
தளபதி அவர்களின் சொல்லுக்கிணங்க
இன்று வடசென்னை மாவட்டத்தில் தளபதி விஜய் இலவச சட்ட ஆலோசனை மையத்தினை அகில இந்திய பொதுச்செயலாளர் திரு. புஸ்ஸி N. ஆனந்து அவர்கள் திறந்து வைத்து ஆற்றிய உரையின் தொகுப்பு…

1.குடும்பத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு முறையான சட்ட ஆலோசனை வழங்குதல் (DVOP)
2.விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, உரிய நிவாரணம் கிடைக்க அவர்களுக்கு சட்ட ஆலோசனை வழங்குதல். (MCOP)
3.கந்து வட்டி கொடுமையால் பாதிக்கப்படும் நபருக்கு முறையான சட்ட ஆலோசனை வழங்குதல்.
4.சிறுவர்,சிறுமிகளுக்கு ஏற்படும் அச்சுறுத்தலுக்கு (Pocso) எதிராக பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு உரிய சட்ட ஆலோசனை வழங்குதல்.

- வங்கிக்கடன், வீட்டுக்கடன், தனியார் நிதி நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட ஆலோசனை வழங்குதல். இதேபோல்
காப்பீடு விவகாரங்கள் மற்றும் நுகர்வோர் நிறுவனங்களிடம் இருந்து இழப்பீடு பெறுவதற்கான சட்ட ஆலோசனைகளை வழங்குதல். - வரதட்சணை கொடுமை மற்றும் குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு முறையான சட்ட ஆலோசனை வழங்குதல்
7.நிறுவனங்களின் நடவடிக்கையால் திடீர் பணி நீக்கம், ஓய்வூதியத் தொகை கிடைப்பதில் சிக்கல் உள்ளிட்ட தொழிலாளர் நலத்துறை தொடர்பான விவகாரங்களில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சட்ட ஆலோசனை வழங்குவது.
- பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் சேரும் போது அவர்களின் சான்றிதழுக்கு ( முறையாக சரிபார்த்த பிறகு) Attestation கையெழுத்து வழங்க உதவி செய்வது.
- சட்டப்படிப்பு படிக்க விரும்பும் மாணவ, மாணவியருக்கு வழிகாட்டுதல்.
- அந்தந்த பகுதிகளில் உள்ள பொது பிரச்சனைகளுக்கு சட்டரீதியாக தீர்வு காண வழிவகை செய்வது (உதாரணமாக சாலை வசதி, குடிநீர் வசதி கிடைக்க போராடும் மக்களுக்கு சட்ட ஆலோசனை வழங்குவது).