‘ஸ்வீட்டி நாட்டி கிரேசி’ திரைப்பட விமர்சனம்…

Share the post

‘ஸ்வீட்டி நாட்டி கிரேசி’ திரைப்பட விமர்சனம்…

நடித்தவர்கள்:- திரிகன், ஸ்ரீஜிதா கோஷ், இனியா, ராதா, தம்பி ராமையா, சத்யன், ரவிமரியா, ஆலி,

ஜாவா சுந்தரேசன், மதன் பாபு, விஜய் டிவி தனசேகர், வினோத் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

டைரக்டர் : ராஜசேகர்.ஜி

மியூசிக்: அருணகிரி.

ஒளிப்பதிவு:-
விஜய்

படத்தொகுப்பு:-
கே.குமார்.

தயாரிப்பாளர்கள்:- அருண் விஷுவல்ஸ் – கோவை ரமேஷ்.

கதாநாயகன் த்ரிகுணும், கதாநாயகி ஸ்ரீ ஜீத்தா கோஷும் ஒரே

கல்லூரியில் படிக்கிறார்கள். இருவர் இடையே

ஏற்படும் நட்பு காதலாக மாறுகின்றன. காதல்

காமத்தில் முடிகிறது போது, கதாநாயகன் தான் ஏற்கனவே

அக்கா வயதுள்ள ஒரு பெண்ணுடனும்,

ஆண்டி வயதுள்ள ஒரு பெண்ணுடம் உடலுறவு வைத்துக் கொண்ட

உண்மையை காதலியிடம் சொல்கிறார்.

இதனால் இருவருமே கோபமடைகிறார். தன் காதலி, இவனை

இப்படியே விட்டு விட்டால், காமலீலைகளை தொடர்வான்.

என்பதால், கல்யாணம் செய்துக் கொண்டு கணவனாக்கிக் கொள்கிறார்.

தன் காதல் கணவனை அழைத்துக்

கொண்டு கோத்தகிரியில் உள்ள தன் வீட்டுக்கு

கதாநாயகி செல்கிறார். குடும்பம் இல்லாத தனக்கு,

தன் மனைவி மூலம் கிடைக்கப் போகும் குடும்பத்தை காண ஆவலோடு செல்லும்

த்ரிகுண், அங்கு தன் மனைவியின் அக்கா இனியா மற்றும் அம்மா ராதாவை பார்த்ததும்,

பேரதிர்ச்சியில் மிரளுகிறார். அவரது அதிர்ச்சிக்கான

காரணம் என்ன ?, அதிர்ச்சியில் இருந்து மீண்டாரா? இல்லையா?அவர்கள் மூலம் மீண்டும் மீண்டும் அதிர்ச்சியை

எதிர்கொண்டாரா? இல்லையா?என்பதை அடல்டு

காமெடியாக சொல்வதது தான் “ஸ்வீட்டி நாட்டி கிரேசி”. கதைக்களம்.

இந்த மாதிரி ஒரு கதையில் கதாநாயகனாக

நடித்திருக்கிறார் த்ரிகுணின் தைரியத்தை நிச்சயம் பாராட்டியாக வேண்டும். அடல்டு

காமெடி படத்தில் நடிப்பது பெரிதல்ல, ஆனால் இப்படிப்பட்ட ஒரு சில்மிஷமான

சிந்தனையோடு எழுதப்பட்ட கதையில் பயணித்திருப்பது

பெரிய விஷயம் மட்டும் அல்ல, கதாநாயகனுக்கு மூச்சு முட்டவும் செய்திருக்கிறார்கள்

கதநாயகியாக நடித்திருக்கிறார்
ஸ்ரீ ஜீத்தா கோஷ், தோழிகளின் அறிவுரை மூலம்

காதலனை கட்டிலில் சாய்ப்பதும், அவர் செய்த தவறை மன்னித்து மீண்டும்

மீண்டும் அவருடன் நெருக்கம் காட்டுவதும் என்று,

இப்படி ஒரு பெண் காதலியாக மனைவியாகவும் அமைவது தான்

இறைவன் கொடுத்த வரம், என்று பார்வையாளர்களை ஏங்க வைத்திருக்
கிறார்கள்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த மாதிரி திரையில் தன் முகத்தை மட்டும் இல்லாமல் உடல் அங்கங்களையும் காட்டி

பார்வையாளர்களை கிரங்கடிக்கும் இனியா, உதட்டுடன் உதடு முத்தமிட்டு,

”பாடம் சொல்லிக் கொடுப்பது”, என்று கதாநாயகனிடம் கேட்கும் டியூசன்
டீச்சராக வருகிறார்

இளைஞர்களை கவர்ந்து இழுக்கிறார்

இளமையாக இருந்த ராதாவை இப்படி ரசித்திருக்க மாட்டார்கள் போல,

அம்மணி இந்த படத்தில் ஆண்டியாக வந்து அதிரடியடியாக இளமையை காட்டி மயக்கி இருக்கிறார்.

தம்பி ராமையா, சத்யன், ஆலி, ரவி மரியா, ஜாவா

சுந்தரேசன், மதன்பாபு, விஜய் டிவி தனசேகர், வினோத் என

இந்த படத்தில் ஏகப்பட்ட காமெடி நடிகர்கள் இருப்பினும், காம நெடி அதிகம்

இருப்பதால், இவர்களது காமெடி ‌ லூட்டி அதிகமாக தெரிகிறது.

சி.விஜயின் ஒளிப்பதிவில் மூன்று நாயகிகளும் பளிச்சென்று இருக்கிறார்கள்.

அவர்களது பிரகாசம் காட்சிகளிலும் இருப்பதால், படம் முழுவதும் ஒரே வண்ணமயம் தான்.

அருணகிரியின் இசையில் பாடல்கள் அனைத்தும் கமர்ஷியல் அம்சங்களோடு ஆட்டம் போட வைக்கிறது.

பின்னணி இசை காம காட்சிகளை தூக்கலாக காட்டியிருக்கின்றன.

படத்தொகுப்பு கே.குமார், அதிஷ்ட்டசாலி தான். பார்வையாளர்
களுக்கு இவ்வளவு காமத்தை காட்டியிருக்கிறார்

என்றால், அவர் எவ்வளவு பார்த்திருப்பார்கள்…!

எழுதி இயக்கியிருக்கிறார் ராஜசேகர்.ஜி, அடல்டு காமெடி என்ற பெயரில்

அசிங்கமான சிந்தனையை, ஆபாசமாக சொல்லியிருப்பினும்அதை இலை மறை காய் மறையாக

சொல்லுவதுடன் காமெடி பின்னணியில் சொல்லி

இளைஞர்களை ரசிக்க வைத்திருக்
கிறார்கள்.

யார் என்று தெரியாமல் கதாநாயகன் செய்ததை ஏற்றுக்கொண்டு உண்மை தெரிந்த

பிறகு விலகி செல்ல முயற்சிக்கும் கதாநாயகனுடன், தொடர்ந்து பழக துடிப்பது போல் பெண்

கதாபாத்திரங்களில் வடிவமைத்திருப்பது, காமத்தை தாண்டிய வக்கிரத்தை

வெளிப்படுத்தும் விதமாகவும், உறவு முறைகளை கொச்சைப்படுத்தும்

விதமாக இருப்பினும், அதற்கு காமெடி என்ற போர்வையை போர்த்தி,

மேலோட்டமாக சொல்லி சமாளித்திருக்கின்ற

விதம் படத்தை முகம் சுழிக்காமல் பார்க்க வைத்திருக்கிறார் கள்.

படத்தில் இடம்பெற்றிருக்
கின்ற இரட்டை அர்த்த வசனங்கள், சில நேரடியான

வசனங்களும் இளைஞர்களை சிரிக்க வைத்து

குஷிப்படுத்தும் விதமாக இருக்கின்றன. படத்தின் மையக்கரு அதிர்ச்சியளிக்கும்

விதத்தில் இருப்பினும், அதை கமர்ஷியலாக இளைஞர்கள் கொண்டாடும்

விதமாக சொல்லியிருப்ப

துடன, கவர்ச்சிக்கும், ஆபாசத்திற்கும் இடையே இருக்கும்

எல்லையை சரியாக கணித்து காட்சிகளை வடிவமைத்த

இருக்கிறார் இயக்குநர் ராஜசேகர்.ஜி, படம் தொடங்கியது முதல் முடியும் வரை

திரையரங்கில் சிரிப்பு சத்தமும், கைதட்டல் சத்தமும்

ஒலித்துக் கொண்டே இருக்கின்றன இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.

படம்‌ பார்த்தத்தில், “ஸ்வீட்டி நாட்டி கிரேசி” அம்மா, அக்கா, தங்கை, இவர்களுடன் மூவருடன் காதல்,

திருவிளையாடல் ஆடும் கதாநாயகன் “ஸ்வீட்டி நாட்டி

கிரேசி” விளையாட்டு அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *