தி ஃபிரேம் டிவி வழியாக இளம் இந்திய கலைஞர்களின் நவீன, தற்காலத்திய கலைப்படைப்புகளை உங்கள் இல்லத்திற்கே கொண்டு வரும் சாம்சங்!
ஆர்ட் ஸ்டோரில் இன்னும் அதிக கலைப் படைப்புகளை சேர்த்திருக்கிறது
- இந்தியாவின் நவீன, தற்காலத்திய கலை படைப்புகளுக்கு ஒற்றை – நிறுத்த தளமாகத் திகழும் டெரைன்.ஆர்ட் உடன் கைகோர்க்கிறது.
- தி ஃபிரேம் டிவி வழியாக தங்களது கலை சார்ந்த செயலிருப்பை மேம்படுத்தவும், பலரும் அறியுமாறு பிரபல்யம் பெறவும் நன்கு அறியப்பட்ட மற்றும் வளர்ந்து வரும் இளம் இந்திய ஓவியர்கள், கலைஞர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பை இக்கூட்டாண்மை வழங்குகிறது.
சென்னை: 17 ஆண்டுகளாக உலகளவில் நம்பர் 1 தொலைக்காட்சி சாதன பிராண்டாக ஆதிக்கம் செலுத்தி வரும் சாம்சங், அதன் லைஃப்ஸ்டைல் தொலைக்காட்சியான தி ஃபிரேம் (The Frame) – ல் இடம்பெற்றுள்ள ஆர்ட் ஸ்டோரில் இந்திய நவீன, தற்காலத்தய கலைப்படைப்புகளை சேர்த்திருக்கிறது. தி ஃபிரேம் என்பது, அதனை ஆன் செய்திருக்கும்போது டிவியாகவும், அதனை ஆஃப் செய்திருக்கும்போது கலைப்படைப்பாகவும் இருக்கிறது.
இந்த அழகான, நவீன தற்காலத்தய கலைப் படைப்புகளை நுகர்வோர்களுக்கு வழங்க வேண்டுமென்று பிளாக்செயின் ஆற்றலுடன் இயங்கும் ஒரு ஆன்லைன் தளமான டெரைன்.ஆர்ட் என்பதுடன் சாம்சங் ஒத்துழைப்பை மேற்கொண்டிருக்கிறது. தெற்காசியாவில் காணப்படும் சிறந்த கலை / ஆர்ட் நடைமுறைகளை அடித்தளமாகக் கொண்டு ஒரு உலகளாவிய சூழலமைப்பை கட்டமைப்பதில் தனது நோக்கமாக டெரைன்.ஆர்ட் கொண்டிருக்கிறது.
தி பிரேம் டிவியின் அனனத்து மாடல்களிலும் கிடைக்குமாறு 2100-க்கும் அதிகமான கலை படைப்புகளை வழங்கி வரும் தற்போதுள்ள ஆர்ட் ஸ்டோரோடு டெரைன்.ஆர்ட் – ல் உள்ள கலைப்படைப்புகளின் விரிவான கலெக்ஷனும் சேர்க்கப்பட்டுள்ளன. இளம் இந்திய கலைஞர்களால் உருவாக்கப்பட்டுள்ள, இப்போது புதிதாக சேர்க்கப்பட்டிருக்கும் இக்கலைப்படைப்புகள் இந்தியாவின் புராதன கட்டிடங்கள், நாட்டுப்புற கலைகள், ஜவுளி பாரம்பரியங்கள், பன்முகத்தன்மை மற்றும் வேறுபல அம்சங்கள் மீது ஒரு நவீன, கண்ணோட்டமாக கலாரசனையுடன் உருவாக்கப்பட்டுள்ளன. உயிரோட்டமுள்ள வண்ணங்கள், அழுத்தமான தூரிகை ஸ்ட்ரோக்குள், மிக கவனமாக வரையப்பட்ட கோடுகள் ஆகியவற்றினால் உருவாக்கப்பட்ட இந்த ஓவியங்கள் சூழலியல், வருநிகழ்வுகள், புலம்பெயர்வு மற்றும் நம்பிக்கை போன்ற கருத்தாக்கங்களை பல்வேறு கலைமொழிகளில் வெளிப்படுத்துகின்றன.
பிரத்யேகமாக மாற்றிக்கொள்ள கூடிய வளைவுகள் மற்றும் மெல்லிய விளிம்புகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள தி ஃபிரேம் டிவி, வீட்டிலேயே ஒரு நிஜமான ஆர்ட் கேலரி போன்ற அனுபவத்தை வழங்குவதன் மூலம் நுகர்வோர்களது லிவிங் அறைகளுக்கு பிரிமியம் அழகியல் ஈர்ப்பையும், கவர்ச்சியையும வழங்குகிறது. மிக அதிக துல்லியத்துடன் கலைப்படைப்புகளை கண்டு இரசிக்க இதன் மேட் டிஸ்ப்ளே மற்றும் வண்ணங்களின் துல்லியமான காட்சித்திறன் உதவுகிறது.
கலையின் வெளிப்பாடு மற்றும் வழிமுறையோடு சேர்த்து கலை காட்சிப்படுத்தப்படும் விதமும் சிறப்பான மாற்றத்தை கொண்டு வருவதாக இருக்கிறது. டிஜிட்டல் டிஸ்ப்ளே வழியாக ஆர்ட் கேலரிகளில் அல்லது வசிப்பிடங்களில் கலை/ஓவியம் உயிரோட்டத்துடன் கொண்டுவரப்படும் வழிமுறையை பிரேம் டிவி வழியாக நாங்கள் புரட்சிகரமாக மாற்றியிருக்கிறோம். தங்களுக்கு பிடித்தமான ஓவியத்தையும் கலைப்படைப்பையும் திரையில் உண்மையிலேயே நிஜம் போல காட்சிப்படுத்துவதற்கு நுகர்வோர்களை பிரேம் டிவி அனுமதிக்கிறது. எந்தவொரு அமைவிடத்திலும் தற்போது இருக்கும் வடிவமைப்பு அழகினை இது சிறப்பாக மேம்படுத்துகிறது. பிரேம் டிவியை இயக்கும் QLED தொழில்நுட்பமானது, வீட்டிலேயே திரையரங்கு போன்ற ஒரு அற்புதமான பொழுதுபூக்கு அனுபவத்திற்கான மிகச் சிறப்பான படத்தரத்தை வழங்குகிறது. டெரைன் ஆர்ட் உடனான எமது ஒத்துழைப்பு, கலையை நேசிப்பவர்களையும் மற்றும் உள்ளுர் மற்றம் வெளிநாடுகளை சேர்ந்த கலைஞர்களையும் தொழில்நுட்பத்தின் மூலம் ஓரிடத்தில் ஒன்று சேர்க்க வேண்டும்; என்ற எமது குறிக்கோள் நோக்கத்தின் வெளிப்பாடான செயல்பாடாக இருக்கிறது என்று” சாம்சங் இந்தியா நிறுவனத்தின் விசுவல் டிஸ்ப்ளே பிசினஸின் முதுநிலை துணைதலைவர் திரு. மோகன்தீப் சிங் கூறினார்.
டெரைன்.ஆர்ன் – ன் நிறுவனர் அபராஜிதா ஜெயின் இது தொடர்பாக கூறியதாவது: “இன்றைய யுகத்தில் ஓவியர்களும், கலைஞர்களும் அவர்களது படைப்புகளை காட்சிப்படுத்த புத்தாக்கத்தை மகிழ்ச்சியோடு இனைத்துக் கொண்டிருக்கின்ற நிலையில், கடந்த பல ஆண்டுகளாகவே கலையின் வெளிப்படுத்தல் மாறிவரும் பரிமாண வளர்ச்சியை பெற்று வந்திருக்கிறது. மாற்றங்களினால் இக்கலைஞர்கள் கவலையோ, அச்சமோ படுவதில்லை. தொழில்நுட்பம் இதை சாத்தியமாக்கியிருப்பதால் உண்மையில் இதனால் அவர்கள் கூடுதல் உற்சாகமும், கிளர்ச்சியும் பெற்றிருக்கின்றனர். உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களையும், கலை ரசிகர்களையும் சென்றடைவதை கலைஞர்களுக்கு இது எளிதாக்கியிருக்கிறது. இதன் மூலம் ஒரு மிகப்பெரிய படைப்பாக்க சமூகத்தின் ஒரு அங்கமாக இக்கலைஞர்கள் இடம்பெறுவது சாத்தியமாகியிருக்கிறது. உலகளவில் தொலைக்காட்சி சாதன தொழில்துறையின் தலைவராக திகழும் சாம்சங் உடன் கூட்டாக இணைந்து செயல்படுவதன் வழியாக, இந்தியாவின் பல்வேறு வகையான கலை / ஓவிய வடிவங்கள் ஒவ்வொரு தனிநபரின் இல்லங்களை அலங்கரிக்குமாறு செய்ய நாங்கள் முயற்சிக்கிறோம். நமது நாட்டின் வளமான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை காட்சிப்படுத்த இதுவொரு அழகான வழிமுறையாகும்; கலை மற்றும் தொழில்நுட்பத்தின் அற்புதமான கலவையாகவும் இது திகழ்கிறது.”
தி ஃபிரேம் டிவி
சாம்சங் – ன் லைஃப்ஸ்டைல் டிவியான தி ஃபிரேம் டிவி, கலை சார்ந்த, கலைத்திறன் மிக்க ஒரு அதிசய படைப்பாகும். தங்களது உள்ளலங்கார அமைவிடத்திற்கு மிகவும் சரியாகப் பொருந்தக்கூடியவாறு தங்களுக்குப் பிடித்தமான வண்ணத்தை எளிதாக்கி, தேர்வு செய்வதற்கு அல்லது அதனை மாற்றுவதற்கு தனிப்பயனாக்கக்கூடிய, மேக்னடிக் பெசல்களின் தொகுப்பை வழங்குவதன் மூலம் தங்களுக்குப் பிடித்ததை ஃபிரேம் செய்துகொள்ள நுகர்வோர்களை இது அனுமதிக்கிறது. வியக்கத்தக்க பட தெளிவுநிலை, உயிரோட்டமுள்ள வண்ணங்களை ஏதுவாக்குகின்ற மேம்படுத்தப்பட்டிருக்கும் கான்ட்ராஸ்ட் மற்றும் மிகச்சிறப்பான டீடெய்ல்கள், QLED தொழில்நுட்பத்துடன் 100% கலர் அளவு ஆகியவற்றை கொண்டிருக்கும் சாம்சங்கிற்கு சொந்தமான குவாண்டம் டாட் தொழில்நுட்பம், சக்தி வாய்ந்த குவாண்டம் புராசஸர் 4K, 4K செயற்கை நுண்ணறிவுடன் தரம் உயர்த்தும் திறன்கள், ஆகியவையும் ஃபிரேம் டிவியில் இடம்பெற்றிருக்கும். தொலைக்காட்சி சாதனத்தின் ஸ்பீக்கர்களை மியூட் செய்யாமலேயே சிறப்பான சரவுண்டு சவுண்டு எஃபெக்ட்டைப் பெறுவதற்கு சாம்சங் சவுண்டு பார் உடன் மிக சரியான ஒத்திசைவை சாத்தியமாக்கும் Q-சிம்பொனி, இதன் மற்றொரு சிறப்பம்சமாகும். பிரேம் டிவியின் மேட் டிஸ்பிளே பிரதிபலிப்புகளை தவிர்க்கும் திறன் கொண்டது. இதனால் நிஜமான, உயிரோட்டமான ஓவியம் / கலைப்படைப்பு போலவே தோன்றுமாறு இது செய்கிறது.
ஃபிரேம் டிவியில் ஹாட் ஸ்டோர் இருப்பதால் புகழ்பெற்ற மற்றும் வளர்ந்து வரும் கலைஞர்களின் கை வண்ணத்தில் உருவான 2100-க்கும் அதிகமான நவீன, கிளாசிக் மற்றும் தற்காலத்தய கலைப்படைப்புகளின் தொகுப்பை வரம்பின்றி நுகர்வோர்களால் அணுகி பயன்படுத்த முடியும். அதுமட்டுமல்ல, ஃபிரேம் டிவி பயன்படுத்தப்படாதபோது, அதன்மீது தங்களது தனிப்பட்ட நிழற்படங்களை நுகர்வோர்கள் காட்சிப்படுத்தி தங்கள் மனதிற்கு நெருக்கமான அனுபவங்களையும், நிகழ்வுகளையும் நினைவுகூர முடியும்.
முக்கிய அம்சங்கள்:
மேட் டிஸ்பிளே உடன் பிரதிபலிப்பிற்கு எதிர்ப்புத்திறன்
ஃபிரேம் டிவியின் பிரதிபலிப்பிற்கு எதிர்ப்புத்திறன் உள்ள மேட் டிஸ்பிளே பிரதிபலிப்பின் விளைவுகளை குறைப்பதன் மூலம் உங்கள் தொலைக்காட்சி திரை மீது ஒளி சிதறல்களை கட்டுப்படுத்துகிறது. தொலைக்காட்சியில் காட்சிப்படுத்தப்படும் ஓவியம் / கலைப்படைப்பிற்கும் மற்றும் நிஜ கலைப்படைப்பிற்கும் இடையே வேறுபாட்டை ஏறக்குறைய ஒன்றுமில்லாததாக மாற்றுகிறது.
பிரத்யேகமாக மாற்றக்கூடிய பெசல்களை கொண்டு சரியான மனநிலையை உருவாக்குங்கள்
உங்களது அழகியல் உணர்வு, மனநிலை அல்லது நிகழ்வு எதுவாக இருப்பினும், 4 மாறுபட்ட வண்ணங்களில் மாடர்ன் அல்லது பெவெல்டு பெசல்களிலிருந்து விரும்பியதை நீங்கள் தேர்வு செய்யலாம். இதன் மேக்னடிக் பெசல் – ஐ உடனே ஆன் செய்வது எளிதானது. இதனால் வடிவமைப்பு அப்டேட்களை செய்வது மிகச் சுலபம்.
100% வண்ண செயல்திறனுடன் நிஜம் போன்ற பட தரம்
இதில் இடம்பெற்றுள்ள QLED தொழில்நுட்பம், 100% வண்ண அளவுடன் ஒளிமயமான வண்ணத்தின் பில்லியன் ஷேடுகளினால் நுகர்வோர்களை மெய்மறக்கச் செய்கிறது. இதன் மற்றொரு அம்சமான குவாண்டம் டாட் தொழில்நுட்பம், ஒளியை பளிச் என்ற வண்ணமாக மாற்றுவதன் மூலம் படத்தின் தரத்தை அழகாக வெளிக்கொணர்கிறது.
குவாண்டம் HDR உடன் அற்புதமான பட தெளிவு
நுண்ணறிவு மிக்க குவாண்டம் HDR -ஐ கொண்டு, விரிவாக்கப்பட்டுள்ள தொகுப்பின் கீழ் வண்ணங்களையும் மற்றும் கான்ட்ராஸ்ட்டையும் பயன்படுத்தி, ரசிப்பதற்கான ஒரு வாய்ப்பை ஃபிரேம் டிவி வழங்குகிறது. வெண்மையை மேலும் பளிச்சென்று ஆக்குகின்ற, கருப்பு வண்ணத்தை இன்னும் ஆழமாக அடர்த்தியாக்குகின்ற திறன் இதில் இருப்பதால், திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை HDR -ஐ கொண்டு அவற்றின் ஒவ்வொரு நுண்ணிய அம்சங்களையும் நுகர்வோர்கள் பார்த்து ரசிக்க முடியும்.
மோஷன் சென்சார்களுடன் ஸ்மார்ட் டிஸ்பிளே
தி ஃபிரேம் டிவி, ஆஃப் செய்யப்படும்போது, தொலைக்காட்சி சாதனத்தை கலை படைப்புகளது கலெக்ஷனின் காட்சியாக மாற்றுகின்ற, இதில் பொருத்தப்பட்டுள்ள மோஸன் சென்சார்களைப் பயன்படுத்தி ஆர்ட் மோடு இயங்கத் தொடங்குகிறது. இந்த நுண்ணறிவு மிக்க சென்சார்கள், தங்களது தனிப்பட்ட ஓவியம் / கலைப்படைப்புகளின் கலெக்ஷனிலிருந்து அல்லது ஆர்ட் ஸ்டோரிலிருந்து தங்களுக்குப் பிடித்தமான நிழற்படங்களை ஃபிரேம் டிவியில் காட்சிப்படுத்த அனுமதிக்கிறது.