ஸ்டிர் பிரை

பிரபலமான நட்சத்திர ஹோட்டல்களில் சைவம், அசைவம் என விதம் விதமான உணவு வகைகளை ருசித்து சாப்பிட்டிருப்போம்.. ஆனால் அவர்களின் சமையற்கூடம் எப்படி இருக்கும், ருசியான உணவுகளை எப்படி தயாரிக்கிறார்கள் என்பதை நம்மால் பார்க்க முடியுமா..? அதை நமக்கு சாத்தியமாக்குகிறது பெப்பர்ஸ் டிவியின் ‘ஸ்டிர் பிரை’ நிகழ்ச்சி..

‘ஸ்டிர் பிரை’ நிகழ்ச்சியில் அனைத்து வகையான நட்சத்திர ஹோட்டல்கள், அதுமட்டுமல்லாது சுவையான உணவுகளுக்கு பெயர் போன எளிமையான உணவகங்களில் கூட, உணவுகள் தயாரிக்கும் முறையை அருகில் இருந்தே படமாக்கி ஒளிபரப்புகிறார்கள்.

இந்த நிகழ்ச்சியை பார்க்கும் மற்ற ஹோட்டல் நிர்வாகத்தினரும் தங்களது ஹோட்டலுக்கு வாருங்கள் என அழைப்பு விடுப்பது தான் இந்த நிகழ்ச்சியின் வெற்றியே. பெப்பர்ஸ் டிவியில் திங்கள் கிழமை காலை 12:00 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை விஜே கார்த்தி சுவாரஸ்யமாக தொகுத்து வழங்குகிறார்.