சிவண்ணாவின் 131வது படம் தயாராகிறது… ஹாட்ரிக் ஸ்டாரை சந்தித்தது படக்குழு!!

Share the post

சிவண்ணாவின் 131வது படம், ரசிகர்கள் உற்சாகம்

சிவண்ணாவின் 131வது படம் தயாராகிறது… ஹாட்ரிக் ஸ்டாரை சந்தித்தது படக்குழு

சிவண்ணாவின் 131வது படம், ரசிகர்கள் உற்சாகம்

கர்நாடக சக்கரவர்த்தி சிவண்ணா ரசிகர்களுக்கு பெரும் உற்சாகம் தரும், புதிய அப்டேட் வந்துள்ளது, சிவண்ணாவின் 131வது படம் இனிதே துவங்கவுள்ளது. சமீபத்தில், சிவண்ணாவின் பிறந்தநாளில் அறிமுக டீசரை வெளியிட்டு அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியது தயாரிப்பு குழு. தற்போது படத்தைத் தயாரிக்கத் தயாராகி விட்டது. சிவன்னாவின் 131வது படத்தின் பூஜை (மங்கல ஆரம்பம்) விரைவில் நடக்கவுள்ளது.

சிவண்ணாவின் 131வது படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது

ஹாட்ரிக் ஹீரோ சிவராஜ்குமாரின் 131வது படத்திற்கான படப்பிடிப்பை பிரமாண்டமாக துவங்கிட படக்குழு தயாராகி வருகிறது. இந்நிலையில் இன்று ஒட்டுமொத்த படக்குழுவும் இன்று சிவண்ணாவைச் சந்தித்தது.

இயக்குநர் கார்த்திக் அத்வைத், தயாரிப்பாளர்கள் N.S. ரெட்டி மற்றும் சுதீர், ஒளிப்பதிவாளர் A.J.ஷெட்டி, மற்றும் எடிட்டர் தீபு S.குமார் ஆகியோர் ஹாட்ரிக் ஸ்டார் சிவண்ணாவை அவரது நாகவாரா இல்லத்தில் சந்தித்தனர். இந்த சந்திப்பு புகைப்படங்களை ரசிகர்கள் இணையத்தில் உற்சாகமாக பகிர்ந்து வருகின்றனர்.

இயக்குநர் கார்த்திக் அத்வைத் இந்த படத்தின் மூலம் சாண்டல்வுட்டில் அறிமுகமாகிறார், இது அவருக்கு இயக்குநராக இரண்டாவது படமாகும். ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக தயாராகும் இப்படத்தில், சிவண்ணா வித்தியாசமான கதாபாத்திரத்தில் மிக வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கிறார். மோஸ்ட் புகழ், V.M.பிரசன்னாவும், ‘சீதாராமம்’ புகழ் ஜெயகிருஷ்ணாவும் இப்படத்திற்கு எழுத்தாளர்களாகப் பணியாற்றி வருகின்றனர். ‘விக்ரம் வேதா’, ‘ஆர்டிஎக்ஸ்’, ‘கைதி’ புகழ் சாம் C.S. இசையமைக்க, A.J. ஷெட்டி ஒளிப்பதிவு செய்யவுள்ளார். படத்தொகுப்பை தீபு S. குமார் செய்ய, கலை இயக்கத்தினை ரவி சந்தேஹக்லு செய்கிறார். இப்படத்தை புவனேஷ்வரி புரொடக்ஷன்ஸ் சார்பில் S.N. ரெட்டி மற்றும் சுதீர் P. தயாரிகின்றனர். ரமணா ரெட்டி நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *