கலர்ஸ் சண்டே கொண்டாட்டம் நிகழ்ச்சியில் அரங்கை அன்பால் அலங்கரித்து, காதலால் அதிர வைக்கும் நட்சத்திர ஜோடிகள்


~ கேளிக்கை, மகிழ்ச்சி மற்றும் அன்பின் கொண்டாட்ட அனுபவத்தை கண்டுரசிக்க 2021 மே 2 ஞாயிறன்று இரவு 7.00 மணிக்கு கலர்ஸ் தமிழ் அலைவரிசையை மறவாது டியூன் செய்யுங்கள்:



சென்னை, 30 ஏப்ரல் 2021: கலர்ஸ் தமிழ் அலைவரிசையின் மிகப்பிரபலமான நிகழ்ச்சியான கலர்ஸ் தமிழ் சண்டே கொண்டாட்டம், காதல், அன்பு மற்றும் உறவுகளின் உன்னதமான உணர்வை கொண்டாடும் வகையில் சின்னத்திரையைச் சேர்ந்த பிரபல நட்சத்திர ஜோடிகள் சிலரை ஒன்றாக ஓரிடத்தில் அழைத்து வருகிறது. மக்களின் மனம் கவர்ந்த இந்த நிகழ்ச்சியின் ரசிகர்களை இன்னும் ஆனந்தத்தில் ஆழ்த்த கிளர்ச்சியூட்டும் கேம்கள் மற்றும் செயல் நடவடிக்கைகளில் இந்த நட்சத்திர ஜோடிகள் ஈடுபடவிருக்கின்றனர். உங்களது இதயங்களை வெல்வதற்கு இந்த ஜோடிகள் தயாராக இருக்கின்ற நிலையில் குதூகலமான இந்நிகழ்வை அனுபவித்திட 2021 மே 2 ஞாயிறன்று இரவு 7.00 மணிக்கு கலர்ஸ் தமிழ் அலைவரிசையை தவறாமல் காணுங்கள்.
நட்சத்திர ஜோடிகளின் ரொமான்ஸ்: உற்சாகம் ததும்பும் சுவாரஸ்யமான பேச்சினால் நிகழ்ச்சியை சிறப்பாக்கும் பரத் மற்றும் சஸ்டிகா தொகுத்து வழங்குகின்ற இவ்வார எபிசோடில் நிஜவாழ்க்கையில் தம்பதியராக திகழும் நட்சத்திரங்கள் ஆனந்தி மற்றும் அஜய், சத்யா மற்றும் ராஜேஸ்வரி, ஃபிராங்க் மற்றும் ப்ரீத்தி, சுபர்ணன் மற்றும் பிரியா, தனலட்சுமி மற்றும் சிவா ஆகியோர் இந்தவார சிஎஸ்கே நிகழ்ச்சியின் எபிசோடில் பரபரப்பான மற்றும் கிளுகிளுப்பான தருணங்களின் மூலம் பார்வையாளர்களை தன்வசப்படுத்துவது நிச்சயம். சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்கும் இந்த நட்சத்திர ஜோடிகளின் கேம் விளையாடும் திறன்களையும் இவ்வார எபிசோடு வெளிப்படுத்தும்.
சவால்களின் சுவாரஸ்யமான கலவை: லவ் மீட்டர்களைப் பயன்படுத்தி, அன்பையும், காதலையும் அளவிடுவது, புஷ்-அப் செய்வது அல்லது தங்களது பார்ட்னர்களை உயரே தூக்குவது, தங்களது பார்ட்னர்களின் முகத்தை ஓவியமாக வரைவது மற்றும் இடைவிடாமல் சிரிப்பை வரவழைக்கும் நடவடிக்கைகள் என பல்வேறு கேம்களின் சரியான கலவையாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்தவார எபிசோடு, அனைவராலும் பெரிதும் ரசிக்கப்படும் என்பது நிச்சயம்.
ஆனந்தமான காதல் விருந்து: இந்த நட்சத்திர ஜோடிகளுக்கிடையே நிலவுகின்ற அற்புதமான பிணைப்பையும், கெமிஸ்ட்ரியையும் இந்நிகழ்ச்சி நேர்த்தியாக வெளிப்படுத்தும். அதுமட்டுமல்ல; அவர்களது வாழ்க்கையிலிருந்து சில மகிழ்ச்சியான நிகழ்வுகள் மற்றும் தருணங்களை வெளிப்படுத்துவதால், இந்நிகழ்ச்சி இன்னும் கூடுதல் சுவாரஸ்யம் பெறுகிறது.
கேளிக்கை மற்றும் பொழுதுபோக்கின் உச்சகட்டமான இந்நிகழ்ச்சியை கண்டு மகிழ, இந்த ஞாயிறு மே இரண்டாம் தேதி இரவு 7:00 மணிக்கு கலர்ஸ் தமிழ் கொண்டாட்டம் நிகழ்ச்சியை, கலர்ஸ் தமிழ் அலைவரிசையில் டியூன் செய்ய மறவாதீர்கள். அனைத்து முன்னணி கேபிள் வலையமைப்புகளிலும் மற்றும் சன் டைரக்ட் (CHN NO 128), டாடா ஸ்கை (CHN NO 1555), ஏர்டெல் (CHN NO 763), டிஷ் டிவி (CHN NO 1808) மற்றும் வீடியோகான் D2H (CHN NO 553) ஆகிய அனைத்து டிடீஹெச் தளங்களிலும் கலர்ஸ் தமிழ் அலைவரிசை கிடைக்கப்பெறுகிறது.1808) தங்களது வசதிக்கேற்ப எந்த நேரத்தில் இந்நிகழ்ச்சியை காண பார்வையாளர்கள் VOOT – ஐ டியூன் செய்யலாம்.