
“டென் ஹவர்ஸ்” திரைப்படவிமர்சனம்…
நடித்தவர்கள் :- சிபிசத்யராஜ், கஜராஜ், ஜிவாரவி,ராஜ் ஐயப்பன், முருகதாஸ், திலீபன், உதயா, தங்கதுரை, சரவண சுப்பையா, சாருமிஸ்ஷா,
நிரஞ்சனா, மற்றும் பலர் நடித்துள்ளனர்…
டைரக்டர் :- இளையராஜா கலியப்பெருமாள்.
மியூசிக் :கே.எஸ்.
சுந்தரமூர்த்தி
ஒளிப்பதிவு :- ஜெய்கார்த்திக்
படத்தொகுப்பு:-
லாரன்ஸ் கிஷோர்.
தயாரிப்பாளர்கள் : துவின் ஸ்டிடுயோஸ்
கள்ளக்குறிச்சி அருகே வேலைக்குப்
போன இளம்பெண் ஒருவர் காணாமல்
போய் விடுகிறாள்.அதனால் அவளது குடும்பத்தார்
அங்கே உள்ள போலீசில் ஸ்டேஷனில் புகார் கொடுக்கின்றனர்.
அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணையை
தொடங்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிபி சத்யராஜ்,
அந்த பெண்ணை கடத்தப்பட்டிருப்பதை கண்டுபிடிப்பதோடு,
அப்பெண்ணை காப்பாற்ற பெரும் முயற்சியில் துவங்குகிறார்.
அந்த சமயத்தில், சென்னையில் இருந்து கோவை நோக்கி செல்லும்
தனியார் பேருந்து ஒன்றில் பெண் ரிப்போர்ட்டர் ஒருவர் தாக்கப்படுவதாக,
அந்த பேருந்து கள்ளக்குறிச்சி அருகே சென்றுக்
கொண்டிருக்கும்
போது போலீஸுக்கு ஒரு தகவல் வருகிறது.
இதனால், அந்த பேருந்தை தடுத்து நிறுத்தி போலீஸ்
சோதனை சாவடியில் அப்போது, புகார் கொடுத்த அளித்த அந்த இளைஞர்
அந்த பேருந்தில் கொலை செய்யப்பட்டு இறந்த நிலையில் இருக்கிறார்.
ஒரு பெண் கடத்தல் மற்றென்று பேருந்தில் ஒரு இளைஞர் கொலை, என இரண்டு
வழக்குகளையும் ஆக இந்த பத்து மணி நேரத்தில் முடிக்க வேண்டுமென்ற, என்ற கட்டாயத்தில்
இருக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர், சிபிராஜ் இந்த இரண்டு குற்றங்களில்
தொடர்புள்ள அந்த குற்றவாளிகளை எப்படி கண்டுபிடிக்கிறார்? என்பதை விபரமாகவும்
சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும்
சொல்லும் கதைக்களம் “டென் ஹவர்ஸ்”.
காஸ்ட்ரோ என்ற போலீஸ் இன்ஸ்பெக்டர்
கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிபி சத்யராஜ், காக்கி உடையில் மிடுக்காகவும்,
துடிப்பாகவும் நடித்திருக்கிறார்.
உடலுக்கு வேலை கொடுக்கும் ஆக்ஷன் காட்சிகள் அதிகம் இல்லை என்றாலும்,
மூளைத் திறன் வேலை கொடுக்கும் துப்பறியும் காட்சிகள் மூலம் இன்ஸ்பெக்டர்
கதாபாத்திரத்திற்கு 200 சதவீதம் நியாயம் சேர்த்திருக்கும் சிபி சத்யராஜ், அளவான
நடிப்பு மூலம் திரைக்கதையில் இருக்கும்
விறுவிறுப்பையும், வேகத்தையும்
ரசிகர்களிடத்தில் நேர்த்தியாக கடத்தியிருக்கிறார்.
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் கஜராஜ்,
மருத்துவராக நடித்திருக்கும் ஜீவா ரவி, பேருந்தில்
கொலை செய்யப்படும் இளைஞராக நடித்திருக்கும் ராஜ்
ஐயப்பன், முருகதாஸ், திலீபன் என அனைவரும் கொடுத்த
வேலையை சரியாக குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.
கதை முழுவதும் இரவில் நடந்தது போல, இரவு நேரக்
காட்சிகளை மிக நேர்த்தியாக படமாக்கியுள்ளனர்
ஒளிப்பதிவாளர் ஜெய் கார்த்திக், பேருந்து பயணம்,
தேசிய நெடுஞ்சாலை என அனைத்து காட்சிகளையும்
குறைவான அசல் வெளிச்சத்தில் மிக சிறப்பாக படமாக்கியுள்ளர்.
இசையமைப்பாளர் கே.எஸ்.சுந்தரமூர்த்தியின் பின்னணி
இசை ஆரம்பத்திலேயே திரைக்கதையோடு
பார்வையாளர்களை ஒன்றிவிட செய்துவிடுகிறது.
கதைக்களத்தின் இசை ஒலிக்கும் பீஜியமும் கவனம் ஈர்க்கப்படுகிறார்.
படத்தொகுப்பாளர் லாரன்ஸ் கிஷோர், காட்சிகளை
தொகுத்த விதம் திரைக்கதையை தொய்வில்லாமல் நகர்த்திச் செல்கிறது.
படம் ஆரம்பம் முதல் முடியும் வரை, எந்த இடத்திலும் தொய்வில்லாமல்
விறுவிறுப்பாக நகர்வதோடு, இதுல யார் குற்றவாளி?, இரண்டு
குற்றங்களுக்கு இடையே எதாவது தொடர்பு இருக்குமா? என்ற
கேள்விகளுக்கான பதிலை யூகிக்க முடியாதபடி
இயக்குநர் இளையராஜா கலியப்பெருமாள்
திரைக்கதையை நகர்த்திக் கொண்டு போயிருக்கிறார்.
கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் படம்
என்றால் முன்றும் இப்படி தான் இருக்க வேண்டும், என்று
சொல்லும் அளவுக்கு மிக திறமையாக
காட்சிக்கு காட்சி நிலையான திருப்பங்களோடு
படம் வேகமாகவும், விறுவிறுப்பாகவும் நகர்கிறது.
கதைக்களம்.
படத்தை மொத்தப்பார்த்தால், “டென் ஹவர்ஸ்”
நேர்த்தியாக சரியாக கணிக்கக் கூடிய கண்டுப் பிடிக்கும் ரேகைக் கண்ணாடி,