
“உரக்கச் சொல்லுங்கள்”
புதிய தலைமுறை தொலைக்காட்சியில் சனிக்கிழமை நண்பகல் 12:00 மணிக்கும், ஞாயிறு இரவு 8:00 மணிக்கும் “உரக்கச் சொல்லுங்கள்” நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
தனிமனித மற்றும் குடும்ப உறவுகள், சமூகப் பிரச்னைகள், அன்றாட வாழ்வியல் சார்ந்த சிக்கல்கள் , அரசியல் முடிவுகள் என பலதரப்பட்ட தலைப்புகளில் ஒருங்கிணைக்கப்படும் நிகழ்ச்சி உரக்கச் சொல்லுங்கள்.
ஒரு தலைப்பில் நேர் எதிர் துருவங்களில் பங்கேற்ப்பாளர்கள் கலந்துகொள்வார்கள். சமூகத்தை இயக்கும் சாமானியர்களும் தங்கள் கருத்துக்களை முன்வைக்க மேடை அமைத்துத் தரும் உரக்கச் சொல்லுங்கள் நிகழ்ச்சியில் இறுதியாக இரண்டு விருந்தினர்களும் தங்கள் கருத்துக்களை முன்வைத்து நிகழ்ச்சிக்கு வலுசேர்க்கிறார்கள்.





உரக்கச் சொல்லுங்கள் நிகழ்ச்சியை தயாரிப்பாளர் சுரேஷ் கண்ணன் ஒருங்கிணைக்க, புதிய தலைமுறை தொலைக்காட்சியின் அரசியல் பிரிவு ஆசிரியர் கார்த்திகேயன் இயக்கி தொகுத்து வழங்குகிறார்.
–