கலர்ஸ் தமிழில் உங்களை மகிழ்விக்க “போட்டிக்கு போட்டி:R U Ready?? என்ற புதிய கேம் ஷோ ஆரம்பம்

கலர்ஸ் தமிழில் உங்களை மகிழ்விக்க “போட்டிக்கு போட்டி:R U Ready?? என்ற புதிய கேம் ஷோ ஆரம்பம்: ~ இந்நிகழ்ச்சியின் தொகுப்பாளியாக மக்கள் மனம் கவர்ந்த பாவனா பாலகிருஷ்ணன் களமிறங்குகிறார்2022 ஏப்ரல் 3 இரவு 7 மணிக்கு ஆரம்பமாகும் இந்நிகழ்ச்சியில் கலர்ஸ் தமிழின் முன்னணி நட்சத்திரங்கள் ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிறு தினங்களில், இரவு 8.00 மணிக்கு குதூகலமான இப்போட்டியில் மோதுகின்றனர் ~ சென்னை, ஏப்ரல் 1, 2022 :  தமிழ்நாட்டில் மிக வேகமாக வளர்ந்து வரும் பொது பொழுதுபோக்குச் சேனலான கலர்ஸ் தமிழ், தென்னிந்தியாவில் கேம் ஷோவை புதிய உச்சத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் போட்டிக்குப் போட்டி: R U Ready?? என்ற புத்தம் புதிய கேம் ஷோவின் மிகச்சிறப்பான தொடக்க ஒளிபரப்பிற்கு தயாராக இருக்கிறது.  பொழுதுபோக்கும், குதூகலமும் நிறைந்த இந்த கேம் ஷோ, 2022 ஏப்ரல் 3 இரவு 7 மணிக்கு கலர்ஸ் தமிழில் முதன் முறையாக ஒளிபரப்பாகிறது.  அதன்பிறகு, ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிறு தினங்களில், இரவு 8.00 மணிக்கு இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். தைரியசாலிகளுக்கே அதிர்ஷ்ட தேவதையின் அருள் கிடைக்கும் என்ற பொன்மொழியையொட்டி கலர்ஸ் தமிழின் பிரபல நட்சத்திரங்கள், ஒருவர் மற்றொருவருக்கு எதிராக பல்வேறு சவால்கள் கொண்ட இப்போட்டியில் களமிறங்குகின்றனர்.  இந்நிகழ்ச்சி, ஒரு லீக் வடிவ போட்டியாக நடத்தப்படுகிறது.  தமிழ்நாடெங்கும் பிரபலமான தொலைக்காட்சி தொகுப்பாளியான பாவனா பாலகிருஷ்ணன் இந்நிகழ்ச்சியை சுவைபட தொகுத்து வழங்குகிறார்.  கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான மற்றொரு பிரபல நிகழ்ச்சியான டான்ஸ் Vs டான்ஸ் சீசன் 2 -ன் தொகுப்பாளராக பங்கேற்ற பாவனா. கலர்ஸ் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். இப்போட்டியில் பிரபல நடன இயக்குனரான பாபா பாஸ்கர், சூப்பர் ஆடியன்ஸ் பொறுப்பில் செயல்படுவார்.  போட்டியில் எந்த குழு வெற்றி பெறுகிறது என்று தீர்மானிக்க பார்வையாளர்களின் வாக்குகளோடு இவரது வாக்கும் சேர்த்து கணக்கிடப்படும்.  இச்சேனலின் பிரபல நிகழ்ச்சிகளில் நடிக்கும் குஷ்பூ சுந்தர், ரேஷ்மா முரளிதரன், மதன், தர்ஷினி, லாஸ்லியா, நவீன், ஹேமா பிந்து போன்ற நடிக, நடிகைகள், இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு டாஸ்குகளை வெற்றிகரமாக செய்து முடிக்க, போட்டியில் மோதுகின்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில் இந்நிகழ்ச்சி உருவாக்கப்பட்டுள்ளது.  குழு A – ல் சில்லுனு ஒரு காதல், அபி டெய்லர், வள்ளி திருமணம் மற்றும் இதயத்தை திருடாதே நெடுந்தொடர்களின் நட்சத்திரங்கள்  மற்றும் குழு B -ல் இது சொல்ல மறந்த கதை, அம்மன் 3, நம்ம மதுரை சிஸ்டர்ஸ் மற்றும் மீரா ஆகிய நெடுந்தொடர்களின் நட்சத்திரங்கள் இடம்பெறுகின்றனர்.  சுழல்கின்ற ஒரு இயந்திரத்தின் லீவரை குழுக்கள் இப்போட்டியில் இழுக்கவேண்டும் அப்போது ஒரு சுழற்சியில் முடிவில் செய்யப்பட வேண்டிய ஒரு டாஸ்க் தெரியவரும்.  அதன்பிறகு அந்த டாஸ்க் கட்டளையை அக்குழுவின் போட்டியாளர்கள் செயல்படுத்த வேண்டும்.  நடனம், பாடல், புதிர்களுக்கு பதிலளிப்பது அல்லது பிற வேடிக்கையான செயல்பாடுகள் இதில் இடம்பெறுவது சுவாரஸ்யத்தையும், பரபரப்பையும் இன்னும் அதிகமாக்கும். ஒவ்வொரு குழுவும் அதற்கு வழங்கப்பட்ட டாஸ்குகளின் தொகுப்பை செய்து முடிக்கும்போது கேம் முடிவுக்கு வரும்.  மிக அதிக மதிப்பெண்கள் எடுத்த குழு, இந்நிகழ்ச்சியின் முடிவில் வெற்றியாளராக அறிவிக்கப்படும். இப்போட்டித் தொடரின் ஒவ்வொரு எபிசோடும் பாசத்தையும், ஒற்றுமையுணர்வையும் கொண்டாடுவதாக அமையும்.  கிண்டல், கேலியுடன் நகைச்சுவை துணுக்குகளும் இந்நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களையும் பரவசப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.  கலர்ஸ் தமிழின் பிசினஸ் ஹெட் திரு. ராஜாராமன் S, இந்த ரியாலிட்டி கேம் ஷோ தொடக்கம் பற்றி கூறியதாவது:…