*சமாரா திரை விமர்சனம் !!*
Mk சுபாகர்ன், அனுஜ் வர்கீஸ் வில்லியதத் தயாரித்து சார்லஸ் ஜோசப் இயக்கி வெளி வந்திருக்கும் படம் சமாரா.
இப்படத்தில் ரஹ்மான், பரத், சஞ்சனா திபு, பினோஜ் வில்லியா, ராகுல் மாதவ், கோவிந்த் கிருஷ்ணா, டினிஜ், விவியா சாந்த், வீர் ஆர்யன், தினேஷ் லம்பா, சோனாலி சுதன், டாரிஷ் சினாய், டாம் ஸ்காட், பிஷால் பிரசன்னா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
எதிர்காலத்தில் உலகநாடுகளுக்கு இடையே பயோ வார் எனப்படும் அனு ஆயுதம் மற்றும் கொடிய கிருமிகளை கொண்டு யுத்தம் நடத்தப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அப்படி ஒரு பயோ வாரை மையமாக வைத்து உருவாகியிருக்கும் படம் தான் ‘சமாரா’.
சர்வாதிகாரி ஹிட்லர் மிக கொடிய கிருமி ஒன்றை உருவாக்கி அதை போரில் பயன்படுத்த முடிவு செய்கிறார். ஆனால், அந்த கிருமியினால் ஏற்படும் பாதிப்பை பார்த்து ஹிட்லரே பயந்து போய் அதை போரில் பயன்படுத்தாமல் தவிர்த்து விடுவதோடு, முற்றிலுமாக அழித்தும் விடுகிறார். அப்படிப்பட்ட கிருமியை தற்போது மறு உருவாக்கம் செய்யும் தீவிரவாத குழு, அதனை பயன்படுத்தி இந்தியாவில் மிகப்பெரிய பயோ வாரை நடத்த முயற்சிக்கிறார்கள். அவர்களுடைய முயற்சியை முறியடிக்கும் பணியில் ஈடுபடும் நாயகன் ரகுமான், அதை எப்படி செய்கிறார். அதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பதை விறுவிறுப்பாக சொல்வது தான் ‘சமாரா’.
சமாரா என்பது கொடிய கிருமியை அழிப்பதற்கான மருந்து. ஆனால், அந்த மருந்தும் உலகில் ஒருவரிடம் மட்டுமே இருக்க, அவரும் அதை ரகசியமாக பாதுகாக்க, அவரிடம் இருந்து அந்த மருந்தை கைப்பற்றவும் ஒரு கும்பல் முயற்சிக்கிறது. ஒரு பக்கம் கொடிய கிருமி மறுபக்கம் அதனை அழிக்கும் மருந்து, இந்த இரண்டையும் வைத்துக்கொண்டு மேலும் பல பாகங்களாக படத்தை கொண்டு செல்லும் ரீதியில் கதை அமைக்கப்பட்டுள்ளது.
ரஹ்மான், பரத், சஞ்சனா திபு, பினோஜ் வில்லியா, ராகுல் மாதவ், கோவிந்த் கிருஷ்ணா, டினிஜ், விவியா சாந்த், வீர் ஆர்யன், தினேஷ் லம்பா, சோனாலி சுதன், டாரிஷ் சினாய், டாம் ஸ்காட், பிஷால் பிரசன்னா அனைவரும் கொடுத்த கதாபாத்திரம் ஏற்ற நடித்து இருக்கிறார்கள்.
லொகேஷனும், படப்பிடிப்பும் அத்தனை அற்புதம்.
சினு சித்தார்த்தின் ஒளிப்பதிவு பனி மலை எங்கும் பரந்து விரிந்து படம் நெடுக நிறைந்து இருக்கிறது. தீபக் வாரியரின் பாடல்களுக்கான இசையை விட கோபி சுந்தரின் பின்னணி இசையே படத்தின் உணர்ச்சியை அற்புதமாகக் கடத்தி இருக்கிறது.
பனிக்காட்டுக்குள் ஓநாய்க் கூட்டத்தை காவல்துறை துரத்திப் போகும் காட்சி திரில்லானது.
இந்தப் பட இயக்குனர் சார்லஸ் ஜோசப்பை நம்பி நம் முதல் நிலை ஆக்ஷன் ஹீரோக்கள் தாராளமாக தேதிகளை ஒதுக்கலாம். அப்படி ஒதுக்கினால் நல்ல அனுபவங்கள் நமக்குக் கிடைக்கக்கூடும்.
இருந்தாலும் தொடர்பில்லாத முதல் பாதிப் படத்தில் இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யம் கூட்டி இருந்தால் முழுமையாக ரசித்திருக்க முடியும்.
மொத்தத்தில்
தேசமும் பாசமும் கலந்த கலவை இது !