ஜெயா டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 08:00 மணிக்கு ஒளிபரப்பாகும் மங்களகரமான நெடுந்தொடர் “சாவித்திரி ”.
இந்த நெடுந்தொடரில் நடிகை சங்கவி,நடிகர் ராஜசேகர் , ரவிக்குமார் , சதீஷ் , பயில்வான் ரங்கநாதன் மற்றும் பலர் பயணித்துள்ளனர். இந்த நெடுந்தொடரை எழுதி இயக்கியுள்ளார் C J.பாஸ்கர். பல திருப்பங்களுடன் மக்கள் மனதில் இடம்பிடிக்கும் மாறு இக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
சாவித்திரி (சங்கவி) கதையின் நாயகி ,இவள் கதைக்கு மட்டும் நாயகி அல்ல நிஜத்திலும் திரைப்பட கதாநாயகி .சிறு வயதில் தன் தந்தையின் வேலைக்காரன் செய்த துரோகத்தால் ஏதோ ஒரு வகையில் தன் தந்தையினாலே வீட்டை விட்டு வெளியேற்றப்படுகிறாள் .ஆறு வயது பெண்ணான இவள் என்ன செய்வதறியாது பல இன்னல்களை தாண்டி ஒரு சாலையோரத்தில் தங்கி சுற்றி திரிகிறாள் .அங்கு அவளுக்கு நடக்கவிருந்த பிரச்சனைலிருந்து அவளை காப்பாற்றிய ஒரு சிறுவன் , அவளை தன் தங்கையாக பாவித்து அவளை வளர்க்க வேறு ஒரு கிராமத்திற்கு செல்கிறார்கள் . அங்கு அவர்களை கண்ட ஊர் பெரியவர் ஒருவர் அவர்களை அரவணைத்து தன் வீட்டிலேயே வளர்க்கிறார்கள் .ஒரு சாதாரண ஒரு பெண் குழந்தை பிற்காலத்தில் எப்படி ஊரே பேசுபடி ஒரு நடிகையாக , ஒரு நட்சத்திரமாக உருவெடுக்கிறாள் என்பதே இக்கதை கரு.