“சார்”திரைப்பட விமர்சனம் !!

Share the post

“சார்”திரைப்பட விமர்சனம்

நடித்தவர்கள் :- விமல், சாயாதேவி, சிராஜ்.எஸ்.சரவணன், ரமா, ஜெயபாலன், விஜய்முருகன், சரவணன் சக்தி,பரனா, எலிசபெத், கஜராஜ் மற்றும் பலர்.

டைரக்டர் :- போஸ் வெங்கட்.

மியூசிக் :- சித்து குமார்.

ஒளிப்பதிவு.ஜெ.ஹரிஷ்

தயாரிப்பாளர்கள்:- எஸ்.எஸ்.எஸ்.பிக்சர்ஸ் – சிராஜ். எஸ். நீலோபர்.சிராஜ்.எல்லா சாதியினர் மக்களுக்கும் கல்வி சேர வேண்டும் என்று நினைக்கும் ஆசிரியர் ஒருவர், கிராமத்தில் பள்ளி ஒன்றை ஆரம்பிக்கிறார். அதன் மூலம் தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வி கற்க வேண்டும். என்று அவர்களை‌ அந்த கொத்தடிமைத்தனத்திலிலிருந்து அவர்களை மீட்க வேண்டுமென்று மிகவும் பாடுப்பட்டுமுயற்சிசெய்கிறார். கல்வியை அவர்கள் கற்றால் கொத்தடிமை யாக அவர்கள் இருக்க முடியாது, என்று நினைக்கும் உயர்சாதியினர் நினைக்கிறார்கள்.அந்த பள்ளியை ஒழிப்பதற்கு பலவிதமான சதிவேலைகளை செய்கிறார்கள். ஆனால், பள்ளியை உருவாக்கிய ஆசிரியரை அவர்களால் அடக்க முடிந்தது தவிர அந்த பள்ளியை அசைக்கவோஒழிக்கவோ அழிக்கவோ இடிக்கவோ முடியாமல் போனது. இந்த பிரச்சனை ஆசிரியரின் அடுத்த தலைமுறைக்கு இது தொடர்கிறது. ஆசிரியரின் மகன் சரவணனும் ஆசிரியராக என்று தந்தை போல அந்த பள்ளியின் மூலமாக எல்லாரும் கல்வி அறிவை தரவேண்டும். என்று முயற்சியில் ஈடுபடுகிறார். அந்த பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக உயர்த்த வேண்டுமென்றும் நினைக்கிறார். அங்கேயும் உயர்சாதியினரின் அடுத்த தலைமுறைக்கு முட்டுக்கட்டை போட, அவர்களின் சதியால் ஆசிரியர் சரவணனுக்கு பைத்தியக்காரர் என்ற பட்டம் சூட்டப்பட்டது, அவரும் தன் மீது சுமத்தப்பட்ட பைத்தியக்காரர் பட்டத்தை ஏற்றுக்கொள்கிறார். தனது மகன் இந்த பணியை செய்து முடிப்பான் என்ற பெரும் நம்பிக்கையில் அமைதியாகிறார். சரவணனின் மகன் விமல் தனது தாத்தா, அப்பா போல ஆசிரியராகி, அவர்கள் செய்த நினைத்ததை தொடர்கிறார். ஆனால், அவரது முயற்சிக்கும் முட்டுக்கட்டைப் போடும் உயர்சாதியினர் வாரிசான சிராஜ், விமலுடன் நட்பாக நண்பனா பழகியும். அவரது லட்சியத்திற்கு எதிர்முனையில் யாருக்கும் தெரியாமல் தன் தீய‌செயலால் நயவஞ்சகமாக வேலைகளை செயல் பாடுகிறார். இப்படி இரண்டு தலைமுறைகளாக கல்வி கொடுக்க போராடும் ஆசிரியர்களை மோசமான அவலநிலைக்கு தள்ளி, குறிப்பிட்ட சமூகத்தினர் மக்களுக்கு கல்வி கிடைக்கவிடாமல் தடுக்க செய்பவர்களுக்கு மூன்றாம் தலைமுறை ஆசிரியரான விமல், எப்படி அவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார். என்பதை ஆசிரியர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் சாதி பெயரில் உழைப்பாளிகளை தாழ்த்தப்பட்டவர்கள் சிறு சமூதாயத்தினர். ஒடுக்கப்பட்டவர்களாக முயற்சிப்பவர்களுக்கு ஆசிரியர்களின் பிரம்படி கொடுப்பது தான் ‘சார்’ திரைப்படத்தின்.முடியுரையும். ஆசிரியர் வேடத்திற்கு சிறந்த நடிகர், என்று பெயர் வாங்கும் அளவுக்கு விமல், ஆசிரியர் வேடத்தில் மிக சிறப்பாக நடித்திருக்கிறார். காதல் காட்சிகள் மற்றும் அதனைச் சுற்றிய நகைச்சுவைக் காட்சிகள் படத்துக்கு மட்டும் இன்றி விமலுக்கும் ஒட்டவில்லை என்றாலும் இறுதியில் சதியாளர்கள் வழியில் சென்று அவர்களிடம் போரிடும் காட்சிகளில் தனது நடிப்பு திறமையால் உயர்ந்து நிற்கிறார். விமலின் தந்தையாக நடித்திருக்கும். ‘பருத்திவீரன்’ சரவணன், கதாநாயகனுக்கு நிகரான கதாபாத்திரத்தில் நடித்திருப்பதோடு, சிறப்பான நடிப்பு மூலம் கதாபாத்திரத்திற்கு உயிர் தந்திருக்கிறார். தனது தந்தையின் நிலை தனக்கும் ஏற்பட்ட பிறகு, அவரை கட்டி வைத்திருந்த சங்கிலியை எடுத்து தனக்கு தானே சிறைபடும் காட்சியில் கண்கலங்க வைத்து விடுகிறார். சிறப்பான நடிப்பை‌ சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.கதாநாயகனின் நண்பராக வலம் வந்தாலும், சாதி வெறியால் தனது முன்னோர்கள் செய்த நயவஞ்சகத்தின் மூலம் நண்பர்களை கொல்ல துடிக்கும் வில்லன் வேடத்தில் நடித்திருக்கும் சிராஜ், புதுமுக நடிகர் என்ற வித்தியாசம் தெரியாமல் நடித்துள்ளார். இதுபோன்ற நல்ல வேடங்கள் நடித்தால் நிச்சயம் வெற்றி தவிர்க்க முடியாத நடிகராக திகழ்வார். பாடல் காட்சிக்காகவும், சில காதல் காட்சிக்காகவும் சாயா தேவி நாயகியாக நடிக்க வைக்கப்பட்டிருந்தாலும், அதையும் தாண்டிய ஒரு முக்கியம் அவரது கதாபாத்திரத்திற்கு கொடுக்கப்பட்டு, அவரையும் திரைக்கதையில் ஓட்டத்தில் ஒன்றிவிட செய்து மக்கள் மனதில் பதியவைத்துவிடுகிறார்கள்.ரமா, ஜெயபாலன், கஜராஜ், சரவண சக்தி, விஜய் முருகன், ப்ரனா, எலிசபெத் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கொடுக்கப்பட்ட வேலையை குறை எதுவும் இல்லாமல் செய்து திரைக்கதைக்கு பலம் சேர்க்கும் விதத்தில் பயணித்திருக்கிறார்கள் மூன்று காலக்கட்டங்களில் நடக்கும் சம்பவங்களை கதை மற்றும் கதாபாத்திரங்களை காலக்கட்டத்தின்மாறுதல் ஏற்ப சிறப்பாக காட்சிப்படுத்தியுள்ளார் .ஒளிப்பதிவாளர். இனியன் ஜெ.ஹரிஷின் பணி சிறப்பு. சித்து குமார் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிக்கும்படியாக இருப்பதோடு, பாடல் வரிகள் புரியும்படி, கவனம் ஈர்க்கும் வகையில் இசையை கொடுத்துள்ளார்.ஒரே மாதிரியான கதை ஆனால் அதை மூன்று காலக்கட்டங்களில் சொல்ல வேண்டும் என்று இயக்குநரின் முயற்சிக்கு பாராட்டுகள் எடிட்டிங் படத்தொகுப்பாளர் ஸ்ரீஜித் சாரங்கன், மூன்று தலைமுறைகளுக்கான காட்சிகளில் சிறந்த முறையில் வித்தியாசமான காட்சிகளை வெளிப்படுத்தியுள்ளார் . எளிய மக்களை கொத்தடிமை தனத்தை அதன் மூலம் தங்களை முன்னோர்கள் என்று அடையாளம் தெரிந்துக்கொள்பவர்களுக்கு ஆசிரியர்கள் மூலம் பெரும்பாலும் சவுக்கடி கொடுத்திருக்கும் இயக்குநர் போஸ் வெங்கட், கிராமப்புறங்களில் தாழ்ந்த சாதியினர் ஏற்றத்தாழ்வுகளால் மக்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதை கல்வியை அதிகமாக மேம்படுத்தி முன்னிறுத்தி சொல்லிக்கிறார். ஆசிரியர்களின் சிறப்பு பற்றி சரவணன் மூலம் பேசி ஆசிரியர் பணிக்கு பெருமை சேர்த்திருக்கும் இயக்குநர் போஸ் வெங்கட், மக்களிடையே இருக்கும் ஏற்றத் தாழ்வுகளை கலையகல்வியால் மட்டுமே முடியும், என்ற கருத்தை அழுத்தமாக பதிவிறக்க செய்திருக்கிறார். இல்லாத காட்சிகளும் படத்திற்கு குறை இருந்தாலும், ஆசிரியர்கள் பணி எந்த வகைய முக்கியம், அதன் சிறப்பை மற்றும் கிராமப்புறங்களில் பணி புரியும் ஆசிரியர்களின் பங்கு எவ்வளவு முக்கியம் என்பதை மனவலியுடன் பதிவு செய்திருக்கும் இயக்குநர் போஸ் வெங்கட், மீண்டும் ஒரு முறை தனது படைப்பு மூலம் சமூகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. , ‘சார்’ என்ற திரைப்படத்தில் ஆசிரியர்களுக்கும் மாணவ மாணவியர்களுக்கும் முக்கியமாக பெருமை சேர்க்கும் விதமாக எடுத்துள்ளார்கள். அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *