ஃ திரை விமர்சனம் !!
அம்பிகாபதி மூவி மேக்கர்ஸ் பொன் செல்வராஜ் தயாரிப்பில் ஸ்டாலின்.வி இயக்கி வெளிவந்திருக்கும் படம் ஃ
இப்படத்தில் பிரஜின், ஸ்டாலின், காயத்ரி ரெமா, பருத்திவீரன் வெங்கடேஷ், சரத், வினோத் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள் .
பிரபல இயக்குநர் ஸ்டாலினின் அலுவலகத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு செல்லும் நாயகி காயத்ரி ரெமா கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்படுகிறார். அந்த அலுவலகத்தில் இருந்த உதவி இயக்குநர்கள் நான்கு பேரும் அந்த சம்பவத்திற்குப் பிறகு தலைமறைவாகி விடுகிறார்கள். காயத்ரி ரெமாவின் காதலனான நாயகன் பிரஜின், தனது காதலியின் கொலைக்கு காரணமான இயக்குநர் ஸ்டாலினை தேடி செல்லும் போது, அவர் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அதேபோல், தலைமறைவாக இருக்கும் உதவி இயக்குநர்களை பிரஜின் தேடி செல்லும் போது அவர்களும் மர்மமான முறையில் கொலை செய்யப்பட, அந்த கொலை பழி அனைத்தும் பிரஜின் மீது விழுகிறது. இதனால் அவரை போலீஸ் தேடுகிறது. பிரஜின் சந்திக்க செல்பவர்கள் அனைவரும் கொலை செய்யப்படுவதற்கான பின்னணி என்ன? அவர்களை கொலை செய்வது யார்? என்பது தான் படத்தின் கதை.
பிரஜின், ஸ்டாலின், காயத்ரி ரெமா, பருத்திவீரன் வெங்கடேஷ், சரத், வினோத்அனைவரும் கொடுத்த கதாபாத்திரம் ஏற்ற நடித்திருக்கிறார்கள்.
நாயகனாக நடித்திருக்கும் பிரஜின் ஒரு கதாபாத்திரமாக சில காட்சிகள் தலை காட்டுவதோடு, கொடுத்த வேலை குறைவாக இருந்தாலும் அதை நிறைவாக செய்திருக்கிறார்.
படத்தின் வில்லனாக இயக்குநர் ருத்ரன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இயக்குநர் ஸ்டாலின், சைக்கோத்தனமான கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் காயத்ரி ரெமா, தனது பணியை சரியாக செய்திருக்கிறார்.
காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் பருத்திவீரன் வெங்கடேஷின் நடிப்பு மிடுக்காக இருக்கிறது.
கேபிஒய் வினோத், ஏழாம் அறிவு இராமநாதன், தயாளன், கேபிஒய் சரத் என மற்ற வேடங்களில் நடித்திருக்கும் நடிகர்கள் அனைவரும் தங்களது பணியை சரியாக செய்திருக்கிறார்கள்.
தேவசூர்யாவின் ஒளிப்பதிவும், சதீஷ் செல்வத்தின் இசையும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
க்ரைம் திரில்லர் ஜானர் கதையை திகில் கலந்து கொடுத்திருக்கும் இயக்குநர் ஸ்டாலின், திரைக்கதையில் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம்.
பிரஜின் தேடி செல்பவர்கள் அனைவரும் மர்மமான முறையில் கொலை செய்வதும், அந்த கொலைகளை முன்கூட்டியே மனநல காப்பகத்தில் இருக்கும் சித்தர் ஓவியமாக வரைவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும், கொலைகளுக்கான ரகசியத்தை வெளிப்படுத்தும் இடத்தில் சித்தர் கதாபாத்திரத்தை பயன்படுத்தாது திரைக்கதையை தொய்வடைய செய்கிறது.
க்ரைக் த்ரில்லருடன் திகிலை சேர்த்து எழுதிய கதை சுவாரஸ்யமாக இருந்தாலும், அதற்கு திரைக்கதை அமைத்து இயக்கிய முறை படு சுமாராக இருப்பதோடு, பல குறைகள் நிறைந்தவையாகவும் இருக்கிறது.
மொத்தத்தில்
ஃ’ .பவர் இல்லை