பெரிய திரைக்கலைஞர்கள் இணைந்து பணியாற்ற
சரிகமா நிறுவனம் பிரமாண்டமாகதயாரித்திருக்கும்
ரோஜா தொடரின் 2ம் பாகம்
சரி க மா நிறுவனம்
தயாரித்து சன் டிவியில் 1300 எபிசோடுகள் ஒளிபரப்பாகி அனைவரின் பாராட்டுக்களையும், வரவேற்பையும் பெற்ற ரோஜா தொடரின் 2ம் பாகத்தை இப்போது தயாரித்திருக்கிறார்கள். இந்த வெப்சீரியஸ் ஜனவரி 6ந் தேதி முதல் Saregama TVShows Tamil youtube சேனலில் ஒளிபரப்பாகவிருக்கி
றது. இந்த வெப்சீரியஸில் ரோஜா முதல்பாகத்தில் நாயகியாகநடித்த பிரியங்கா இதிலும் நாயகியாக நடிக்கிறார். பிரபல தொடர்களில் நடித்து வரும் நியாஸ் இந்தத் தொடரில் நாயகனாக நடிக்கிறார். மேலும் பெரிய திரைகளில் நடித்த கலைஞர்களான ராஜ்குமார், ஹரிப்ரியா, இஸ்மத்பானு, கம்பம் மீனா, கலக்கப்போவது யாரு சில்மிஷம் சிவா. ஸ்வேதா, குழந்தை நட்சத்திரம் ஸ்ரீலியா, தீபா மற்றும் பல கலைஞர் கள்நடித்து இருக்கிறார்கள்..
இந்த வெப்சீரியஸை டைரக்டர் மிஸ்கின் உதவியாளரும், கள்ளப்படம் படத்தின் இயக்குனருமான வடிவேல் இயக்குகிறார். ஒளிப்பதிவை P.C. ஸ்ரீராமின் உதவியாளரும் , கள்ளப்படம் படத்தின் ஒளிப்பதிவாளருமான ஸ்ரீராம் சந்தோஷ் கவனிக்கிறார். திரைக்கதை, வசனத்தை பாணாக் காற்றாடி., ஆம்பள,’ போன்ற படங்களுக்கு. வசனம் எழுதிய G.ராதாகிருஷ்ணன் எழுதியிருக்கிறார்.
இந்த வெப் சீரியஸை கிரியேட்டிவ் ஹெட் பிரின்ஸ் இமானுவேல் பொறுப்பில் உருவாக்குகிறார்கள்.யூடியூப் சேனலில் ஒளிப்பதிவாளராக பணியாற்றும் நாயகன் மதிகாதல் முயற்சியில் ஈடுபட்டு 17 பெண்களை காதலித்து பின்பு காதல் தோல்வி அடைந்த விரக்தியின் விளிம்பில் இருக்கிறான் அப்போது ரோஜா மகள் மலர்மதி வேலை செய்யும் சேனலில் எம்.டி.யாக பதவி ஏற்கிறாள்.எதிர்பாராதவிதமாக மலர் மதிக்கு காதல் Agrement போட்டு தன்னை இம்ப்ரஸ் செய்தால் கல்யாணம் செய்கிறேன் என்று சவால்விடுகிறாள். இதை மதி ஏற்று மலர் மீது காதல் முயற்சியில் இறங்குகிறான்.மதியின் முயற்சி வெற்றிபெற்றதா? இல்லையா? என்ற பரபரப்பான திருப்பங்களுடன் ரோஜா – 2 உருவாகியிருக்கிறது.
–