” சுமோ” திரைப்பட விமர்சனம்…
நடித்தவர்கள் : – சிவா, பிரியா,( ஜப்பான் நடிகர். யோஷினோரி தாஷிரோ) யோகி பாபு , சதீஷ், வி.டி.வி.கணேஷ்,
நிழல்கள் ரவி, சுரேஷ் சக்ரவர்த்தி, சேத்தன்,
ஸ்ரீநாத், பெசன்ட் ரவி மற்றும் பலர் நடித்துள்ளனர்…
டைரக்ஷன் :- எஸ்.பி. ஹோசிமின்.
மியூசிக் :- நிவாஸ்.கே.
பிரசன்னா.
ஒளிப்பதிவு:- ராஜிவ் மேனன்.
தயாரிப்பாளர்கள் : – வேல்ஸ் பிலிம்,
இன்டர் நேஷனல் லிமிடெட் – ஐசரி. கே.கணேஷ்

சென்னை கோவளத்தில் உணவகம் நடத்துபவர் .(ஜாக்) வி.டி.வி.கணேஷ்.
அவர் காரில் வரும் போது குடித்து விட்டு வருகிறார்.
செக்போஸ்ட்டில் போலீஸ் காரரிடம் மதுகுடித்து விட்டு
வாகனம் ஒட்டிய வழக்கில் ஊதச் சொல்லி மாட்டிக் கொள்கிறார்.
அவர் காரில் ஒரு பேட்டியில் என்ன இருக்கிறது.என்பதை சொல்லவும் திறந்து காட்டவும் முடியாது.என்கிறார்.

இதுல பெரிய கதை இருப்பதை சொல்ல ஆரம்பிக்கிறார்.
வி.டி.வி. கணேஷ் அவரது உணவகத்தில் பணிபுரியும்.சிவா
காலையில் கோவளம் கடற்கரைக்கு சர்ஃபிஸ் செல்லும் போது .
கடல் அலைகளால் அடித்து வரப்பட்டு யோஷினோரி ஜப்பான் நாட்டின்
ஒருவர் கரையோரம் ஒதுங்கியிருப்பதை பார்த்து.
அதிர்ச்சியடைகிறார்.
.
அவர் உயிரோடு இருக்கிறார்.
என்பது தெரியவருகிறது.
சிவா அவரை தான் இருந்த இடத்தில் தங்கவைத்து அவருக்கு
தேவையான உணவு உடை உறைவிடம் அனைத்து செய்து தருகிறார் சிவா.
இவர் வெளி நாட்டவர் அவர் எந்த நாட்டவர்
என்ன என்பதை விவரங்களை தெரியாதவர்,
அவர் யார்? என்ன என்பது இந்த நபருக்கு மூளை சுவாதீனம் நினைவுகள்
வரவில்லை, சிவா அவருக்கு
எல்லா வகையான வசதிகள் செய்து பராமரித்துவருகிறார்
இதற்கிடையே, கரையோரம் ஒதுங்கிய நபர் ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர். என்பதும்,
அந்நாட்டில் அவர் மிகப்பெரிய சுமோ
மல்யுத்த வீரர் என்பதும் சிவாவுக்கு தெரிய வருகிறது.

அவர் அவரது சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கும் முயற்சியில் சிவா ஈடுபடுகிறார்.
ஆனால், சுமோ வீரர் மீண்டும் ஜப்பானுக்கு வருவதை விரும்பாத ஒரு கும்பல், அவரை
அங்கு வரவிடாமல் தடுக்க முயற்சிக்கிறது,
அவர்களது முயற்சிகளை எப்படி முறியடித்து, சுமோ
வீரரை மீண்டும் ஜப்பானுக்கு சிவா அழைத்துச் சென்றாரா? இல்லையா? அவரை
ஜப்பானுக்கு வர விடாமல் தடுக்கும் கும்பல் யார்? எதற்காக அவரை வரவிடாமல் தடுக்கிறார்கள்,
என்பதை கமர்ஷியலாக கதையாக சொல்வதே
“சுமோ”படத்தின் கதைக்களம்.
அகில உலக சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை தனக்கு தானே சூட்டிக்கொண்டு மிர்ச்சி சிவா
வழக்கம் போல் நடிக்காமல் பேசிக்கொண்டு காட்சிகளை
நடிக்க தான் எனக்கு தெரியாது.
மனுஷனுக்கு காதல் கூட செய்யத் தெரியவில்லை. என்றால் என்ன
அதனால், தான் அவருக்கும், ஹீரோயினுக்கு
பெரிய அளவில் ரொமான்ஸ் காட்சிகள் வைக்கவில்லை.
கதாநாயகியாக நடித்திருக்கும் பிரியா
ஆனந்த், அழகு மற்றும் நல்ல நடிக்க கூடிய நடிகை
அவரை சரியாக பயன்படுத்தாமல்
அவரை சும்மா வந்து போகிறார். சரியான கதாபாத்திரத்தில்
நடிக்க வைக்க வில்லை என்ற பெரிய ஏமாற்றம்…
யோகி பாபு, சதீஷ், விடிவி கணேஷ் ஆகியோர் செய்யும்
காமெடி போதாது என்று, நிழல்கள் ரவி, சேத்தன், ஸ்ரீநாத்,
சுரேஷ் சக்கரவர்த்தி என நடிகர்கள் நடித்திருக்கிறார்கள் இருந்தும்
காமெடியர்கள் இவ்வளவு நடிகர்கள் இருந்ததும் கதைக்கு ஏற்பே
கதாபாத்திரம் அமையவில்லை.
நிவாஸ் கே.பிரசன்னா
இசையில், பிள்ளையார் பற்றிய பாடல் மட்டும் திரும்ப
கேட்கும்படி இருக்கு மற்ற பாடல்கள்
திரைக்கதைக்கு ஏற்பே பயன்பட்டிருக்கிறது. பின்னணி இசை சுமாராக இருக்கிறது.
ஒளிப்பதிவு ராஜீவ் மேனன் என்று டைடில் கார்டில் பேர் மட்டும்
வருகிறது. அவரது கேமராவுக்கு வேலை
கொடுக்கும் அளவுக்கு படத்தில் காட்சிகள் இல்லை.
நடிப்பதோடு, படத்தின் திரைக்கதை மற்றும் வசனம்
எழுதியிருக்கும் சிவா, காமெடி வசனங்கள்
குறைவாக தந்திருக்கிறார்.
எப்படியாவது யோகி பாபு மற்ற
நடிகர்களை வைத்து சமாளித்து விடலாம் என்று முயற்சித்திருக்கிறார்
ஆனால் அங்கேயும் திரைக்கதையாசிரிய
ராக இருந்ததும் பெரிய தடுமாற்றம் கொஞ்சம் தெரிகிறது.
கதை எழுதி இயக்கியிருக்கும் எஸ்.பி.ஹோசிமின்
ஒரு கமர்ஷியல் படத்தில் கமர்ஷியல் காட்சி அம்சங்கள் இல்லாமல் இயக்கியிருக்கிறார்.
காமெடி தான் திரைக்கதையின் பலம் என்றாலும், அதை சரியாக
பயன்ப்படுத்த வில்லை. குறிப்பாக பிரியா ஆனந்த் போன்ற ஒரு ஹீரோயினை
வைத்துக் படம்
முழுவதையும் அவரை வைத்து சும்மா கதையை நகர்த்தி செல்வது
ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றம்.
சுமோ மல்யுத்த வீரரை சுற்றி கதை நகர்ந்தாலும், அந்த வீரருக்கான
பின்னணி கதையில் வரும் வழக்கமான சுமோ விளையாட்டு போட்டி பற்றிய
கூடுதல் மற்றும் யாரும் அறியாத தகவல்கள் படத்தில் இல்லாதது, குறைவு
திரைக்கதையின் மிகப்பெரிய பலவீனம்.
மொத்ததில் ‘சுமோ’ ஒரு மெழுகு பொம்மை…கதை
தான்
குழந்தைகள்.சிறுவர், சிறுமியர், பார்த்து மகிழல்லாம்.