
டெஸ்ட்”
திரைப்பட விமர்சனம்
நடித்தவர்கள்:-
மாதவன், நயன்தாரா சித்தார்த், மீரா ஜாஸ்மின் காளி வெங்கட், ஆடுகளம்முருகதாஸ்,
மற்றும் பலர் நடித்துள்ளனர்.
டைரக்டர் :- எஸ். சஷி காந்த்.
மியூசிக் : – சக்திஸ்ரீ கோபாலன்.
ஒளிப்பதிவு:-விரஜ் சிங் கோஹிலின்.
படத்தொகுப்பு:- டி.எஸ்.சுரேஷ்.
கலை இயக்குனர்:-
என்.மதுசூதன்.
சுவேதா சாபுசிரில்.
தயாரிப்பாளர்கள் :- சக்ரவர்த்தி, ராமச்சந்திரா & எஸ்.சசிகாந்த்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக கொண்டாடும்
சித்தார்த் அந்த அணியில் இருந்து அவரை நீக்கி விட்டு
வேறொருவரை புதியதாக சேர்த்துக் கொள்ள அந்த வாய்ப்பு கொடுக்க
கிரிக்கெட் வாரியம் முடிவு செய்கிறது. அதனால்,
சித்தார்த் தனது ஓய்வு அறிவிப்பை அறிவிக்க வேண்டும்
என்று அவரை வற்புறுத்துகிறது.
அதனால், தோல்வியை தனது
கிரிக்கெட்
வாழ்க்கையில் அடைய விரும்பவில்லை
சித்தார்த், இந்தியா -டூ
பாகிஸ்தான் இடையே நடைபெற இருக்கும் கடைசி டெஸ்ட்
போட்டியில் விளையாடி தனது திறமையை நிரூபித்து காட்டிய
பின்னால் ஓய்வு பற்றி தேறிவிக்க நினைக்கிறார்.
இதனால், அந்த டெஸ்ட் போட்டியில் நான் விளையாட வேண்டும் என்பதை
மிகவும் உறுதியாக இருக்கிறார்.
நீரில் இருந்து எடுக்கப்படும் ஹைட்ரஜனை
எரிபொருளாக கொண்டு வாகனங்களை
இயக்கும் முறையை கண்டுபிடிக்கும் விஞ்ஞானி மாதவன்,
தனது கண்டுப் பிடிப்பிறகு அங்கீகாரம் கிடைக்க
வேண்டிய முயற்சியை ஈடுபடுக்கொண்டிருக்கிறார்.
அவரது மனைவி நயன்தாரா, கணவரின்
லட்சியத்திற்கு உறுதுணையாக இருந்தாலும், ஒரு
கட்டத்தில் அனைத்தையும் விட்டுக் கொடுத்து விட்டு,
கணவன், குழந்தை என்ற வாழ்க்கையே
போதும் என்ற மனநிலையில் வாழ்ந்து வருகிறார்.
திருமணமாகி பல வருடங்களாக குழந்தை இல்லாமல் இருக்கிறார்,
அதற்கான கடைசி முயற்சியாக
மருத்துவ சிகிச்சைப் பெற மேற்கொள்ள முடிவு செய்கிறார்.
இந்த மூவரும் தங்கள் கனவுகளின் கடைசி வாய்ப்பை வாழ்க்கையில்
எதிர்நோக்கி பயணிக்கிறார்கள்,
இந்த மாதிரி உலகத்திற்கு தங்களை
நிரூபித்துக் காட்ட கடைசி தருணமாகவும் பார்க்கிறார்கள்.
இதனால், எப்படியாவது நினைத்தது நடக்க வேண்டும் என்ற எண்ணத்தில்
பயணிக்கும் இவர்கள் மூவரின் பயணத்தை ஒரே மாதிரியான
புள்ளியில் சந்திக்க வைக்கும் கிரிக்கெட் போட்டி, இவர்களை
மிகப்பெரிய சோதனையில் சிக்க வைக்கிறது. அந்த சோதனையை கடந்து
இவர்களில் தாங்கள் நினைத்தது போல் வாழ்க்கையில்
சாதனை படைத்தார்களா? இல்லையா ?என்பதை
மனிதர்களின் தாழ்வு
மனப்பான்மை ஈகோ என்ற விளையாட்டில்
மூலமாக சொல்வதே
‘டெஸ்ட்’.
முதன்மையான கதைக்களம் ஆகும்
கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் மாதவன், சித்தார்த்
மற்றும் நயன்தாரா மூன்று பேரும்
அசுரத்தனமாக நடித்துள்ளார்கள்.
மூவரில் யார் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்? என்ற கேள்விக்கு
பதில் சொல்ல முடியாத நிலையில் ஒவ்வொருவரும்
கிடைத்த வாய்ப்புகளை சரியாக சிறப்பாக பயன்படுத்தி சிறு
சின்னச்சின்ன அசைவுகளில் கூட அவர்கள் அசத்தலாக வெளிப்படுத்தி மிரளவைத்திருக்
கிறார்கள்.
வெற்றி பெற்றவன் பின்னாடி செல்லும் உலகத்தைப் பார்த்து இருக்கேன்
ஆத்திரம் கொள்ளும் தோல்வியுள்ளராக நடித்திருக்கும்
மாதவன், தனது கண்டுபிடிப்பிற்கான அங்கீகாரத்திற்கு
அனைத்தையும் பொறுத்துக் கொண்டாலும்,
கடையில் பணத்திற்காக எடுக்கும் வில்லன்
அவதாரத்தை மிரட்டலாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
வெற்றி என்பது சாதாரணமாக கிடைப்பதில்லை,
அந்த வெற்றியை கடைசிவரை தன்வசப்படுத்திக் கொண்டு மட்டுமே கவனம் செலுத்தும்
கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சித்தார்த், அளவான நடிப்பு மூலம் தனது
அழுத்தமான மனநிலையை ரசிகர்களிடத்தில் நேர்த்தியாக
கடந்து செல்கிறார்.
நயன்தாரா, குழந்தைக்காக ஏங்கும் பெண்களை பிரதிபலிக்கும்
கதாபாத்திரத்தில் எதார்த்தமாக நடித்து கவனம் ஈர்க்கிறார்.
சித்தார்த்தின்
மனைவியாக நடித்திருக்கும் மீரா ஜாஸ்மினும் படத்தில் இருக்கிறார்.
அதை அவர்
சரியாக பயன்படுத்தி
மீரா ஜாஸ்மின் நான் மீண்டும் நடிக்க வந்துள்ளார் என்று சொல்லியிருக்கிறார்.
காளி வெங்கட், ஆடுகளம் முருகதாஸ் உள்ளிட்ட சிறு சிறு வேடங்களில்
நடித்திருப்பவர்களும் அளவான நடிப்பு மூலம்
திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் சக்திஸ்ரீ கோபாலனின்
இசையில் பாடல்களும், பின்னணி இசையும்
கதைக்களத்திற்கு பலம் சேர்க்கும் வகையில்
பயணிக்கிறார்.
ஒளிப்பதிவாளர் விரஜ் சிங் கோஹிலின் பணி
படத்தின் தரத்தை அதிகரிக்கச் செய்திருக்கிறது.
குறிப்பாக கிரிக்கெட் போட்டிகளை காட்சிப்படுத்திய விதம்,
சினிமாத்தனமாக அல்லாமல் நிஜ கிரிக்கெட் போட்டியை பார்க்கும் உணர்வை
கொடுத்திருக்கிறார்.
படத்தொகுப்பாளர் டி.எஸ்.சுரேஷ், கலை இயக்குநர்கள் என்.மதுசூதன்
மற்றும் சுவேதா சாபு சிரில் ஆகியோரது பணி படத்திற்கு மிகப்பெரிய
கூடுதல் சிறப்பை சேர்த்திருக்கிறார்கள்.
எழுதி இயக்கியிருக்கும் எஸ்.சஷிகாந்த்,
கிரிக்கெட் போட்டியை கதைக்களமாக கொண்டு
ஈகோவினால் வாழ்க்கையில் விளையாடும்
மனிதர்களையும், அவர்கள் சந்திக்கும் சோதனைகளையும்
விறுவிறுப்பாகவும், சுவாராஸ்யமாகவும் சொல்லியிருக்கிறார்.
உலகம் கொண்டாடும் வெற்றியாளர்கள் அந்த இடத்தை சாதாரணமாக
அடைந்து
விடவில்லை என்பதையும்,
வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமென்று நினைத்தால் மட்டும்
போதாது, அதற்கான முயற்சியை கடைசி வரை மேற்க்கொள்ள வேண்டும்
என்பதையும், அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
இயக்குநர் எஸ்.சஷிகாந்த்,
மூன்று பேர்களின் கதாபாத்திரங்களின் மனபோராட்டங்களை கிரிக்கெட்
விளையாட்டில் சேர்த்து அமைத்திருக்கும் திரைக்கதை
ஆரம்பம் முதல் இறுதி முடிவு வரை, அடுத்தது என்ன? என்ற
எதிர்பார்ப்புடன் பார்வையாளர்களை படம் பார்க்க வைக்கிறார்கள்.
மொத்தமா பார்க்கையில், இந்த ‘டெஸ்ட்’ மேட்ச் இல்லாமல் ஐபிஎல்
மேட்ச் போல் விறுவிறுப்பாகக் கொண்டு போய் இருக்கிறார்கள்.