்திருக்கும்

அனைத்து நடிகர்களும் திரைக்கதையில் முக்கிய பங்கு வகிக்கும்

கதாபாத்திரத்தில் நடித்திருப்பதோடு, வித்தியாசமான

தோற்றம் மற்றும்
உடல் அசைவுகள் மூலம் புதிதாக தெரிகிறார்கள்.

பேய் பிடித்தது போல் ஆக்ரோஷமாக இருக்கும் தாரணி, பிளாக் மேஜிக்கால்

ஈர்க்கப்பட்ட யாமினி, சாத்தான்
குழுவால் பாதிக்கப்பட்ட அர்ஜய், கருப்பு

உலகத்தைச் சேர்ந்த வினோத் கிஷன், நாசர் ஆகியோரின் கதாபாத்திர

வடிவமைப்பும், அதில் அவர்கள்

வெளிப்படுத்திய நடிப்பும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர்
கிரி முர்பி,
இதுவரை தமிழ்ப் படங்களில் இடம்பெறாத

லொக்கேஷன்களை தேடி பிடித்து காட்சிப்படுத்தி
யிருப்பதும்,

பயன்படுத்தப்பட்ட வண்ணங்களும் வழக்கமான படங்களில் இருந்து

வித்தியாசப்படுத்தி காட்டுகிறது.

கலை இயக்குநர் தோட்டா தரணியின் பணி படம்
முழுவதும் தெரிகிறது. பெரும்பாலான காட்சிகள் கிராபிக்ஸ்

என்றாலும், அதனுடன் தோட்டா தரணியின்

கலை இயக்கம் கச்சிதமாக பின்னி பிணைந்திருக்கிறது.

VFX காட்சிகள் படத்தில் முக்கிய பங்கு வகிப்பதோடு,

பெரும்பாலான காட்சிகளை

பிரமாண்டமாக நகர்த்த பெரிதும் பயன்பட்டிருக்கிறது.

படத்தொகுப்பாளர் இனியவன் பாண்டியன், வித்தியாசமான கதைக்களத்தை

விறுவிறுப்பாக நகர்த்துவதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல், ஒரே

சண்டைக்காட்சியை அதிகப் படுத்திக்‌ காட்டி யிருக்கிறார்.

எழுதி இயக்கியிருக்கும் முகமது ஆசிப் ஹமீத் நரபலி என்ற

கதைக்களத்தை வித்தியாசமான

பாணியில் சொல்ல முயற்சித்திருப்பது
சில இடங்களில் மிகபட்டாலும், பல

படத்திற்கு பலம்ப்பெற முயற்சி செய்தியிரு க்கிறார்.

படத்தின் ஆரம்பம்
எதிர்பார்ப்புடன் இருந்தாலும், அதன் பிறகு இடம்பெறும் காட்சிகளின்

நீளம் அதிமாக இருப்பது திரைக்கதையை தெளிவடைய முயற்சி செய்கிறது. குறிப்பாக

படத்தில் இடம்பெறும் சண்டைக்காட்சிகள் மற்றும் சேசிங் காட்சிகள் ரசிகர்களின்

பொறுமையை சோதிப்பதுடன், கதை என்னவென்று தெரியாமல்

புரியாமல் குழப்பங்களை விளைவிக்கச் செய்ய வைக்கிறது.

இறுதியில் இயக்குநர் சொல்ல வரும் கதை இது தான், என்று ஒரு சிலர்

புரிந்துக்கொண்டாலும், தேவையில்லாத காட்சிகளை திணிப்பது,

ஒரே காட்சி திரும்ப திரும்ப வருவது போன்ற காட்சி அமைப்பு போன்றவை

அவர்களையும் . இருந்தாலும், சாத்தான்களை வழிபடும் குழு மற்றும்

அவர்கள் எதற்காக சாத்தான்களை வழிபடுகிறார்கள்

போன்ற விஷயங்களை விரிவாக சொல்லியிருப்பதோடு,

16 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த வழக்கை கடைசியில்

தற்போது விசாரிக்கும் பாணியில் திரைக்கதை அமைத்த விதம்,

ஆகியவை சற்று ஆறுதலடைய செய்து படத்தை பார்க்க வைக்கிறது.

மொத்தத்தில், இந்த ‘தி அக்காலி’ யின் வித்தியாசமான முயற்சியை இயக்குனர் குழூ
செய்து இருக்கிறார்கள்.
‘குற்றப்பின்னணி’ திரைப்பட விமர்சனம்

பழனியில் வசிக்கும் நாயகன் ‘ராட்சசன்’புகழ் சரவணன், அதிகாலையில் வீடு

வீடாக சென்று பால் வியாபாரம் செய்வதோடு, தண்ணீர் கேன் போடும்

வேலையும் செய்கிறார். இப்படி கடுமையாக உழைப்பவர் திடீரென்று

தான் வாடிக்கையாக பால் விற்பனை செய்யும் வீட்டுக்குள் புகுந்து

அங்கிருக்கும் பெண்ணை கொலை செய்கிறார். இந்த

கொலை வழக்கை போலீஸ் விசாரித்துக் கொண்டிருக்கும்

நிலையில், மேலும் ஒரு வீட்டில் புகுந்து அங்கிருக்கும்

தம்பதியை சரவணன் கொலை செய்கிறார். இந்த இரண்டு
கொலைகளும்

ஒரேபாணியில்
நடந்திருப்பதால், போலீஸ் கொலையாளி யார்? என்பதை

கண்டுபிடிக்க முடியாமல் தவிக்க, மறுபக்கம் சரவணன் அப்பாவியாக அதே ஊரில் வலம்

வருகிறார். சரவணன் எதற்காக அவர்களை கொலை செய்தார்?, அவர் தான் கொலையாளி என்பதை

போலீஸ் கண்டுபிடித்ததா?

இல்லையா? என்பது தான் படத்தின் மீதிக்கதை.

‘ராட்சசன்’ படத்தில் வில்லனாக மிரட்டிய சரவணன், இதில் வில்லத்தனம் கலந்த

ஹீரோவாக மிரட்டியிருக்கிறார். பால் வியாபாரம், தண்ணீர் கேன் வியாபாரம்

செய்துக்கொண்டு அப்பாவியாக வலம் வருபவர், திடீரென்று கொடூரமான

கொலையாளியாக மாறும் காட்சிகளில்

நடிப்பில் வேறுபாட்டை காட்டி கவனம் ஈர்க்கிறார்.

தீபாவளி, தாட்சாயிணி, சிவா, ஹனிபா, பாபு,

நேரு, லால், அகமல், ஷர்விகா, கராத்தே ராஜா என மற்ற வேடங்களில்

நடித்திருப்பவர்கள் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.

சங்கர் செல்வராஜின் ஒளிப்பதிவு எளிமையாக

இருந்தாலும், கதாபாத்திரங்களின் உணர்வுகளை

ரசிகர்களிடத்தில் நேர்த்தியாக கடத்தியிருக்கிறது.

கதாநாயகன் வசிக்கும் தோட்ட வீடு மற்றும் படத்தில் காட்டப்பட்ட லைவ் லொக்கேஷன்கள்

அனைத்தையும் காட்டிய விதம் படத்தின் தரத்தை உயரத்தியிருக்கிறது.

இசையமைப்பாளர் ஜித் இசையில், என்.பி.இஸ்மாயில் வரிகளில் பாடல்கள்

கேட்கும் ரகம். பின்னணி இசையிலும் குறையில்லை.

எழுதி இயக்கியிருக்கும் என்.பி.இஸ்மாயில், சமூகத்தில் நடக்கும் மிக

முக்கியமான குற்றத்தின் பின்னணி குறித்து பேசியிருப்பதோடு,

அதனால் ஏற்படும் பாதிப்புகளை மையமாக

வைத்து நேர்த்தியான க்ரைம் சஸ்பென்ஸ் திரில்லர் படத்தை கொடுத்திருக்கிறார்.

செய்தித் தாள்களில் பல விஷயங்களை நாம் படித்துவிட்டு மிக சாதாரணமாக கடந்து

செல்கிறோம், ஆனால் அந்த விஷயம் நம் வாழ்வில் நடந்தால் மட்டுமே அதன்

பாதிப்பும், ஆழமும் நமக்கு தெரியும் என்பதை உணர்த்தும்

வகையில் காட்சிகளை வடிவமைத்திருக்கும் இயக்குநர்

என்.பி.இஸ்மாயில், தான் சொல்ல வந்ததை

மிக நேர்த்தியாகவும், நேர்மையாகவும் சொல்லியிருக்கிறார்.

மேக்கிங்கில் சில குறைகள் இருந்தாலும், கதை சொல்லல் மற்றும் காட்சிகளை கடத்திய

விதம் ஆகியவற்றால் படம் ரசிக்க வைக்கிறது. குறிப்பாக, நாயகன்

சைக்கிள் எடுக்கும் போதெல்லாம் யாரோ கொலை செய்யப்பட போகிறார்கள், என்று

உணர்த்துவது உள்ளிட்ட காட்சிகள் படத்தின் சுவாரஸ்யத்தை அதிகரிக்கச் செய்கிறது.

மொத்தத்தில், இந்த ‘குற்றப்பின்னணி’படம் குறையை மறந்து பார்க்க கூடிய நல்ல மெசேஜை சொல்ல வரும் படம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *