![](https://oktakenews.com/wp-content/uploads/2025/02/image-41.png)
*தண்டேல் | Thandel review :-
நடித்தவர்கள் :-
நாக சைதன் ஷோயா – ராஜு
சாய் பல்லவி – சத்யா
பிரகாஷ் பெலவாடி – பாகிஸ்தான்
சிறை அதிகாரி. திவ்யா பிள்ளை – சந்திராக்கா ராவ், ரமேஷ்
கருணாகரன் ‘ஆடுகளம்’ நரேன்.
பப்லு பிருத்விராஜ்
மைம் கோபி கல்ப லதா
கல்யாணி நடராஜன்
மகேஷ் அச்சந்தா
கிஷோர் ராஜு வசிஷ்டா
தொழில்நுட்ப கலைஞர்கள் :
எழுத்து & இயக்கம் : சந்து மொண்டேட்டி
ஒளிப்பதிவு : ஷ்யாம் தத் (ஐஎஸ்சி)
இசை : தேவி ஸ்ரீ பிரசாத்
படத்தொகுப்பு : நவீன் நூலி
கதை : கார்த்திக் தீடா
தயாரிப்பு நிறுவனம் : கீதா ஆர்ட்ஸ்
வழங்குபவர்: அல்லு அரவிந்த்
தயாரிப்பாளர்: பன்னி வாஸ்
சாய் பல்லவி, நாக சைதன்யா இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வருகின்றனர்.
இவர்கள் இருவருமே மீனவ குடும்பத்தை சேர்ந்தவர்கள்.
இதில் நாக சைதன்யா தண்டேல் தலைவன் ஆக பொறுப்பேற்று
ஒன்பது மாதம் குஜராத் தாண்டி கடல் பகுதியில் மீன் பிடிக்க போக மீதம் மூணு மாதம் ஊருக்கு வருகிறார்.
எத்தனை தடவை சொல்லியும் ஒரு முறை சாய் பல்லவி எவ்வளவு சொல்லியும் நாக சைதன்யா கடலுக்குள்
மீன் பிடிக்க சென்ற போகிறார்கள், அன்றைய தினம் திடீரென பெரும் புயல்
வருகிறது. அந்த தினம் இந்த புயல் வருமென இவர்கள் எதிர்ப்பார்க்க வில்லை இவர்கள். அந்த சிறிய கப்பலை கடலையில் நிறுத்த எவ்வளவு போராடியும் கடலைகள் ஒய்யாரமாக சீறியது. நங்கூரம் போட்டும் அடங்கவில்லை. கப்பலை இரண்டு துண்டுகளாக உடைந்தது.அதுல இருந்த மீனவர்கள் தூக்கிவீசபடுகிறார்கள்.
அந்த புயலில் ஒருவரை காப்பாற்ற நாக சைதன்யா செல்லும்
போது, அந்த சமயத்தில் திசைமாறி படகு சென்று விடுகிறது.யாருக்கும்
தெரியாமல் படகு பாகிஸ்தான் எல்லைக்குள் சென்றுவிடுகிறது.
அத்துணைப் பேரையும்
பாகிஸ்தான் அரசாங்கம் கைது செய்கிறது.
பாகிஸ்தான் அரசாங்கத்திடமிருந்து நாக சைதன்யா தப்பித்து இந்தியா வந்து
சாய் பல்லவியை கரம் பிடித்தாரா என்பதை மீதிக் கதைக்களத்தை பார்ப்போம்.
இந்த படத்தை பற்றிய அறிவோம்.
நாக சைதன்யா ஒரு சில தோல்விக்கு பிறகு செம சிறப்பாக அமைந்துள்ளது.
இந்த தண்டேல்திரைப் படம்.
மீனவ தலைவனாக சிறப்பாக கலக்கியுள்ளார்.
சாய் பல்லவியுடன் ரொமான்ஸ்,
தன்னுடைய நண்பனுக்காக முன் இறங்கி சண்டை போடுவதும்,
பாகிஸ்தான்
சிறைச்சாலையில் தேசிய கொடிக்காக காவலாளிகளிடம்
போராடும் இடம். இந்தியரை கேவலமாக பேசி சிறுநீர் கழிக்கும் இடத்தில்
கமர்ஷியல் மாஸ் ஹீரோவாக ஜொலித்துள்ளார்.நாகசைன்யா.
சாய் பல்லவி வழக்கம் போல் சிறப்பான நடிப்பை கொடுத்திருந்தாலும்,
சில இடங்களில் கணவனிடம் அன்பை பொழிந்து இடத்தில் காதலியாகவும் மனைவியாகவும் அட்டகாசமாக நடித்துள்ளார்.
போது வாக. எல்லா படங்களிலும் நடப்பில் சிறப்பாக நடித்துள்ளார். என்பதை நியாபகப்படுத்துகிறார்.
தன் காதலனுக்காக அவர் ஏங்கும் காதலில் உள்ள உண்மையான
பிரிதிபலிப்பை ஏங்கும் இடமெல்லாம் சிறப்பாக நடித்துள்ளார்.
தன் பேச்சை கேட்காத காதலன் பாகிஸ்தான் சிறைச்சாலையில்
இருக்கும் போது கூட ஊமை கோவத்தில் பேசாமல் இருப்பது என பல
இடங்களில் ஹை ஸ்கோர் செய்துள்ளார்.
படத்தின் முதல் பாதிவரை காதல்,கொஞ்சல், ஆட்டம், பாட்டம் என செல்லவேண்டும்
இரண்டாம் பாதியில் பாகிஸ்தான் இந்தியா என கதை செல்லவதை,
அப்படியே அசல் நம் ரோஜா படத்தை வேறு
ஒரு வெர்சனில் பார்த்தது போன்று தோன்றுகிறது.
அதிலும் சிறைச்சாலையில் வரும் தேசியகொடி காட்சி அப்படியே
ரோஜா-வை தான் நினைவுக்கு வருகிறது.
அமரன் போன்ற உண்மை கதையில். இருப்பது போல என்றாலும் இது
சினிமாவிற்கு சின்ன மாற்றம் ஆனாலும் இது பெரிதும் படத்தை தொழவு செய்யவில்லை.
ஆனால், இது ஓரு உண்மை கதை என்று
சொல்லுவதால். ஆந்திரா மசாலாவை அள்ளி தூவியுள்ளனர்.
பாகிஸ்தான் கலவரத்திலேயே தப்பித்து மீண்டும்
சிறைச்சாலைக்கு நாக சைதன்யா வருவது எல்லாம் எல்லை மீறியது.
டெக்னிக்கலாக படம் வலுவாகவே உள்ளது, அதிலும் தேவி ஸ்ரீ
பிரசாத் பின்னணி இசை, பாடல்கள் அசத்தல். ஒளிப்பதிவும் சூப்பர்.
க்ளாப்ஸ்
நாக சைதன்யா, சாய் பல்லவி காதல் காட்சிகள். படத்தின்
முதல் பாதி. பாடல்கள், பின்னணி இசை. கிளைமேக்ஸ்
பல்ப்ஸ்
இரண்டாம் பாதி பாகிஸ்தான் காட்சிகள்
பெரும் ஹீரோயிசமாக காட்டியது கொஞ்சம் யதார்த்ததை தாண்டியுள்ளது.
இந்த தண்டேல் படத்தில் சத்யா, ராஜு இருவரின்
காதலர்களின் உண்மை உணர்வின் போராட்டக் காதல்.
நம்மை அனைவரையும் கண் கலங்க வைத்துள்ளார்கள். அவர்களின்
உண்மையான காதலலை
வெற்றியடைய வைக்கும். தண்டேல் திரைப்படம்…