சிம்ஸ் மருத்துவமனையின் ‘ஹலோ டாக்டர் 2001 2001’ – திட்டம்! தமிழ்நாடு மருத்துவக்கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு. மா. சுப்ரமணியன் தொடங்கி வைத்தார்

சிம்ஸ் மருத்துவமனையின் ‘ஹலோ டாக்டர் 2001 2001’ – திட்டம்!தமிழ்நாடு மருத்துவக்கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு. மா. சுப்ரமணியன் தொடங்கி வைத்தார் சென்னை, மார்ச் 29, 2022: சென்னை மாநகரில் சிறந்த மருத்துவமனைகளுள் ஒன்றான சிம்ஸ் மருத்துவமனையில், ‘ஹலோ டாக்டர் – 2001 2001’ என்ற செயல்திட்டத்தை தமிழ்நாடு மருத்துவக்கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு. மா. சுப்ரமணியன் இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் தமிழ்நாடு அரசின் நலவாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் முதன்மைச் செயலர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் மற்றும் எஸ்ஆர்எம் குழுமத்தின் தலைவர் டாக்டர். பி. ரவி பச்சமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். சென்னையில், இல்லங்களில் நோயாளிகளுக்கான உடல்நலப் பராமரிப்பு சேவைகளோடு, இல்லங்களிலேயே மருத்துவ சிகிச்சையையும்  வழங்குகின்ற ‘ஹலோ டாக்டர் – 2001 2001’ செயல்திட்டமானது, முறையான கண்காணிப்பு மற்றும் சிகிச்சை நெறிமுறைகளோடு மெய்நிகர் (Virtual Consultation) முறையில் மருத்துவர்களது ஆலோசனையையும், செயல்நடவடிக்கையையும் வழங்கும் வகையில், சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சிம்ஸ் மருத்துவமனையில் கிடைக்கக்கூடிய அதே அளவிலான உடல்நல பராமரிப்பு சேவையை, நோயாளிகள் அவர்களது வீடுகளில் சௌகரியமாக இருந்துகொண்டே பெறமுடியும் என்பது இத்திட்டத்தின் சிறப்பம்சமாகும். வயது முதிர்ந்த நோயாளிகள் மற்றும் குழந்தைகளுக்கு சேவை வழங்குவதற்காக இச்செயல்திட்டம் தொடங்கப்பட்டிருக்கின்ற போதிலும், 50-க்கும் மேற்பட்ட வெவ்வேறு தீவிர நோய்நிலைகளுக்கு வீடு தேடி வருகிற மருத்துவர் மற்றும் செவிலியர் அடங்கிய ஒரு குழுவால் முறையாகவும், பாதுகாப்பாகவும் மற்றும் உரிய நேரத்திலும் சிகிச்சையளிக்கப்படும். மருத்துவமனை சிகிச்சைக்குப் பிறகு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும் நோயாளிகளுக்கு பின் தொடர் சிகிச்சையை வீட்டிலேயே வழங்குவதையும் தனது இலக்காக சிம்ஸ் மருத்துவமனை கொண்டிருக்கிறது. துல்லியமான சிகிச்சையையும், வழிகாட்டலையும் வழங்கும் ஒரு சீரிய முயற்சியாக பல்வேறு நோய்கள் பற்றி அறிந்து கொள்ளவும் மற்றும் மருத்துவர்களிடமிருந்து உரிய நேரத்தில் சரியான சிகிச்சை ஆலோசனையைப் பெறவும் ஹலோ டாக்டர் சேவையைப் பயன்படுத்துமாறும் சென்னைவாழ் மக்களை சிம்ஸ் மருத்துவமனை ஊக்குவிக்கிறது. இத்திட்டத்தினை தொடங்கி வைத்துப் பேசிய  தமிழ்நாடு மருத்துவக்கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு. மா. சுப்ரமணியன் கூறியதாவது: “நோயாளிகளுக்குத் தேவைப்படும் சிகிச்சை பராமரிப்பை உறுதிசெய்ய சமீபத்திய புத்தாக்கங்கள் மற்றும் தொழில்நுட்பத்தை திறம்பட பயன்படுத்துவதில் சிம்ஸ் மருத்துவமனை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஹலோ டாக்டர் – 2001…