
விஜய் டிவியின் செல்லப்பிள்ளை டிடி… குட்டை உடையில், மனதை மயக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். லேட்டஸ்ட் புகைப்படங்களின் தொகுப்பு இதோ… விஜய் டி.வி.யின் பிரபல தொகுப்பாளியாக வலம் வருபவர் திவ்யதர்ஷினி. க்யூட்டான ஸ்மைல், கலகலப்பான பேச்சால் கவரப்பட்ட ரசிகர்கள் இவரை செல்லமாக டிடி என அழைக்கின்றனர். இவரது சகோதரி ப்ரியதர்ஷினியும் தொகுப்பாளியாக உள்ளார். திவ்ய தர்ஷினி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

இவற்றில் பெரும்பாலானவை சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தவை. “ஜோடி நம்பர்1”,“சூப்பர் சிங்கர்”, “காபி வித் த டிடி”, “ஹோம் ஸ்வீட் ஹோம்” போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். தனது நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை காதலித்து கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணமான சில மாதங்களுக்குள் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். அதன் பின்னர் டி.வி. நிகழ்ச்சிகளில் முழு கவனம் செலுத்தி வரும் டிடி, சினிமாவில் வெயிட்டான கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு தேடி வருகிறார்.

பட வாய்ப்புகளை கை பற்ற அவ்வப்போது… செம்ம ஹாட் புகைப்படங்களை டிடி வெளியிடுகிறார். எந்த வகையில் தற்போது ஷாட் ட்ரெஸ்ஸில், கியூட் போஸ் கொடுத்துள்ளார். இவரது இந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தை கலக்கி வருகிறது. வழக்கம் போல் டிடியின் அழகை புகழ்ந்து… நெட்டிசன்கள் லைக்குகளை குவித்து வருகிறார்கள்.
