ஸ்டார்’ திரை விமர்சனம் !!
ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் & ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா
தயாரித்து , எலன் இயக்கி கவின் நடிப்பில் வெளி வந்திருக்கும் படம் ஸ்டார்
லால், அதிதி போஹங்கர், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம், மாறன், காதல் சுகுமார், நிவேதிதா ராஜப்பன், ராஜா ராணி பாண்டியன், சஞ்சய் ஸ்வரூப், தீரஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்
இசை: யுவன் சங்கர் ராஜா
எடிட்டர் பிரதீப்
பள்ளி பருவத்தில் இருந்தே நடிகராக வேண்டும் என்ற கனவோடு நாயகன் கவின்
.தன்னால் முடியாததை தன் மகன் செய்வான், என்ற நம்பிக்கையில் அவரது கனவுக்கு துணை நிற்கா தந்தை லால்.
அம்மா அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க, அவரது ஆசைக்கு பொறியியல் படித்து முடிக்கும் கவின், தனது நடிப்பு கனவடோடு தொடர்ந்து பயணிக்கிறார்.
அவரது கனவை நினைவாக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கும் போது, காலம் அவரது வாழ்க்கையை புரட்டிப்போடுகிறது..
கவினின் நடிப்பும் வசனமும் நடனமும் இன்று இளைஞர்களுக்கு ஏற்ற மாதிரி உள்ளது
கவினின் தந்தையாக நடித்திருக்கும் லால் இயல்பான நடிப்பு மூலம் அனைவரும் மனதிலும் இடம் பிடித்திருக்கிறார்,
கவினின் அம்மாவாக நடித்திருக்கும் கீதா கைலாசம் சில இடங்கலில் அதீத நடிப்பை வெளிப்படுத்துவதை தவிர்த்திருக்கலாம்.
மாறன், காதல் சுகுமார், நிவேதிதா ராஜப்பன், தீப்ஸ், ராஜா ராணி பாண்டியன், சஞ்சய் ஸ்வரூப், தீரஜ் கதாபாத்திரம் ஏற்ற சிறப்பாக நடித்துள்ளனர்
கனவுகளுக்காக இறுதி வரை போராடும் அனைவரும் ஸ்டார் தான் என்ற ஒன்லைனை வைத்துக்கொண்டு இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் ஒரு படத்தை கொடுத்திருக்கும் இயக்குநர் இளனை நிச்சயம் பாராட்டியாக வேண்டும்.
யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் திரும்ப திரும்ப கேட்க வைக்கிறது. அதிலும், 80-ஸ் காலத்து ஸ்டைலில் போடப்பட்ட பாடல்கள் செம. பின்னணி இசை சில இடங்களில் தடுமாறினாலும், படத்தின் பெரும்பாலான காட்சிகளுக்கு உயிர்நாடியாக பயணித்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் எழில் அரசு.கே-வின் கேமரா, கவின் என்ற நடிகரின் பல பரிணாம நடிப்பை மிக நேர்த்தியாக ரசிகர்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறார்.
80-களின் இறுதியில் தொடங்கும் கதையை படிபடியாக தற்போதைய காலக்கட்டத்திற்கு நகர்த்தி வரும் ஒளிப்பதிவாளர் எழில் அரசின் கோணங்களும், வண்ணங்களும் திரைக்கதைக்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.
எடிட்டர் பிரதீப் இ.ராகவ் இயக்குநரின் கூட்டணி சிறப்பு
மொத்தத்தில்
*இந்த ‘ஸ்டார் கவினை சூப்பர் ஸ்டாராக ஜொலிக்கவைக்கும் !!*