
எஸ்.வி. சேகரின் நாடக பிரியாவின் 7000 ஆவது நாடகம் !
முதலமைச்சர் நினைவு கேடயம் வழங்கி வாழ்த்தினார்!
எஸ்.வி.சேகரின் நாடக பிரிய குழுவின் சார்பில் 7000 மாவது நாடகம் தமிழக முதல்வர் தலைமையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நாரத கான சபாவில் நடை பெற்றது. எஸ்.வி.சேகரின் நாடக குழுவினரை பாராட்டி வாழ்த்தி பேசினார்.




எஸ்.வி. சேகர் வரவேற்று பேசினார். எஸ்.வி.சேகரின் மகனும்
நடிகருமான அஸ்வின் நன்றி தெரிவித்து பேசினார்.
விழாவில் மாண்புமிகு அமைச்சர்கள் துரைமுருகன், மு.பெ.சாமிநாதன், சட்டமன்ற உறுப்பினர் மயிலை. த , வேலு, மண்டல குழு தலைவர் நே. சிற்றரசு, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் என். இராமசாமி என்கிற முரளி ராமதாராயணன், தயாரிப்பாளர்கள் கருணாகரன், பன்னீர்செல்வம், நடிகர்கள் ஏ.எல். உதயா, ஜீவா, அன்புதுரை உட்பட திரை உலக பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்
.




எஸ்.வி.சேகர், குட்டி பத்மினி மற்றும் மக்கள் தொடர்பாளர்கள் ஈ.வெ.ரா மோகன், என். விஜயமுரளி, கிளாமர் சத்யா உட்பட நாடக குழுவில் உள்ள நடிகர், நடிகையர் தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நினைவு கேடபங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
எஸ்.வி. சேகரின் தந்தையின் 100வது ஆண்டை முன்னிட்டு அவரது சமூக பணியையும், ரத்ததான சேவையையும் பாராட்டி பேசிய முதல்வர் அவர் வாழ்ந்த தெருவிற்கு அவருடைய பெயரை சூட்டுவதாக அறிவித்தார்.
எஸ். வி. சேகர் என் தந்தை கலைஞரிடமும், என்னிடமும் மிகவும் பாசமாக இருப்பார். அவரும் என் குடும்பத்தை சேர்ந்தவர் தான் . அது நாங்கள் கலைக் குடும்பத்தை சார்ந்தவர்கள் என்பதை குறிப்பிட்டு சொன்னேன். எனது தந்தையார் சினிமாவில் இருந்தது உங்களுக்கு தெரியும். நான் குறிஞ்சிமலர் என்ற சீரியலிலும், திரைப்படங்கள் சிலவற்றிலும் நடித்திருக்கிறேன். சேகரும் நாடகம் மற்றும் சினிமாவில் நடிக்கிறார். எனவே நாங்கள் கலைக்குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான்.
சேகர் வைத்த கோரிக்கையை நான் நிறைவேற்ற கடமைப் பட்டுள்ளேன். இவ்வாறு முதல்வர் பேசினார்.