ருசிக்கலாம் வாங்க”- சீசன் 2
ஆயிரம் எபிசோட்களை கடந்து புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ‘ருசிக்கலாம் வாங்க’ நிகழ்ச்சி புத்தம் புதிய அரங்கில் புதுப்பொலிவுடன் ருசிக்கலாம் வாங்க சீசன் -2 வாக திங்கள் முதல் வெள்ளிகிழமை வரை மதியம் 12:30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியை ஆயிரம் எபிசோடுகளை தொகுத்து வழங்கிய மீனாட்சி தொகுத்து வழங்குகிறார்.
பிரபல சமையல் கலைஞர் யோகாம்பாள் சுந்தர் மற்றும் முன்னணி சமையல் கலைஞர்கள் பங்குபெறும் பாரம்பரிய உணவு வகைகள் முதல் பாஸ்புட் உணவு வகைகள் வரை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமையல் கலைஞர்கள் பங்கு பெறுகின்றனர். யோகாம்பாள் சுந்தர் பாரம்பரிய உணவு வகைகளையும், மற்ற முன்னணி சமையல் கலைஞர்கள் விதவிதமான சைவம், அசைவம் என நாவில் ருசி ஏற்படுத்தும் புது வகையான உணவு வகைகளையும் தயாரித்து காட்டுகின்றனர்.
இது மட்டுமின்றி அன்றாடம் உபயோகிக்கும் உணவு பொருட்களை பற்றிய நீங்கள் அறியாத விஷயங்களையும் சுவாரசியமான சமையல் குறிப்புகளும் இடம் பெறும்.