உலகின் தலைசிறந்த கேன்ஸ் திரைவிழாவின் அதிகாரபூர்வ போட்டியில் பங்கு பெற்ற தமிழ்ப்படம் “மாண்புமிகு பறை” !

Share the post

உலகின் தலைசிறந்த கேன்ஸ் திரைவிழாவின் அதிகாரபூர்வ போட்டியில் பங்கு பெற்ற தமிழ்ப்படம் “மாண்புமிகு பறை” !

“மாண்புமிகு பறை” திரைப்படம் கேன்ஸ் 2025 திரை விழாவில் அதிகார பூர்வ போட்டியில் பங்கேற்று ஜூரி மெம்பர்ஸால் படம் பார்க்கப்பெற்றது !!

சியா புரடக்க்ஷன்ஸ் சுபா & சுரேஷ் ராம் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் s. விஜய் சுகுமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில், திண்டுக்கல் லியோனி அவர்களின் மகன் லியோ சிவக்குமார் நடித்திருக்கும் திரைப்படம் “மாண்புமிகு பறை “.

ஒவ்வொரு வருடமும் உலகின் அனைத்து நாடுகளில் இருந்தும் கேன்ஸ் திரைவிழாவிற்கும் படைப்புகள் அனுப்பப்படும். கேன்ஸ் திரைவிழாவில் ஒரு திரைப்படம் திரையிடப்பட்டு பார்க்கப்படுவது, படைப்பாளிகளுக்கு உட்சகட்ட மதிப்பாக, மிகப்பெரும் பெருமைக்குரிய விசயமாக கருதப்படுகிறது.

இந்த வருடம் 2025 கேன்ஸ் உலகத் திரைப்பட விழாவில் அனுப்பப்பட்ட ஆயிரத்துக்கு மேற்பட்ட படங்களிலிருந்து ஒரு தமிழ்த்திரைப்படமாக மாண்புமிகு பறை திரைப்படம் இடம் பெற்றது தமிழ் திரைத்துறைக்கே பெரும் பெருமை சேர்க்கும் இந்நிகழ்வு, படக்குழுவினரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பறை இசையின் பெருமை சொல்லும் இப்படம் எல்லா இசையும் ஒன்று தான் ஆனால் மற்ற இசை வாத்தியங்களுக்கு கிடைக்கும் மரியாதையும் புகழும் மட்டுமே பறை இசைக்கு கிடைப்பதில்லை, அந்த பறை இசையின் பின்னணியை, வலியை,பெருமையை சொல்லும் படைப்பாக மாண்புமிகு பறை திரைப்படத்தை அறிமுக இயக்குநர் s. விஜய் சுகுமார் உருவாகியுள்ளார்.

இப்படத்தில் லியோ சிவக்குமார் நாயகனாக நடித்துள்ளார், காயத்ரி ரெமா நடித்துள்ளார். இவர்களுடன் கஜராஜ், சேரன்ராஜ், ரமா, அசோக்ராஜா, காதல் சுகுமார், ஜெயக்குமார், முத்தம்மா, ஆரியன், தர்மராஜ், நந்தகுமார், சரவணன் மற்றும் பலர் முக்கிய பாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு திருச்சி அருகே துறையூரில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. எளிய மக்களின் இசையும், வாழ்வும் அச்சு அசலாக இப்படத்தில் படமாக்கப்பட்டுள்ளது. தேனிசைத் தென்றல் தேவா இப்படத்திற்கு அருமையான இசையை வழங்கியுள்ளார்.

இப்படம் கேன்ஸ் திரைவிழாவில் பங்கு பெற்றதைத் தொடர்ந்து திரைஆர்வலர்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் இப்படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது.

தொழில் நுட்ப குழு
கதை, திரைக்கதை: சுபா &சுரேஷ் ராம் இயக்கம் :எஸ்.விஜய் சுகுமார்
ஒளிப்பதிவாளர் :ரா. கொளஞ்சி குமார் படத்தொகுப்பு :சி. எஸ். பிரேம் குமார் இசை :தேனிசை தென்றல் தேவா
நடன இயக்குனர் :ஜானி
பாடல்கள் :சினேகன்
கலை :விஜய் ஐயப்பன் தயாரிப்பு :சியா புரடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் :சுபா -சுரேஷ் ராம் இணை தயாரிப்பு:ஜெ. எப். நக்கீரன் &கவிதா
நிர்வாக தயாரிப்பாளர் : த. முரளி
மக்கள் தொடர்பு – AIM சதீஷ், சிவா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *