சலார் திரை விமர்சனம் !!

Share the post

சலார் திரை விமர்சனம் !!

ஹோம்பேலே பிலிம்ஸ் – விஜய் கிரகந்தூர் தயாரித்து பிரஷன் நீல் இயக்கி பிரபாஸ், பிருத்விராஜ் சுகுமாரன், ஸ்ருதி ஹாசன், ஜெகபதி பாபு, பாபி சிம்ஹா, ஈஸ்வரி ராவ், ஸ்ரேயா ரெட்டி, மைம் கோபி, ஜான் விஜய் இவர்கள் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் சலார்

இசை: ரவி பஸ்ரூர்

மூன்று பழங்குடி சமூகத்தினர் சேர்ந்து ஆட்சி நடத்தும் பகுதியான கான்சார்,

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும் இந்திய சட்ட திட்டங்களுக்கு கட்டுப்படாமல், தனியாக சட்டம் வகுத்துக்கொண்டு ஆட்சி நடத்தி வருகிறது.

அந்த தேசத்தின் அதிபர் சிவம் மன்னார் இறப்புக்கு பிறகு அரியணையில் ஏற வேண்டிய மற்றொரு பழங்குடி சமூகத்தின் தலைவரை மட்டும் இன்றி அவர்கள் சமூகத்தைச் சேர்ந்த ஒட்டு மொத்த மக்களையும் கொன்று விட்டு அரியணையில் அமர்கிறார் சிவம் மன்னாரின் மகன் ராஜம் மன்னார்.

அவர் உயிரோடு இருக்கும் போதே மீண்டும் கான்சாரில் பதவி போட்டி ஏற்படுகிறது.

ராஜம் மன்னாருக்கு பிறகு அவரது அரியணையில் அமர்வது யார்? என்ற போட்டியில், அவருடைய இரண்டாம் மனைவியின் மகனான பிரித்விராஜ் சுகுமாரனுக்கு உரிமை மறுக்கப்படுவதோடு, அனைவரும் ஒன்று சேர்ந்து அவரையும், அவருடைய ஆட்களையும் அழிக்க முடிவு செய்கிறார்கள்.

இதற்காக ஒவ்வொருவரும் தங்களது படைகளை தயார் செய்ய, பிரித்விராஜ் சுகுமாரன் மட்டும் எந்தவித படையையும் தயார் செய்யாமல், தனது நண்பன் பிரபாஸை உதவிக்கு அழைக்கிறார்.

நண்பனுக்காக எதையும் செய்யும் பிரபாஸ், தனிமனித ராணுவமாக நின்று தனது நண்பனுக்காக கான்சாரின் அதிகாரத்தை கைப்பற்றும் போரில் தீவிரம் காட்டும் போது, அவரைப் பற்றிய ஒரு உண்மை தெரிய வருகிறது. அது என்ன? அதன் பிறகு என்ன நடக்கப் போகிறது, என்பது தான் இரண்டாம் பாகம்.

கான்சார் தேசம் பற்றிய வரலாறு, பிரபாஸ் மற்றும் பிரித்விராஜ் சுகுமார் இடையிலான நட்பு இவற்றை சுற்றி நகரும் கதை, நண்பனுக்காக கான்சார் தேசத்தின் அதிகாரத்தை பிரபாஸ் கைப்பற்றுவதோடு முடிந்தாலும், பிரபாஸ் – பிருத்விராஜ் சுகுமாரன் இடையிலான நட்பு எப்படி பகையாக மாறியது?, நண்பனுக்காக எதையும் செய்யும் பிரபாஸ், ஸ்ருதி ஹாசனை காப்பாற்றுவதற்காக அதே நண்பனுக்கு எதிராக எதற்காக சண்டைப்போடுகிறர்,

ஸ்ருதி ஹாசனை பழிவாங்க நினைப்பவர்கள் யார்?

போன்ற கேள்விகளுக்கான பதில்கள் தான் இரண்டாம் பாகம்.

பிரபாஸுக்கு கொடுக்கப்படும் பில்டப்புக்கு அவர் நூறு சதவீதம் பொருந்துகிறார். ஆறடி உயரத்தில், வாட்டசாட்டமாக இருக்கும் அவருடைய ஒரு அடியே இடி போல் விழுவதை ஏற்றுக்கொள்ள முடிகிறது.

வில்லனாக நடித்திருக்கும் பிரித்விராஜ் சுகுமாரனுக்கு தான் நடிக்க அதிகம் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.

இரண்டாம் மனைவியின் மகன் என்பதால் சிறுவயதில் இருந்தே நிராகரிக்கப்பட்டு வரும், அவரை கான்சார் அதிகார வர்க்கத்தினர் ஒன்று சேர்ந்து அவமானப்படுத்தும் காட்சிகளின் போது தனது உணர்ச்சிகரமான நடிப்பை மிக இயல்பாக வெளிப்படுத்தி பாராட்டு பெறுகிறார்.

நாயகியாக நடித்திருக்கும் ஸ்ருதி ஹாசன், முகத்தில் பெரிய மாற்றம் தெரிவதோடு அவர் மீது ஒளிப்பதிவாளரும், மேக்கப் மேனும் அதிகம் கவனம் செலுத்தவில்லை

ராஜம் மன்னார் வேடத்தில் நடித்திருக்கும் ஜெகபதி பாபு, பாபி சிம்ஹா, பிரபாஸின் அம்மாவாக நடித்திருக்கும் ஈஸ்வரி ராவ், ராஜம் மன்னாரின் மகளாக நடித்திருக்கும் ஸ்ரேயா ரெட்டி, ஜான் விஜய், மைம் கோபி என மற்ற வேடங்களில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் கதாபாத்திரத்திற்கு ஏற்று நடித்து இருக்கிறார்கள்.

பவுன் கவுடாவின் ஒளிப்பதிவு ஆக்‌ஷன் காட்சிகளையும், பில்டப் காட்சிகள் அருமை !

ரவி பஸ்ரூரின் பின்னணி இசை சிறப்பு !

!புவனின் கேமரா மிரட்டி அருமை.

உஜ்வல் குல்கர்னி
படத்தொகுப்பு ப கவனம் தேவை

இயக்குநர் பிரசாந்த் நீல் . பாராட்டுக்கள்.

மொத்தத்தில்

சுவாரசியமாக உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *