” சீதா பயணம்” விமர்சனம்

Share the post

” சீதா பயணம்” விமர்சனம்…
இயக்குனர்:-அர்ஜுன் சர்ஜா ஸ்ரீ ராம் பிலிம்ஸ். இன்டர்நேஷனல் – அர்ஜுன் சர்ஜா தயாரிப்பாளர்கள்.

மியூசிக்:- அனுப் ரூபன்ஸ்.

இந்த படத்தில் நடித்தவர்கள்:- ஐஸ்வர்யா அர்ஜுன், நிரஞ்சன் சுதீந்திரா, அர்ஜுன் சர்ஜா, துருவா சர்ஜா, பிரகாஷ் ராஜ்,

சத்யராஜ், கோவை சரளா, பித்திரி சதி, ஜெயராம், ஸ்ரீ ஹனுமந்த் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு :-
ஜி.பாலமுருகன்

அம்மாவை இழந்த ஐஸ்வர்யா அர்ஜுன், தந்தை சத்யராஜ் அரவணைப்பில் வளர்கிறார். ஒரு சமையல் கலை பட்டறைக்காக மதுரை செல்லும் போது, நிரஞ்சன் என்பவருக்கு லிப்ட் கொடுக்கிறார். அந்த பயணத்தில் ஏற்பட்ட சிறிய தாமதங்களால், ஒரு பெரிய விபத்தில் இருந்து சீதா உயிர் தப்புகிறார்.

இந்த சம்பவம் அவரது வாழ்க்கையை மாற்றுகின்றன

தன்னை அந்த ஆபத்திலிருந்து காப்பாற்றியவர்
களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் ஒரு பயணத்தை தொடங்குகிறார். அந்த

நன்றியுணர்வும், பயணத்தில் உருவாகும் உறவுகளுமே “சீதா பயணம்” படத்தின் மீதிக்கதைக்களம்.

ஐஸ்வர்யா அர்ஜுன் தனது இயல்பான மற்றும் எளிமையான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். அவர் வெளிப்படுத்தும்

உணர்ச்சிகளில் செயற்கைத் தனம் எதுவும் இல்லாமல், மிகவும் நம்பகமாகவும்

மனதைத் தொடும் வகையிலும் காட்சியளிக்கிறார்.

நிரஞ்சன் அறிமுக நாயகனாக இருப்பதால் தனது கதாபாத்திரத்திற்கு தேவையான அளவில் நல்ல நடிப்பை வழங்கியுள்ளார்.

கதையின் கருவிற்கு ஏற்ப அமைதியாக இயல்பாகவும் நடித்துள்ளார்.

சத்யராஜ் தனது அனுபவமிக்க நடிப்பால் கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்திருக்கிறார். அவரது அமைதியான வெளிப்பாடும்

உணர்ச்சிகளை துல்லியமாக காட்டும் திறனும் அந்த

வேடத்தை மேலும் நம்பகமாக மாற்றுகின்றன.

நீண்ட நாட்களுக்கு பிறகு திரையில் தோன்றும் பிரகாஷ் ராஜ், வழக்கம்போல

தனது திறமையான மற்றும் இயல்பான

நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். அவர் இடம்பெறும்

ஒவ்வொரு காட்சியும் கதைக்கு உறுதியையும் ஆழத்தையும்

சேர்த்து, படத்திற்கு கூடுதல் பலமாக அமைகிறது.

அர்ஜுன் ஷார்ஜா மற்றும் துருவ ஷார்ஜா இருவரின் சிறப்பு தோற்றங்கள்

ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தருகின்றன.

அவர்கள் திரையில் வரும் காட்சிகள் படம் பார்க்கும்

அனுபவத்தை மேலும் சுவாரஸ்யமாக மாற்றுகின்றன.
அனுப் ரூபன்ஸின் இசை கதாபாத்திரங்களின்

உணர்வுகளுக்கு மேலும் வலு சேர்க்கிறது.

ஜி. பாலமுருகன் அவர்களின் ஒளிப்பதிவு பயணக் காட்சிகளை மிகவும்

அழகாகவும் இயல்பாகவும் படம் பிடித்துள்ளார்.

இயக்குனராக ஆக்ஷன் கிங் அர்ஜுன் தனது

மகளுக்காக ஒரு நல்ல குடும்பப் படத்தை உருவாக்க முயற்சி செய்துள்ளார். அதிக

சண்டை, அதிரடி இல்லாமல் குடும்ப உறவுகளையும் மதிப்புகளையும்

முன்னிலைப்படுத்தும் இந்த படம், குடும்பத்துடன் அமைதியாக ஒருமுறை

பார்க்கக்கூடிய சுத்தமான பொழுதுபோக்கு படமாக உள்ளது.

தந்தை – மகள் இடையேயான உணர்ச்சிகரமான காட்சிகள் மனதை நெகிழச் செய்கின்றன. அவர்களின் பாசமும் புரிதலும் இயல்பாக

வெளிப்படுவதால், அந்த தருணங்கள் பார்வையாளர்களின்

மனதில் நீண்ட நேரம் பதிந்துவிடுகின்றன. முதல் பாதி சற்றே

தொய்வாக இருந்தாலும் இரண்டாம் பாதியில் அதை

பூர்த்திசெய்யும் விதமாக கதையின் நகர்வு பாராட்டுக்குரியது.

இந்த திரைப்படத்தை குடும்பத்தோடு

திரையரங்குகளில் பார்க்க வேண்டிய திரைப்படம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *