சோனி BBC எர்த், சர் டேவிட் அட்டன்பரோ எழுதிய ‘மம்மல்ஸ்’-ஐ வெளியிடவுள்ளது

Share the post

சோனி BBC எர்த், சர் டேவிட் அட்டன்பரோ எழுதிய ‘மம்மல்ஸ்’-ஐ வெளியிடவுள்ளது

சென்னை: அனைவராலும் மிகவும் விரும்பப்படும் அசல் பொழுதுபோக்கு சேனல்களில் ஒன்றான சோனி BBC எர்த், புகழ்பெற்ற சர் டேவிட் அட்டன்பரோ எழுதிய முற்றிலும் மாறுபட்ட ஒரு தொடரான மம்மல்ஸ்-ஐ திரையிடத் தயாராக உள்ளது.

அக்டோபர் 21, 2024 அன்று திரையிடப்படும், இந்த ஆறு பாகங்கள் கொண்ட இத்தொடரானது, பாலூட்டிகள் ஒரு மாறிவரும் கிரகத்தில் வாழ்வதால், அவற்றின் மாறுபட்ட நடத்தைகள், தழுவல்கள் மற்றும் நமது சுற்றுச்சூழல் அமைப்புகளில் முக்கிய பங்கு ஆகியவற்றைப் படம்பிடித்து, அவற்றின் இந்த அசாதாரண உலகிற்குள் பயணிக்கிறது

.சர் டேவிட் அட்டன்பரோ எழுதி அமைத்த, மம்மல்ஸ், ஆறு பாகங்கள் கொண்ட ஒரு தொடராகும். இது பாலூட்டிகளின் வாழ்க்கையின் அதிசயிக்கத்தக்க பன்முகத்தன்மையைக் காண்பிக்கும் வகையில், உலகம் முழுவதும் ஒரு பரபரப்பான பயணத்தில் பார்வையாளர்களை இட்டுச் செல்லும். ஆப்பிரிக்காவின் கம்பீரமான யானைகள் முதல் இமயமலையின் எளிதில் காண இயலாத பனிச்சிறுத்தைகள் வரை, மற்றும் கடலின் ஆழம் முதல் பனிப்பிரதேசம் டன்ட்ரா வரையில், இத்தொடர் ஒரு கண்கவர் உயிரினங்களின் வரிசையை அறிமுகப்படுத்துகிறது;

அவை ஒவ்வொன்றும் சொல்வதற்கு அதன் தனித்துவமான கதையுடன் உள்ளது. இதன் பிரமிக்க வைக்கும் ஒளிப்பதிவானது, இந்த உயிரினங்கள் தொடர்ந்து மாறிவரும் இவ்வுலகில் வாழ்வதற்கு, வேட்டையாடுதல் மற்றும் உணவு தேடுதல் முதல் தங்கள் குஞ்சுகளை வளர்ப்பது வரையிலான குறிப்பிடத்தக்க உத்திகளைக் காண்பித்து, பாலூட்டிகளின் சுற்றுச்சூழலுடனான சிக்கலான உறவுகளின் மூலம் பார்வையாளர்களை அழைத்துச் செல்லும். அட்டன்பரோவின் திரைக்கதையானது கதைகளுக்கு வலு சேர்ப்பதுடன், இந்த குறிப்பிடத்தக்க உயிரினங்களை வரையறுக்கும் மீள்சக்தி மற்றும் புத்திக் கூர்மை ஆகியவற்றை எடுத்துக்காட்டுகிறது.

அக்டோபர் 21, 2024 அன்று மதியம் 12:00 மணி மற்றும் இரவு 09:00 மணிக்கு, சோனி BBC எர்த்-இல் பிரத்தியே ஒளிபரப்பு செய்யப்படும் மம்மல்ஸ்-ஐப் பார்த்து, விலங்கு சாம்ராச்சியத்தின் இதுவரை காணப்படாத அதிசயங்களைக் கண்டு ரசிப்பதுடன், உயிர்வாழ்தல், புத்திசாலித்தனம் மற்றும் தக அமைதல் ஆகியவற்றை மையமாகக் கொண்டிருக்கும் ஒரு உலகில் மூழ்கிவிடுங்கள்.கருத்துகள்துஷார் ஷா, ‘பிஸினெஸ் ஹெட், ஹிந்தி திரைப்படங்கள், ஆங்கிலம், பெங்காலி, மராத்தி, இன்ஃபோடெயின்மென்ட் சேனல்கள் & சீஃப் மார்க்கெட்டிங் ஆபிசர் (CMO), சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா (SPNI)”விலங்கு சாம்ராச்சியத்தின் அசாதாரண உலகை ஆராயும் மம்மல்ஸ் எனும் வசீகரிக்கும் தொடரை சோனி BBC எர்த்-இல் வெளியிடுவதை நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

இந்த நிகழ்ச்சியானது, பாலூட்டிகளின் மீள்தன்மை, புத்திசாலித்தனம் மற்றும் அழகு ஆகியவற்றை சித்தரிக்கும் அதே வேளையில், வேகமாக மாறிவரும் சூழலில் அவை எதிர்கொள்ளும் சவால்களையும் எடுத்துக்காட்டுகிறது. தனிச்சிறப்பான உள்ளடக்கத்தை வழங்குவதற்கான எங்கள் அர்ப்பணிப்பு வலுவாக உள்ளதுடன், எங்கள் பார்வையாளர்களுக்கு அதன் மூலம் மிகச்சிறந்த அனுபவத்தை வழங்குவதற்கு நாங்கள் அர்ப்பணிப்புடன் உள்ளோம்

.”ரோஜர் வெப், மம்மல்ஸ்-இன் நிர்வாக தயாரிப்பாளர்”நான் 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அசல் லைஃப் ஆஃப் மம்மல்ஸ் தொடரின் பெரிய ரசிகனாக இருந்தேன். ஆனால், இப்போது நிறைய மாறிவிட்டது. இன்றைய பாலூட்டிகள் மற்றும்அவை நம்முடனும் மற்றும் உலகில் நடக்கும் அனைத்து மாற்றங்களுக்கும் எப்படி தங்களை மாற்றிக் கொண்டு ஒத்துப்போகின்றன என்பதைப் பற்றி ஒரு கதை சொல்லப்பட வேண்டும் என்று நான் உணர்ந்தேன்.

இந்த எபிசோடுகள் மூலம், இந்த தகவமைப்புத் திறனையும், ஏறக்குறைய எந்தச் சூழலையும், சுற்றுச்சூழல் நிலைமையையும் சமாளிக்கும் திறனையும் கண்டறிந்தோம்.

பாலூட்டிகள் பூமியில் மிகவும் குளிரான இடங்களிலும் வெப்பமான இடங்களிலும் வாழ முடியும் என்பதுடன், அவை கடலில் ஒரு மைலுக்கும் மேலாக அடியில் செல்ல முடியும் என்பதையும் இது காட்டுகிறது.

அவை அனைத்தும், பாலூட்டிகளாக இருப்பதற்கான ஒரே மாதிரியான குணாதிசயங்கள் மற்றும் பொதுவான விஷயங்களைக் கொண்டுள்ளன; ஆனால், ஒரு குழுவாக, அவை மிகவும் அதிசயிக்கத்தக்க விஷயங்களைச் செய்ய முடியும். இத்தொடரின் முன்னோடியாக சர் டேவிட் அட்டன்பரோவை நாங்கள் பெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் கதை சொல்லுவதில் வல்லவர்; பாலூட்டிகள் இன்று எவ்வாறு வெற்றிகரமாக உயர்ந்துள்ளன என்பதை விளக்குவதன் மூலம் அவர் நம்மை முற்றிலும் சரியான பாதையில் இட்டுச் செல்கிறார்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *